இந்திய சுதந்திரத்தை பாதுகாத்துவரும் இராணுவத்தில் கார்களுக்கு பஞ்சமே கிடையாது!! மார்க்கெட்டில் கூட கிடைக்காதவை!

எந்தவொரு நாட்டுக்கும் இராணுவம் என்பது அவசியமானது. நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் அறம் தவறும்போது அதனை எதிர்த்து கேள்விக் கேட்கக்கூடிய ஓர் அங்கீக்கரிக்கப்பட்ட அமைப்பாக இராணுவம் விளங்கியதை கடந்த காலங்களில் இருந்து பல்வேறு நாடுகளில் பார்த்துள்ளோம். நல்லவேளையாக அத்தகைய எந்த சூழலும் நம் இந்தியாவில் சுதந்திரத்துக்கு பின் உருவாகவில்லை. நாட்டின் சுதந்திரத்தை பற்றி பேசும்போது, ஒன்று நினைவிற்கு வருகிறது... இந்தியா நாளை (ஆகஸ்ட் 15இல்) 77வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளது.

பல ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வந்த ஆங்கிலேயர்களிடம் அகிம்சை வழியிலும், பல்வேறு போராட்டங்கள் மற்றும் அடக்குமுறை எதிர்ப்புகள் மூலமாக பெற்ற சுதந்திரத்தை பெருமைப்படுத்த வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. அதேநேரம், சுதந்திரம் பெற்று அதனை இந்த 77 வருடங்களாக பாதுகாத்து வரும் இந்திய இராணுவத்தை பாராட்டவும் நாம் மறந்துவிடக் கூடாது.

indian army used iconic cars

இராணுவம் வாகனங்கள் என்றதுமே நம் நினைவிற்கு வருவது, ஆற்றல்மிக்க டேங்குகளும், முரட்டுத்தனமான தோற்றத்திலான லாரிகளும் மற்றும் ஜூப் போன்ற இதர இராணுவ வாகனங்களும் தான். மார்க்கெட்டில் பிரபலமான சில கார்களும் இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. சில கார்கள் மார்க்கெட்டில் நீண்ட காலத்திற்கு நிலைக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் இந்திய இராணுவத்தில் இப்போதும் பயன்பாட்டில் இருக்கலாம். அத்தகைய வாகனங்களை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

மாருதி ஜிப்ஸி (Maruti Gypsy), அம்பாசிடரை போன்று ஒரு சமயத்தில் போலீஸ் வாகனம் என்றாலே அது மாருதி ஜிப்ஸி ஆகவே சினிமா திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். அணுகுவதற்கு மிகவும் எளிமையான வாகனமாக இருந்ததாலும், மிகவும் பெரிய உட்பக்க கேபினை கொண்டிருந்ததாலும், போலீஸாரின் போக்குவரத்துக்கு பரவலாக பயன்படுத்தப்பட்டது. அதேபோல், எந்தவொரு சாலைக்கும் எடுத்து செல்லக்கூடிய வாகனமாக உருவாக்கப்பட்டதால் சுமார் 31,000க்கும் அதிகமான ஜிப்ஸி வாகனங்களை இராணுவத்திலும் பயன்படுத்தினர்/ சிலவற்றை இப்போதும் பயன்படுத்துகின்றனர்.

indian army used iconic cars

டாடா சுமோ 4x4 (Tata Sumo 4x4), இந்திய இராணுவத்தினருக்காக மட்டுமே 4x4 டிரைவ் சிஸ்டத்துடன் டாடா மோட்டார்ஸ் உருவாக்கிய சுமோ வாகனம். குறிப்பாக, இந்திய இராணுவத்தின் மருத்துவ துறையில் அதிகளவில் சுமோ 4x4 கார்கள் பயன்படுத்தப்பட்டன.
பொது பயன்பாட்டில் இருந்த சுமோ கார்களில் 4x2 டிரைவ் சிஸ்டம் மட்டுமே கொடுக்கப்பட்டது.

ஹிந்துஸ்தான் அம்பாசிடர் (Hindustan Ambassador), இந்த காரை பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். 'கார்'க்கு மற்றொரு பெயரே அம்பாசிடர் என நினைத்தவர்களும் ஒரு காலத்தில் இருந்தனர். இராணுவத்தில் முக்கியமான போரில் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு, எந்தவொரு பாதையிலும் இயக்கிச் செல்லக்கூடிய கார் அம்பாசிடர் இல்லை. என்றாலும், வலிமையான உடற்கூடு மற்றும் விசாலமான கேபின் இந்த காரின் பயன்பாட்டை இந்திய இராணுவத்தில் கொண்டிருந்தது.

indian army used iconic cars

டாடா சஃபாரி ஸ்டோர்ம் (Tata Safari Storme), இந்திய இராணுவம் கடந்த காலங்களில் இருந்து பயன்படுத்திய மிகவும் ஆற்றல்மிக்க எஸ்யூவி கார்களுள் ஒன்றாக இதனை கூறலாம். முதற்கட்டமாக 3,192 சஃபாரி ஸ்டோர்ம் ஜிஎஸ்800 கார்களை உருவாக்கி தரும் ஆர்டரை டாடா மோட்டார்ஸ் பெற்றது. இந்த ஜிஎஸ்800 கார்களில் பொருத்தப்பட்ட என்ஜின் மிகவும் அதிகப்படியான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இராணுவத்துக்காக என பிரத்யேகமாக மாடிஃபை செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது.

மஹிந்திரா ஸ்கார்பியோ 4x4 (Mahindra Scorpio 4X4), இந்திய இராணுவம் லேட்டஸ்டாக ஆர்டர் செய்துள்ள கார். ஸ்கார்பியோ-என் என்ற மாடர்ன் ஸ்கார்பியோ மாடல் விற்பனையில் இருந்தாலும், பழைய தோற்றம் கொண்ட ஸ்கார்பியோ கிளாசிக் கார்கள் 1,470ஐ நம் நாட்டு இராணுவம் ஆர்டர் செய்துள்ளது. 4x4 டிரைவ் சிஸ்டத்துடன் இராணுவ துறையால் கேட்கப்பட்டுள்ள ஸ்கார்பியோ கிளாசிக் கார்கள் கொஞ்சம் கொஞ்சமாக டெலிவிரி செய்யப்பட்டு வருகின்றன.

indian army used iconic cars

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஆட்டோமொபைல் துறை உடன் எந்தவொரு துறையையும் பிரிக்க முடியாது எனலாம். ஏனெனில் அந்த அளவிற்கு ஆட்டோமொபைல் வாகனங்களின் தேவை அனைத்து துறைகளிலும் ஊறிப் போய் உள்ளது. இதில் இராணுவம் மட்டும் என்ன விதிவிலக்கா... மேற்கூறப்பட்ட கார்கள் மட்டுமின்றி, வேறு சில கார்களும் நம் நாட்டு இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தொடரும்... எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்களையும் இந்திய இராணுவம் பயன்படுத்தும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Monday, August 14, 2023, 15:33 [IST]
English summary
Independence day special indian army iconic cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X