இந்தியாவோட மோசமான சாலைக்கு ஏற்ற கார்கள்.. இதுல ஏதாவது ஒன்னு இருந்தாகூட போதும் ஆஃப்-ரோடை அசால்டு பண்ணிடலாம்!

புதிய வாகனம் வாங்கும்போது நாம் செலுத்தக் கூடிய கட்டணங்களில் மிக முக்கியமான ஒன்றாக சாலை வரி இருக்கின்றது. இந்த கட்டணத்தை எதுக்கு அரசு நம்மிடம் இருந்து வாங்குகின்றது என்று புலம்புபவர்களே நம்மில் அதிகம். நகரம், கிராமம் என எங்குமே நல்ல சாலையை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாக இருக்கின்றது.

அப்படியே புதிய சாலை போடப்பட்டாலும் அவை மாதங்களைத் தாக்குப்பிடிப்பதே பெரிய விஷயமாக இருக்கின்றது. அடுத்த ஓரிரு மாதங்களில் அவை பெயர்ந்து வந்து விடுகின்றன. குறிப்பாக, ஒரு மழையைக் கூட சாலைகள் தாங்குவதில்லை. இதனாலேயே நாட்டின் பல்வேறு பகுதிகள், குறிப்பாக நகர்புற பகுதிகள் குண்டும் குழியுமான சாலைகள் நிரைந்ததாகக் காட்சியளிக்கின்றன.

Top 5 affordable off roader cars

இத்தகைய சாலைகளில் பயணிக்கும்போது நம்முடைய வாகனத்திற்கும், நமக்கும் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆனால், எப்பேர்பட்ட சாலையாக இருந்தாலும் நாங்கள் சமாளிச்சுருவோம் என்கிற திறன் கொண்ட வாகனங்களும் இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றன. அவை என்ன? அவற்றின் சிறப்புகள் என்ன? என்பது போன்ற அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny): இந்தியாவில் மாருதி சுஸுகி சமீபத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்த மிக சிறந்த ஆஃப்-ரோடர் எஸ்யூவி ரக காராக இது இருக்கின்றது. மஹிந்திராவின் தார் எஸ்யூவிக்கு போட்டியாக இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

Jimny

இதன் ஆரம்ப விலை ரூ. 12.74 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் ஆஃப்-ரோடுகளை சமாளிப்பதற்காக 4X4 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சமே ஜிம்னியை மிக சிறந்த ஆஃப்-ரோடராக மாற்றி இருக்கின்றது. நீர் நிறைந்த சாலை, கற்கள் மற்றும் குண்டும்-குழியுமான சாலை என எதுவாக இருந்தாலும் இந்த கார் அசால்ட் செய்துவிடும்.

இதைத்தொடர்ந்து மிக சிறந்த இழுவை திறனை வழங்குவதற்காக 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் எஞ்ஜின் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் 103.4 பிஎச்பி பவரையும், 134.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Thar

மஹிந்திரா தார் (Mahindra Thar): ஜிம்னியை விட குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஆஃப்-ரோடர் எஸ்யூவி காராக தார் இருக்கின்றது. இந்த கார் ஜிம்னிக்கு சற்றும் சளைத்தது அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் ஆரம்ப விலை ரூ. 10.55 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. மஹிந்திரா நிறுவனம் இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு ஆப்ஷன்களையும் வழங்குகின்றது.

ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha): மேலே பார்த்த இரு கார் மாடல்களுக்கும் போட்டி அளிக்கும் இந்திய சந்தையில் இந்த கார் விற்பனையில் இருக்கின்றது. இந்த காரால் ஆழமான நீர் நிலைகள், சகதி நிரம்பிய சாலை என எதுவாக இருந்தாலும் அசால்டு செய்துவிடும். இதற்கேற்ப இதன் எக்சாஸ்ட் சிஸ்டம் மேற்கூரையை தாண்டி நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.

Force gurkha

இதுதவிர இன்னும் பல அம்சங்களை இந்த காரில் ஃபோர்ஸ் மிக தாராளமாக வழங்கி இருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 15.10 லட்சம் ஆகும். இந்த காரில் 2.6 லிட்டர் டீசல் மோட்டார் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது. 89.8 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை இது வெளியேற்றும். இந்த எஞ்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனே வழங்கப்படுகின்றது.

இசுஸு டி மேக்ஸ் வி கிராஸ்: இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் மிக சிறந்த மற்றும் மலிவு விலை பிக்-அப் டிரக்காக இது இருக்கின்றது. இதனாலும், எந்த மாதிரியான கரடு-முரடான சாலையாக இருந்தாலும் சமாளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் சூப்பரான இயக்கத்திற்காக 1.9 லிட்டர் டீசல் எஞ்ஜின் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Isuzu v cross

இது அதிகபட்சமாக 161 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த வாகனத்தை பயணிகள் மற்றும் சரக்கு ஏற்றி செல்லும் வாகனமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் ஆரம்ப விலை ரூ. 19.5 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார்கள் மிக சிறந்த ஆஃப் ரோடு வாகனங்கள் ஆகும். பட்ஜெட் விலையைக் கொண்டதாக இவைக் காட்சியளிக்கின்றன. இதில், நாம் பயணிக்கும் கரடு-முரடான பாதையில் நாம் பயணிக்கின்றோம் என்பதே தெரியாது. அத்தகைய சிறந்த ஆஃப்-ரோடர் கார்களே இவை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 18, 2023, 10:59 [IST]
English summary
India s best and budget friendly off road cars list
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X