இடது பக்கம் இயக்கும் வசதி கொண்ட காரை இறக்குமதி செய்ய முடியுமா? இதை பயன்படுத்த சட்டத்துல அனுமதி உண்டா?

இந்திய மோட்டார் வாகன சட்டம், இடது பக்கம் இயக்கும் (Left Hand Drive) வசதிக் கொண்ட காரை யாரும் வாங்கவோ, பயன்படுத்தவோ அனுமதிப்பதில்லை. இதனை மோட்டார் வாகன சட்டம் 1939ன் பிரிவு 180ம் தெளிவாக் கூறுகின்றது. இத்தகைய வாகனங்களை இந்தியாவில் பதிவு செய்வதற்கும் அனுமதி இல்லை.

பயன்படுத்தவே அனுமதி இல்லை எனும்போது இதற்கு (பதிவு செய்ய) மட்டும் எங்கிருந்து அனுமதி கொடுக்க போறாங்க என்கிற உங்களின் மைண்ட் வாய்ஸை கேட்க முடிகின்றது. ஆனால், குறிப்பிட்ட சில நபர்களுக்கு இந்தியாவில் இடது பக்க இயக்கும் வசதிக் கொண்ட காரை இறக்குமதி செய்து பயன்படுத்திக் கொள்ள குறிப்பிட்ட காலங்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

Left hand drive

குறிப்பாக, வெளிநாட்டு தூதர்கள் மற்றும் வெளிநாட்டு முக்கிய பிரதிநிதிகள் இந்திய வருகையின்போது அவர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதியின் பெயரில் இத்தகைய வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகின்றது. இதுதவிர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் சிறப்பு அனுமதியின்கீழ் இடது பக்க இயக்கும் வசதிக் கொண்ட கார்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுகின்றது.

ஆனால், சோதனை மற்றும் ஆர்-அண்டி-டி நோக்கங்களுக்கு மட்டுமே அரசாங்கம் இதற்கான அனுமதியை வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்குகின்றது. சில நிறுவனங்கள் இந்தியாவில் இருந்துக் கொண்டே வெளிநாடுகளுக்கான வாகனங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கின்றன. அந்த மாதிரியான நிறுவனங்களுக்கு உற்பத்தி நோக்கத்திற்காக மட்டும் இதற்கான அனுமதி வழங்கப்படுகின்றன.

Left hand car

ஆனால், அவற்றை இந்தியாவில் விற்க அவர்களால் முடியாது. அப்படினா இந்தியாவில் இடது கை பக்கம் இயக்கும் வசதிக் கொண்ட காரே பயன்பாட்டில் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். இதற்கான பதில் இருக்கின்றது என்பதே ஆகும். ஆமாங்க, இப்போதும், இந்தியாவில் இடது கை பக்கம் இயக்கும் வசதிக் கொண்ட கார்கள் இருக்கின்றன.

விண்டேஜ் காலத்தில் விற்பனைச் செய்யப்பட்ட பெரும்பாலான கார்கள் இடது கை பக்கம் இயக்கும் வசதிக் கொண்டவை ஆகும். அவையே தற்போது நம் நாட்டில் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால் காட்சிப்படுத்துவதற்காக மட்டுமே அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அரச குடும்பம் மற்றும் மிகப் பெரிய தொழிலதிபர்களிடமே அந்த வகை கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்தியாவில் இடது கை பக்கம் இயக்கும் வசதிக் கொண்ட காரை தவிர்த்துவிட்டு, ஏன் வலது பக்கம் ஓட்டும் வசதிக் கொண்ட வாகனங்களை தேர்வு செய்தது? என்கிற சந்தேகமும் உங்களில் ஒரு சிலருக்கு எழும்பியிருக்கக் கூடும். இதற்கான பதில், 1947 வரை இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களே இதற்கு காரணம்.

இவர்கள் ஆதிக்கம் செலுத்திய தென்னாப்பிரிக்கா போன்ற பிற நாடுகளிலும் வலது கை பக்கம் இயக்கும் வசதிக் கொண்ட வாகனங்களே பயன்பாட்டில் இருக்கின்றன. வேறு எந்த டெக்னிக்கல் காரணமும் இதற்கு பின்னால் இல்லை. அவர்கள் பழக்கப்படுத்திவிட்டு சென்றதையே நாம் இப்போதும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இது இருக்கட்டும் ஏன் ஒரே நேரத்துல வலது மற்றும் இடது பக்க டிரைவிங் வசதிக் கொண்ட காரை இந்தியாவில் பயன்படுத்தக் கூடாது என்கிற சந்தேகமும் உங்களுக்கு எழுந்திருக்கலாம்.. எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற ஓர் வசதியை நம்மால் பார்க்க முடியாது. ஆகையால், இந்த விஷயத்தில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. சாலை பாதுகாப்பை இந்தியா வலது பக்க டிரைவிங்கை மையப்படுத்தியே தயார் செய்திருக்கின்றது. ஆகையால், இந்த விஷயத்தில் இந்தியா எப்போதும் ரிஸ்க் எடுக்காது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வெகு விரைவில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கின்றது. தலைநகர் டெல்லியில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிககள் பங்கேற்க இருக்கின்றனர். அவர்களின் பயன்பாட்டிற்காக இந்தியாவில் இடது கை பக்கம் டிரைவிங் வசதிக் கொண்ட கார்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, August 18, 2023, 13:11 [IST]
English summary
In india we can use left hand drive car here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+