ரூ4.87 லட்சம் விலை குறைவாக விற்பனையாகும் ஜிம்னி கார்! எங்கே தெரியுமா?
மாருதி நிறுவனத்தின் ஜிம்னி காரின் விலை இந்திய விலையிலிருந்து ரூ 4.87 லட்சம் குறைவாக ஜப்பானில் விற்பனையாகி வருகிறது. சுஸூகி நிறுவனம் தனது தாய்நாட்டில் குறைவாக விற்பனை செய்யும் காரை இந்தியாவில் அதிக விலையில் விற்பனை செய்கிறதா? இதுகுறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாருதி நிறுவனம் தனது 5 டோர் ஜிம்னி காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் 3 டோர் வெர்ஷனாக ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும் இந்தியாவில் விற்பனையாகவில்லை. முழுவதும் ஏற்றுமதியாகி மட்டுமே வந்தது. தற்போது இதன் 5 டோர் வெர்ஷனை இந்தியாவில் முதன்முறையாக அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்த ஜிம்னி கார் விற்பனைக்கு வரும்போது இது இந்தியாவில் நேரடியாக மஹிந்திரா நிறுவனத்தின் தார் காருக்கு போட்டியாகக் களமிறங்கியது. ஆனால் இதன் விலையை ஒப்பிடும்போது பேஸ் வேரியன்டிலேயே தார்க்காரின் விலையை விட ரூ 2.2 லட்சம் வரை அதிகமான விலையில் அறிமுகமானது. இந்த விலை விமர்சகர்கள் மத்தியில் விவாதத்திற்கு உள்ளானது.
தற்போது மற்றொரு புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. மாருதி நிறுவனத்தின் ஜிம்னி காரின் விலை ஜப்பானில் விற்பனையாகும் ஜிம்னி காரின் விலையை விட ரூ 4.87 லட்சம் வரை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது இந்தியாவில் அதிகமான விலையிலும் ஜப்பானில் குறைவான விலையிலும் இந்த கார் விற்பனையாகி வருகிறது.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. மாருதி நிறுவனம் ஜப்பானில் விற்பனை செய்யும் ஜிம்னி காரை அந்நாட்டிலேயே உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இந்தியாவில் தயாரித்து அதை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்யவில்லை. அதேபோல இந்தியாவிலும் இந்த கார் இந்தியாவிலேயே முற்றிலுமாக தயாரிக்கப்படுகிறது. வேறு எந்த நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவில்லை.
மேலும் இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் ஜப்பானில் இந்த கார் 3 டோர் வெர்ஷன் காராக விற்பனையாகிறது. இந்தியாவில் இந்த கார் 5 டோர் வெர்ஷன் காராக விற்பனை ஆகிறது. இது மட்டுமல்ல ஜப்பானில் விற்பனையாகும் ஜிம்னி காரில் சுஸூகி சேஃப்டி சப்போர்ட் அடாஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது இந்திய காரில் அந்த சிஸ்டம் இல்லை.

ஜப்பானைப் பொருத்தவரை 3 டோர் ஜிம்னி கார் மொத்தம் மூன்று விதமான வேரியன்ட்களில் விற்பனையாகிறது. எக்ஸ் ஜி, மிட் எக்ஸ் எல், டாப் எக்ஸ் சி ஆகியவற்றில் விற்பனையாகிறது. இது மூன்று வேரியண்டிலும் 0.65 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
64 பிஎஸ் பவரையும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் டர்போ இன்டர் கூலர் இன்ஜினாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் மொத்தம் அர்பன்,சப் அர்பன்,ஹைவே என்ற மூன்று டிரைவிங் மோட்கள் இருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 17.5 கிலோமீட்டர் மைலேஜை வாரி வழங்கும் திறன் கொண்டது. இது மட்டுமில்லாமல் இந்த காரில் 4X4 டிரான்ஸ்பர் கேஸ் எல்எஸ்டி, ஆகிய அம்சங்கள் இருக்கிறது.
இந்தியாவில் விற்பனையாகும் ஜெமினி காரில் 4 சிலிண்டர் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 102 பிஎச்பி பவரையும் 134 என்எம் டார்ச் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடனும், 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடனும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜினில் டர்போ சார்ஜிங் மற்றும் டர்போ இன்டர்கூலர் ஆகிய அம்சங்கள் கிடையாது. மேலும் டிரைவ் மோடு வசதியும் கிடையாது. சுஸூகி நிறுவனம் இந்த இரண்டு இன்ஜின்களையும் தயாரிக்க ஒரே செலவு தான் ஆகிறது எனச் சொல்கிறது. அதன் அம்சங்கள் வேறுபடுவதால் ஒரே செலவில் இரண்டு விதமான இன்ஜின்களை தயாரிக்கிறது.
ஜிம்னி காரை பொருத்தவரை இந்தியாவில் ரூ12.74 லட்சம் முதல் ரூ 14.89 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. இதுவே ஜப்பான் நாட்டில் விற்பனையாகும் ஜிம்னி காரின் விலையைப் பொருத்தவரை இந்திய மதிப்பில் ரூபாய் 8.17 லட்சம் முதல் ரூ 9.99 லட்சம் வரையில் விற்பனையாகி வருகிறது.
இந்த கார்களுக்கு இடையே ரூபாய் 4.87 லட்சம் வரை விலை வித்தியாசம் இருக்கிறது. இந்தியாவில் அதிகமாக விலை கொடுப்பதன் மூலம் இரண்டு டோர் மற்றும் நீளமான வீல் பேஸ் ஆகியவை ஜப்பான் காரில் இருந்து எக்ஸ்ட்ராவாக இருக்கிறது. அதே நேரம் அடாஸ், டர்போ சார்ஜிங், டர்போ இன்டர்கூலர், டிரைவ் மோட் ஆகிய அம்சங்கள் இந்திய காரில் இல்லை. இந்த விலை உயர்வு ஒர்த்தா இல்லையா?
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்திய மக்களுக்கான தேவையை மனதில் வைத்து மாருதி நிறுவனம் ஜிம்னி காரை வெளியிட்டுள்ளது. ஜப்பான் மக்களுக்கான தேவை வேறு. இதனால் இந்த இரண்டிற்கும் விலை வித்தியாசம் இருப்பதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இந்திய மக்களுக்கான நலனைக் கருத்தில் கொண்டு தான் மாருதி நிறுவனம் நீண்ட ஆண்டுகளாகப் பணி செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications









