எவ்ளோ பெருசா விபத்து நடந்தாலும் தலைக்கு, இடுப்புக்கு ஒன்னும் ஆகாது.. பாதுகாப்பு வேற லெவல்ல கிடைக்கும்!
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான செடான் ரக கார் மாடலாக வெர்னா இருக்கின்றது. இந்த காரே பேராபத்தின்போது தன்னுள் பயணிக்கும் பயணிகளுக்கு அதீத பாதுகாப்பை வழங்கும் என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் தரமான மற்றும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட செடான் ரக காராக ஹூண்டாய் வெர்னா இருக்கின்றது. இந்த காரையே குளோபல் என்சிஏபி சமீபத்தில் மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த ஆய்விலேயே வெர்னா ஐந்திற்கு ஐந்து ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றிருக்கின்றது.

இதன் வாயிலாகவே ஹூண்டாய் வெர்னா மிகவும் பாதுகாப்பான கார் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஹூண்டாய் நிறுவனம் வெர்னா காரில் எண்ணற்ற பாதுகாப்பு அம்சங்களை வழங்கி இருக்கின்றது. 6 ஏர் பேக்குகள், இஎஸ்சி, ரியர் ஐசோஃபிக்ஸ் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் என ஏகப்பட்ட அம்சங்களை அது ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கி இருக்கின்றது.
இந்த அம்சங்களே ஹூண்டாய் வெர்னாவை அதிக பாதுகாப்பு திறன் கொண்ட காராக மாற்றி இருக்கின்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 34 புள்ளிகளுக்கு 28.18 புள்ளிகளை அந்த கார் பெற்றிருக்கின்றது. வெர்னாவின் உடற்கூடு மிகவும் உறுதியானதாக இருந்ததன் வாயிலாகவே இத்தனை புள்ளிகளை அக்காரால் பெற முடிந்திருக்கின்றது.

பொதுவாக விபத்துக்குள்ளாகும் கார்களில் டிரைவர் மற்றும் டிரைவருடன் அமரும் முன் பக்க பயணிக்கு அதிக ஆபத்தான சூழல் நிலவும். ஆனால், இந்த காரில் விபத்து ஏற்பட்டாலும் முன் பக்க பயணிகளுக்கு பெரிய அளவில் ஆபத்து ஏற்படாது என தெரிகின்றது. தலை, கழுத்து உள்ளிட்டவற்றிற்கு அதிக பாதுகாப்பு கிடைப்பதை ஹூண்டாய் வெர்னா உறுதி செய்திருக்கின்றது.
பெரியவர்களுக்கு மட்டுமில்லைங்க சிறியவர்களுக்கும் அதிக பாதுகாப்பை வழங்கும். சிறியவர்களுக்கான பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள ஆய்வில் 49 புள்ளிகளுக்கு 42 புள்ளிகளை அக்கார் பெற்றிருக்கின்றது. இதுதவிர இன்னும் பன்முக நிலைகளில் இந்த காரின் பாதுகாப்பு திறன் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. அவை அனைத்திலும் மிக சிறப்பான மதிப்பெண்களையே வெர்னா பெற்றிருக்கின்றது.

18 மாதங்கள் தொடங்கி 3 வயது குழந்தைகளுக்குகூட இந்த காரில் பாதுகாப்பு வளையம் அதிகமாக இருப்பதாக குளோபல் என்சிஏபி தெரிவித்து இருக்கின்றது. ஹூண்டாய் நிறுவனம் இந்த காரில் 30க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களை ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கி இருக்கின்றது. ஆறு ஏர்பேக்குகள், மும்முனை சீட் பெல்ட், சீட் பெல்ட் ரிமைண்டரே மிக முக்கியமான பாதுகாப்பு கருவிகளாக வெர்னாவில் காட்சியளிக்கின்றது.
இதுதவிர அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக தானாக பிரேக் பிடித்தல், வேகமாக செல்லும்போது தானாக கதவுகள் லாக் ஆகுவது, ஆட்டமேட்டிக் ஹெட்லேம்ப் மற்றும் விபத்து நேரங்களில் தானாகவே கதவுகளை திறத்தல் என எக்கசக்க வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுதவிர இன்னும் பல பாதுகாப்பு அம்சங்களை ஹூண்டாய் இந்த வெர்னா காரில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக வழங்கி இருக்கின்றது. இந்த காரில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைப் பெற வேண்டும், அதன் உயர்நிலை தேர்வை நீங்கள் நாட வேண்டும். அந்த வெர்ஷனில் இஎஸ்சி, ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், டிஸ்க் பிரேக்குகள், ஃப்ரண்ட் பார்க்கிங் சென்சார்கள் போன்றவை வழங்கப்பட்டு இருக்கும்.
அதுதவிர, டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், கார்னரிங் லேம்ப் மற்றும் ஹூண்டாயின் ஸ்மார்ட் சென்ஸ் உள்ளிட்ட அம்சங்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இப்போதைய நிலவரப்படி ஹுண்டாய் வெர்னா இந்தியாவில் ரூ. 10.96 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் வெர்னா 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருப்பதனால், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பாதுகாப்பான கார்களின் எண்ணிக்கை கூடுதலாகி இருக்கின்றது. ஏற்கனவே இந்தியாவின் பாதுகாப்பான கார்களாக டாடா நெக்ஸான், பஞ்ச், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 உள்ளிட்ட கார்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற சூழலில் தற்போது அவற்றின் வரிசையில் புதிதாக வெர்னா இணைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications
