இந்தியாலதான் இந்த காரோட விலை கோடி ரூபா... துபாய்ல எல்லாம் லட்சத்த போட்டாலே இந்த காரை வாங்கிட முடியும்!

உலக நாடுகளில் விலை குறைவாக கிடைக்கும் ஒரு சில பொருட்கள் இந்தியாவில் மிக காஸ்ட்லியானதாக இருக்கும். இதற்கு பின்னால் மறைந்திருக்கும் மிகப் பெரிய காரணம், வரி. ஆமாங்க, நம் நாட்டில் வசூலிக்கப்படும் மிக அதிக வரியே பல பொருட்களின் விலை உச்சத்தில் இருக்க காரணமாக இருக்கின்றது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியாவில் பல மடங்கு அதிக வரி வசூல் செய்யப்படுகின்றது. இதன் விளைவாகவே சில ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை நாம் நம்ப முடியாத அளவிற்கு மிக அதிகமாக இருக்கின்றது. இதேபோல் வாகனங்கள் சிலவற்றின் விலையும் உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மிக மிக அதிகமானதாக இருக்கின்றன.

Indias Expensive Cars How Much Cheaper in Dubai

அந்தவகையில், துபாய்-இந்தியா இடையே நிலவும் வாகனங்களுக்கான விலை வித்தியாசத்தையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். முக்கியமான சில ஆடம்பர கார் மாடல்களின் இந்திய விலையையும், துபாய் விலையையும் உதாரணத்திற்காக ஒப்பீடு செய்து இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த விரிவான தகவலைக் காணலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன், இந்தியாவில் ரூ. 7.2 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், துபாயிலோ இது மிகவும் மலிவான விலைக் கொண்ட காராக காட்சியளிக்கின்றது. இந்தியாவில் தன்னுடைய வருகையை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த பின்னர் ரோல்ஸ் ராய்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் எஸ்யூவி ரக கார் கல்லினன் ஆகும்.

Indias Expensive Cars How Much Cheaper in Dubai

இந்திய தொழிலதிபர்கள் மற்றும் திரை நட்சத்திரங்களின் மிகவும் பிரியமான சொகுசு காராக இது காட்சியளிக்கின்றது. அம்பானி குடும்பத்தினர், அஜய் தேவ்கன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். வி12 6.75 லிட்டர் டர்போசார்ஜட் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Indias Expensive Cars How Much Cheaper in Dubai

ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VIII, இந்த காரும் இந்தியாவைக் காட்டிலும் துபாயில் மிக மிக குறைவான விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 4.6 கோடியே அதன் துபாய் விலை ஆகும். ஆனால், இந்தியாவில் இதன் மதிப்பு ரூ. 9.8 கோடி ஆகும். கிட்டதட்ட 4 கோடி ரூபாய் விலை வித்தியாசம் இந்தியா, துபாய் இடையே தென்படுகின்றது. இதன் காரணமாகவே இந்தியாவில் இக்காரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக மிக குறைவாக உள்ளது.

Indias Expensive Cars How Much Cheaper in Dubai

பென்ட்லீ பென்டேகா டபிள்யூ12, இந்த சொகுசு காரின் துபாய் விலை ரூ.2.32 கோடி ஆகும். இந்தியாவிலோ இதே கார் மாடல் ரூ.4.12 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. துபாயைக் காட்டிலும் 100 சதவீதம் கூடுதல் விலையில் இந்த கார் இந்தியாவில் விற்கப்படுகின்றது. 4.12 கோடி ரூபாய் என்பது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை இன்னும் அதிகமாக இருக்கும். இந்த காரும் அம்பானியிடம் பயன்பாட்டில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Indias Expensive Cars How Much Cheaper in Dubai

மெக்லாரன் ஜிடி, இந்த காரின் இந்திய விலை ரூ. 3.72 கோடி ஆகும். அதேவேளையில் துபாயில் இந்த கார் 1.94 கோடி ரூபாய் என்கிற மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. கடந்த ஆண்டின் இறுதியிலேயே மெக்லாரன் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வருகையை பதிவு செய்தது.

தற்போது சிபியூ வாயிலாக தனது கார்களை நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இதற்கு வரி என்பது நாம் முடியாத அளவிற்கு வசூல் செய்யப்படுகின்றது. இதன் காரணத்தினாலேயே துபாய், இந்தியா இடையே இந்த அளவு மிகப் பெரிய விலை வித்தியாசம் தென்படுகின்றது.

ஒரு சில நபர்களே இந்த ஆடம்பர இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யனும் ஒருவர் ஆவார். இந்த கார் அவருக்கு பரிசாக கிடைத்த ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. டி-சீரிஸ் உரிமையாளர் பூஷன் குமாரே இந்த காரை நடிகருக்கு பரிசாக வழங்கினார்.

Indias Expensive Cars How Much Cheaper in Dubai

லம்போர்கினி உருஸ், இந்தியாவில் ரூ.3.15 கோடி என்கிற உச்சபட்ச விலையில் விற்கப்பட்டு வருகின்றது. உலகளவில் இந்த சொகுசு கார் மாடலுக்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. துபாயில் இதன் மதிப்பு 2.2கோடி ரூபாய்க்கும் குறைவு என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்திய திரை நட்சத்திரங்களின் ஃபேவரிட் சொகுசு கார் மாடலாக இது மாறி இருக்கின்றது. இந்த காரால் வெறும் 3.6 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை எட்ட முடியும்.

Indias Expensive Cars How Much Cheaper in Dubai

போர்ஷே 911 992 டர்போ, இந்த கார் இந்தியாவைக் காட்டிலும் துபாயில் பாதிக்கு பாதி குறைவான விலையில் விற்கப்படுகின்றது. 3.13 கோடி ரூபாய்க்கு இந்த கார் விற்கப்பட்டு வரும்நிலையில், துபாயிலோ அதன் மதிப்பு ரூ. 1.52 கோடியாக மட்டுமே இருக்கின்றது. இந்த காரை இந்தியாவில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக குறைவே.

Indias Expensive Cars How Much Cheaper in Dubai

ஜீப் கிராண்ட் செரோக்கி டிராக்ஹாக், இந்தியாவில் ரூ. 1.3 கோடி அதிகமான விலையில் விற்கப்படும் இந்த கார் துபாயில் சீப் விலை சொகுசு காராக இருக்கின்றது. அங்கு ரூ. 65 லட்சமே அதன் மதிப்பாகும். எம்எஸ் தோனி போன்ற முன்னணி பிரபலங்கள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

சொகுசு கார்களுக்கு இந்தியாவில் முன்பைக் காட்டிலும் இப்போது டிமாண்ட் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கு சாலையில் அதிகரித்துக் காணப்படும் சொகுசு கார்களின் எண்ணிக்கையே சான்றாக இருக்கின்றது. இந்த நிலை இந்தியர்கள் அதிக வரியை பொருட்படுத்தாமல் சொகுசு கார்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கி இருக்கின்றனர் என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 30, 2023, 15:26 [IST]
English summary
India dubai luxury car price difference
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X