வாகனங்களில் இனி இந்த கருவி கட்டாயம்! மத்திய அரசு எடுத்த தடாலடி முடிவு!
மத்திய அரசு இனி இந்தியாவில் தயாராகும் குறிப்பிட்ட ரக வாகனங்களில் ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சத்தை கட்டாயம் பொருத்த வேண்டும் என்ற சட்ட விதிமுறையை வகுக்க திட்டமிட்டு வருகிறது. இது குறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சில விரிவான விவரங்களை வெளியிட்டுள்ளார். அதை விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் நாளுக்கு நாள் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நிகழும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையால் உயிர் சேதமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியமாக வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்த பல்வேறு யோசனைகளை செய்து வருகிறது.

அதன் ஒரு அங்கமாக தற்போது மத்திய அரசு இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் ஒரு குறிப்பிட்ட வாகனங்களில் புதிய பாதுகாப்பு அம்சத்தை கட்டாயமாக பொருத்த வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வருவதற்கான ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அந்த வாகனங்கள் விற்பனைக்கு வரும்போது இன்பில்டு கோல்யிஷன் வார்னிங் சிக்னல் கொடுக்கும் அம்சங்கள் கொண்ட வாகனங்களாகவே விற்பனைக்கு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்திற்கு மத்திய அரசு மூவிங் ஆஃப் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் என பெயரிட்டுள்ளது. இதை பொருத்துவதன் மூலம் சாலையில் உள்ள பாதசாரிகள் மற்றும் சைக்கிள் பயணிகளுக்கு விபத்து ஏற்படுவது முற்றிலும் தவிர்க்கப்படும் என்றும், இந்த தொழில்நுட்பம் பல உயிர்களை காப்பாற்றும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கான சட்ட வரைவில் வாகனத்திற்கான அங்கீகாரம் கொடுக்கும் போது மூவிங் ஆஃப் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் என்ற கருவி அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்பு அதற்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் ஒரு குறிப்பிட்ட வாகனத்திற்கு சுற்றி அருகே வரும் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்களின் தகவல்களை டிரைவரின் டேஷ்போர்டில் காண்பிக்கும் அல்லது எச்சரிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கான ஆலோசனை தான் தற்போது நடந்து வருகிறது. இதுவரை இந்த சட்டம் அமலுக்கு வரவில்லை. வல்லரபில் ரோடு யூசர் என்ற பிரிவை சேர்ந்தவர்கள் இனி விபத்தில் சிக்காமல் தவிர்க்க இந்த தொழில்நுட்பம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் நடந்து சென்றாலோ அல்லது சைக்கிளில் சென்றாலும் அவர்கள் வல்லரபில் ரோடு யூசர்களாகவே கருதப்படுவார்கள்.

அவர்கள் பாதுகாப்பு குறைவான வாகனங்கள் அல்லது பாதுகாப்பே இல்லாமல் தான் அவர்கள் ரோடுகளில் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட வாகனம் மோதும் போது விபத்து பெரிய அளவில் ஏற்படுகிறது. இதனால் உயிர் சேதம் அதிகமாக நடக்கிறது. இது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மெதுவாக செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் விபத்தில் சிக்கும்போது எம்2 எம்3, என்2 ற்றும் என்3 ரக வாகனங்களில் இப்படியான பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்கள் அதிகம் விபத்துகளில் சிக்குகின்றனர். இந்த கருவிகள் இப்படியான விபத்துகளை தடுக்க பெரும் அளவில் உதவுகிறது. இந்த தொழில்நுட்பம் விபத்துக்களை முன்கூட்டியே டிரைவரை எச்சரிப்பதன் மூலம் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த கருவிகள் நீளமான பஸ்கள் பெரிய டிரக் லாரிகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட நீளமான வாகனங்களில் பொருத்த சட்டம் இயற்றப்படும் என தெரிகிறது. இந்த சட்டம் எப்பொழுது முதல் நடைமுறைக்கு வரும் என்ற உறுதியான தகவல்கள் இல்லை. ஏற்கனவே வாகனங்களில் 6 ஏர்போக்குகளை கட்டாயமாக்கப்பட்டுள்ள சட்டம் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ளது. அதற்குள் இந்த சட்டமும் வரைமுறைப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்படும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 4,61,312 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் ஒரு லட்சத்து 68,461 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 4.45 லட்சம் பேர் படுகாயங்கள் அடைந்துள்ளனர். அதிக வேகமாக செல்வதுதான் இந்தியாவில் நடந்த பெரும்பாலான சாலை விபத்துகளுக்கான காரணம். இதுபோக தவறான பாதையில் வாகனம் ஓட்டுவது, மற்றொரு முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்த விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு இவ்வாறான நடவடிக்கைகளை எல்லாம் எடுத்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு ஒரு பகுதியாக தான் இந்த பாதுகாப்பு கருவிகளை கட்டாயம் பொருத்த வேண்டும் என்ற சட்டமும் அமலுக்கு வர இருக்கிறது. இது நிச்சயம் விபத்தில் இந்தியாவை உருவாக்க உதவும்


Click it and Unblock the Notifications
