சபரிமலையை விட ஹூண்டாய் ஷோரூமில் தான் இனி கூட்டம் படையெடுக்க போகுது! கார்களுக்கு தள்ளுபடி அறிவிப்பு!
2023ம் ஆண்டு நிறைவடையும் சூழ்நிலையில் தற்போது ஹூண்டாய் நிறுவனம் வருடக் கடைசிக்கான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட மாடல்களுக்கு ரூபாய் 3 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. முக்கியமாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வெர்னா காருக்கு ரூபாய் 45,000 தள்ளுபடி அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
வருடக்கடைசி வந்துவிட்ட நிலையில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் கார்களை விரைவாக விற்க பல்வேறு தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. இந்தியாவில் முக்கியமான காரணம் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனமும் தற்போது வருட கடைசி விற்பனைக்கான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. பொதுவாக இந்த காலகட்டத்தில் மிக அதிக தள்ளுபடிகள் அறிவிக்கப்படும். இருக்கும் ஸ்டாக்குகளை எல்லாம் விட்டுத் தீர்க்க வேண்டும் என இவ்வாறான தள்ளுபடிகளை அறிவிப்பார்கள்.

அதன்படி ஹுண்டாய் நிறுவனமும் ரூபாய் 3 லட்சம் வரையிலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. தனது என்ட்ரி லெவல் ஹாஷ்பேக் காரணம் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. வேரியன்டை பொறுத்து இது தள்ளுபடிகள் மாறுபடும் இந்த 48,000 தள்ளுபடி என்பது ரூபாய் 35,000 கேஷ் தள்ளுபடி ஆகவும் ரூபாய் 10,000 எக்சேஞ்ச் போனதாகவும் ரூபாய் 3000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக ஹோண்டா நிறுவனத்தின் 6 காருக்கு ரூபாய் 33,000 வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த 33,000 தள்ளுபடி என்பது சிஎன்ஜி வேரியண்டிற்காக மட்டும்தான் மற்ற வேரியன்ட்களுக்கு ரூபாய் 23,000 தள்ளுபடி அறிவித்துள்ளது. அடுத்ததாக ஐ20 மற்றும் ஐ20 என்லைன் ஆகிய கார்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. பேஸ்ஃலிப்டிற்கு முந்திய மாடல் கார்கள் டிசிடி வேரியன்டாக இருந்தால் அதற்கு ரூபாய் 40,000 வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

அதேபோல ஸ்போர்ட்ஸ் எம்டி வேரியன்டிற்கு ரூபாய் 35,000 வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. மற்ற அனைத்து புதிய பேஸ்ஃலிப்ட் மாடல் கார்களுக்கும் ரூபாய் 20000 வரை தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்ஃலிப்ட் வெர்ஷனிற்க்கு முந்திய ஐ2 என் லைன் காருக்கு ரூபாய் 50,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக புதிய தலைமுறை வெர்ணா காருக்கு ரூபாய் 45,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்கஸார் 7 சீட்டர் காருக்கு ரூபாய் 35 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெட்ரோல் வேரியன்ட்க்காக மட்டும் தான் டீசல் வேரியன்டிற்கு ரூபாய் 20 ஆயிரம் வரை எக்சேஞ்ச் போனஸ் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபோக ப்ரீமியம் எஸ்யூவி காரானது ரூபாய் 1.5 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது டீசல் வேரியண்ட் காருக்கு மட்டும் இந்த தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பதிலேயே அதிகபட்சமாக உண்டாய் நிறுவனத்தில் இருக்கும் ஒரே எலக்ட்ரிக் காரான ஹுண்டாய் கோனார் இபி காருக்கு அதிகபட்சமாக ரூபாய் 3 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் பிரீமியம் செக்மெண்டில் இருக்கும் என்பதால் இந்த காருக்கான விலையும் அதிகமாக இருக்கிறது. அதனால் தள்ளுபடியும் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் ரூபாய் 3 லட்சம் தள்ளுபடி என்பது மிகப்பெரிய அளவிலான தள்ளுபடி ஆகும்.
ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ள இந்த தள்ளுபடி என்பது ஒவ்வொரு ஷோரூம் டீலருக்கும் பொறுத்து மாறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் இங்கு தள்ளுபடி விலையில் காரை வாங்க விரும்பினால் முதலில் அருகில் உள்ள ஹூண்டாய் டீலர் ஷிப்களை தொடர்பு கொண்டு இந்த தள்ளுபடி நிலவரம் மற்றும் விபரம் குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள். அவர்களிடம் இருக்கும் ஸ்டாக்கை வைத்தது தள்ளுபடிகள் எல்லாம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் இந்த காலகட்டத்தில் வழங்கப்படும் கார்களுக்கான இன்சூரன்ஸ் மற்றும் உதிரி பாகங்கள் விலையிலும் குறைவான விலையை வழங்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதை வாடிக்கையாளர்கள் பேரம் பேசி பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த காலத்தில் அதிகமான தள்ளுபடி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும்.
காலண்டர் ஆண்டின் கடைசி மாதம் என்பதால் இந்த மாதத்தில் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையை கொண்டு வரவும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என பல முக்கிய நிகழ்வுகள் நெருங்குவதால் இந்த காலகட்டத்தில் விற்பனையை அதிகரிப்பதன் மூலம் நல்ல விற்பனை எண்ணிக்கையை பெற முடியும் என்பதால் இந்த தள்ளுபடிகளை நிறுவனம் அறிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வருடக் கடைசி வந்து விட்டதால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக தங்கள் வாகனங்களுக்கான தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. அதன்படி குண்டாய் நிறுவனமும் தனது வாகனத்திற்கான தள்ளுபடி அறிவித்துள்ளது. ரூபாய் மூன்று லட்சம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளதால் இந்நிறுவனத்தின் வாகனங்களை இந்த மாதம் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.


Click it and Unblock the Notifications









