இந்த காரை இந்திய ராணுவமே ஆர்டர் பண்ணிட்டுச்சு! இப்ப தான் இந்த காரோட அருமையே எல்லோருக்கும் புரியுது!
மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஜிம்னி காரை வாங்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த காரை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 3 டோர் காரை ராணுவத்தினர் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது 5 டோர் காரையும் ஆர்டர் செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் மாருதி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் தனது ஜிம்னி காரின் 5 டோர் வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. அதற்கு முன்னர் இந்தியாவில் 3 டோர் ஜிம்னி காரை தயாரித்தாலும் அதை ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வந்தது. இந்நிலையில் அப்பொழுதே இந்த வாகனத்தை ராணுவத்திற்காக வாங்கினர்.

இந்நிலையில் மாருதி நிறுவனம் அதே ஜிம்னி காரில் 5 டோர் வெஷரனை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியா ராணுவத்தினர் இந்த காரையும் ராணுவ பயன்பாட்டிற்காக ஆர்டர் செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இதை மாருதி சுஸூகி நிறுவனத்தின் மார்கெட்டிங் மற்றும் விற்பனை துறையின் மூத்த செயல் இயக்குநர் ஷஷாங்க் ஸ்ரீவத்சா உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது அதை ராணுவ பயன்பாட்டிற்கு ஏற்றபடி மாற்ற ஆய்வுகள் நடத்தப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும்.ஏற்கனவே இந்த காரை பலர்புக் செய்துள்ள நிலையில் இந்த காரின் விற்பனை துவங்கிவிட்டால் அது மிகப்பெரிய அளவில் வளரும் எனத் தெரிவித்துள்ளார்.

5 டோர் கார் இந்திய மார்கெட்டிற்கு ஏற்றார்போல உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஜிப்ஸி காரை போல குறைவான எடையில், அதிக திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் உடன், ஆஃப்ரோடு அம்சங்கள் நிறைந்த அதே நேரத்தில் அதிக மைலேஜ் தரும் காராக உருவாக்கப்பட்டுள்ளது. ஜிப்ஸி காரும் அதே காரணங்களுக்காகத் தான் விரும்பப்பட்டது.
மாருதி ஜிப்ஸி காரை பொருத்தவரை ராணுவத்தினர் இதன் குறைவான வீல் பேஸ், அதிக திறன் கொண்ட இன்ஜின் மற்றும் ஆஃப்ரோடு அம்சங்களுக்காகத் தான் வாங்கினர். இதை இந்திய ராணுவத்தினர். வீரர்களை படை களத்திற்கு அழைத்துச் செல்லவும், ரோந்து பணிகளுக்காகவும், அதிகாரிகளின் போக்குவரத்திற்காகவும் பயன்படுத்தினர்.

மாருதி நிறுவனம் 33 ஆண்டுகளாக விற்பனையிலிருந்த ஜிப்ஸி காரை கடந்த 2019ம் ஆண்டு நிறுத்தியது. அதுவரை ராணுவத்தில் வேறு எந்த வாகனமும் இந்த ஜிப்ஸி பயன்பாட்டிற்கு மாற்றாக விரவில்லை அதன் பிறகு டாடா சாஃபாரி பழைய மாடல் காரை இந்திய ராணுவம் வாங்கியது. தற்போது மீண்டும் மாருதி ஜிம்னி காரை அதே பயன்பாட்டிற்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
மாருதி ஜிம்னி காரின் கமர்ஷியல் வெர்ஷன்கார் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரை புக் செய்தவர்களுக்கு ஒவ்வொருவருக்காக டெலிவரி துவங்கவுள்ளது. விரைவில் இந்த காரை ரோட்டில் காணலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் ஜிம்னி காரின் ஆஃப்ரோடு அம்சங்கள், மற்றும் அதிக இட வசதி ராணுவத்தினருக்கு ஏற்றது. அதே நேரம் இன்ஜினும் இந்திய ராணுவத்திற்கு ஏற்றார் போல இருப்பதால் விரும்புகின்றனர். இந்தியத் தயாரிப்புகள் இந்தியா ராணுவத்தினருக்கு உதவுவது நிச்சயம் நாட்டின் வளர்ச்சியைக் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









