அடி தூள்! புது வெர்னா கார்ல இவ்வளவு விஷயங்கள் புதுசா இருக்குதா? டாப் 5 விஷயங்களை இதான்!
ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா கார், இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் செடான் கார்களில் ஒன்று. இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா காரை அப்டேட் செய்து இன்று 2023 ஹூண்டாய் வெர்னா காராக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் காரின் உட்புறம், வெளிப்புறம், எனப் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பழைய மற்றும் புதிய காருக்கு இடையே உள்ள 5 வித்தியாசத்தைக் காணலாம் வாருங்கள்.
விலை: 2023 ஹூண்டாய் வெர்னா கார் ரூ10.89 லட்சம் முதல் ரூ17.37 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. என்ட்ரி லெவல் காரின்விலை ரூ50 ஆயிரம் பழைய காரை விட அதிகமாகியுள்ளது. அதே நேரம் டீசல் இன்ஜின் நிறுத்தப்பட்டதால் டாப் மாடல் காரான 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் டிசிடி காரின் விலை பழைய டாப் மாடல் காரை விட ரூ60 ஆயிம் குறைவாக இருக்கிறது.

இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது மார்கெட்டில் ரூ16.31 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. ஆனால் அதைவிட வெறும் ரூ1 லட்சம் அதிகம் கொடுத்தால் டாப் எண்ட் மாடலை வாங்கி விடலாம். இந்த கார் ஹோண்டா சிட்டி (ரூ11.49-ரூ15.97 லட்சம்), ஃபோக்ஸ் வேகன் விர்டூஸ் (ரூ11.32 -ரூ18.42 லட்சம்) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (ரூ11.29-18.40 லட்சம்) ஆகிய கார்களுடன் மார்கெட்டில் போட்டியிடுகிறது.
அளவுகள்: புதிய ஹூண்டாய் வெர்னா கார் பழைய மாடல் காரை விடச் சற்று பெரிய காராக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 95 மிமீ அதிகமான அளவிலும் அகலம் 36 மிமீ அதிகமான அளவிலும், வீல் பேஸ் 70 மிமீ அதிகமான அளவிலும், கொடுக்கப்பட்டுள்ளது. இது தான் இந்த செக்மெண்டிலேயே நீளமான வீல் பேஸ் கொண்ட காராகும்.
| Dimensions | New Verna | Old Verna |
| Length | 4,535 mm | 4,440 mm |
| Width | 1,765 mm | 1,729 mm |
| Height | 1,475 mm | 1,475 mm |
| Wheelbase | 2,670 mm | 2,600 mm |
| Bootspace | 528 litres | 480 litres |
மேலும் செக்மெண்டில்லேயே பெரிய மற்றும் அகலமான பூட் ஸ்பேஸ் கொண்ட காரும் இதுதான். பழைய மாடல் காரை விட 2023 ஹூண்டாய் வெர்னா காரில் 48 லிட்டர் அதிக பூட் வசதி இருக்கிறது. இரண்டு கார்களுமே அதே 1475 மிமீ உயரத்தைக் கொண்டிருக்கிறது.
செயல்திறன் : இன்ஜினில் தான் புதிய ஹூண்டாய் வெர்னா கார் முக்கியமான மாற்றத்தைப் பெற்றுள்ளது. பழைய மாடலில் உள்ள 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினிற்கு பதிலாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது போக ஏற்கனவே இருந்த 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு எம்பிஐ பெட்ரோல் இன்ஜின் அதே பவருடன் பொருத்தப்பட்டுள்ளது.
| Performance | New Verna | Old Verna |
| Engine | 1.5L NA Petrol / 1.5L Turbo Petrol | 1.5L / 1.0L / 1.5D |
| Power | 115 PS / 160 PS | 115 PS / 120 PS / 115 PS |
| Torque | 144 Nm / 253 Nm | 144 Nm / 172 Nm / 250 Nm |
| Gearbox | 6-speed MT & iVT / 6-speed MT & DCT | 6-speed MT & CVT / DCT / 6-speed MT & AT |
இந்த இரண்டு இன்ஜின்களும் அதிக மைலேஜ் தரும் இன்ஜின் அது மட்டுமல்லாமல் பிஎஸ் 6 2ம் கட்ட கட்டுப்பாடுகள் மற்றும் இ20 பெட்ரோலுக்கு ஏற்ற இன்ஜினாக உருவாக்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் டர்போ இன்ஜினை பொருத்தவரை 160 பிஎஸ் பவரையும், 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய கார்கள் வெறும் 150 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் இவோ பெட்ரோல் இன்ஜினைதான் பொருத்தியுள்ளனர். ஹூண்டாய் வெர்னா காரின் இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 8.1 நொடியில் எட்டி பிடிக்கும். 20.6 கி.மீ மைலேஜை வாரி வழங்கும்.
அம்சங்கள்: பழைய வெர்னா காரிலேயே ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது. 8 இன்ச் டச் ஸ்கிரீன், செமி டிஜிட்டல் கன்சோல், சைடு மற்றும் கர்டன் ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எல்இடி ஹைட்லைட், மிஷின்டு அலாய் வீல், இன் கார் கனெக்டெட் டெக், வென்டிலேட்டட் முன்பக்க சீட், லெதர் அப்ஹோல்சரி, அட்ஜெஸ்டபுள் ஹெட்ரெஸ்ட், ஆகிய அம்சங்கள் இருக்கிறது.
புதிய காரில் முக்கிய அம்சமாக அடாஸ் தொழிற்நுட்பம் இருக்கிறது. 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதிய ஸ்டியரிங் வீல், ஸ்மார்ட் டெயில்கேட், வென்டிலேட்டட் மற்றும் மசாஜ் சீட்களுடன் கூடிய பவர்டு சீட்கள்,
எலெக்ட்ரானிக் சன் ரூஃப், 64 கலர் ஆம்பியன்ஸ் லைட்டிங்,
இது போக பாதுகாப்பு அம்சத்திற்காக 6 ஏர்பேக், பல மொழிகளை சப்போர்ட் செய்யக்கூடிய அட்வான்ஸ்டு ப்ளூ லிங்க் கனெக்டிவிட்டி, வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.
டிசைன் : டிசைனை பொருத்தவரை நீண்ட ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் கார் தொடர்ந்து மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டே வருகிறது. இந்த முறையில் முக்கிய மாற்றமாக இந்த முறையும் டிசைனில் மார்டன் பிலாஷஃபியில் ஸ்போர்ட்டினஸ் டிசைன் மொழியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் புதிய வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பாடியில் ரேஷர் ஷார்ப் லைன் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய புதிய ஹூண்டாய் கார் ஸ்போர்ட்டி அவதாரில் இருக்கிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








