கை கோத்துட்டாங்க! அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியா செய்ய போகும் காரியம்! வயித்தெரிச்சலில் சீனா, பாகிஸ்தான்!

பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்க கூடிய வாகனங்கள் சுற்றுச்சூழலை மிக கடுமையாக மாசுபடுத்தி வருகின்றன. எனவே காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னையை குறைக்க வேண்டும் என்பதற்காக, உலக நாடுகள் அனைத்தும் மிக வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) மாறி கொண்டுள்ளன.

இதில் நமது இந்தியாவும் ஒன்று. குறிப்பாக எலெக்ட்ரிக் பஸ்களை (Electric Buses) மிக அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இந்தியா விரும்புகிறது. இந்த லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக அமெரிக்கா உடன் இந்தியா தற்போது கை கோர்த்துள்ளது. இந்த கூட்டணியின் மூலம் இந்திய சாலைகளில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளன.

Eric Garcetti Electric Bus

'இந்திய சாலைகளில் எலெக்ட்ரிக் பஸ்களின் அறிமுகத்தை விரைவுபடுத்துதல்' என்ற தலைப்பில், நிகழ்ச்சி ஒன்று புது டெல்லியில் நடைபெற்றது. இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தியா உருவாக்கிய எலெக்ட்ரிக் பஸ்ஸில் வந்து அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது கவனம் பெற்றது.

டெல்லி போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் எலெக்ட்ரிக் பஸ் ஒன்றில் அவர் வந்தார். இதுகுறித்து எரிக் கார்செட்டி கூறுகையில், ''இந்திய எலெக்ட்ரிக் பஸ்ஸில் பயணம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. எலெக்ட்ரிக் பஸ்களால் உலகையே மாற்ற முடியும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எலெக்ட்ரிக் பஸ்கள் அமைதியானவை. சுத்தமானவை.

அத்துடன் கார்பன் உமிழ்வை அவை குறைக்கின்றன. இதன் மூலம் எதிர்காலத்தில் இந்த உலகில் நாம் நன்றாக வாழக்கூடிய வாய்ப்பை அவை நமக்கு வழங்குகின்றன. எனவேதான் இந்திய சாலைகளில் அதிக எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்வதற்காக, இந்திய அரசில் உள்ள நண்பர்களுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றி வருகிறது.

இந்த கூட்டணியின் மூலமாக, இந்திய சாலைகளில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்படும்'' என்றார். இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் அனைத்தும் இந்தியாவிலேயே உருவாக்கப்படும். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். எனவே இந்த செய்தி, இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம், தேசிய எலெக்ட்ரிக் பஸ் திட்டத்தை (National Electric Bus Programme - NEBP), மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன் மூலம் வரும் 2027ம் ஆண்டிற்குள், இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில், படிப்படியாக 50 ஆயிரம் புதிய எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியிருப்பது எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கான நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. எலெக்ட்ரிக் பஸ்கள் மட்டுமல்லது, எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மற்றும் எலெக்ட்ரிக் டூவீலர்களின் (Electric Two wheelers) பயன்பாடும் இந்தியாவில் வேகமாக அதிகரித்து கொண்டு வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 21, 2023, 14:07 [IST]
English summary
India us join hands to launch 10000 electric buses on indian roads read full details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+