இந்திய இராணுவம் இப்படி செய்யும்னு நினைத்து பார்க்கல!! மாருதி ஜிப்ஸியை இவ்வாறுகூட யூஸ் பண்ணலாமா?

இந்திய இராணுவத்திற்கான மாருதி சுஸுகி ஜிப்ஸி எலக்ட்ரிக் (Maruti Suzuki Gypsy) வாகனம் ஒன்று பொது சாலையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி ஜிப்ஸி வாகனத்தை பிடிக்காதவர்கள் யார் தான் இருப்பார்கள். ஒரு சமயத்தில் சந்தையில் விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருந்த ஜிப்ஸிக்கு போட்டியாகவே மஹிந்திரா நிறுவனம் தார் மாடலை அறிமுகப்படுத்தியது. மஹிந்திரா தாரின் 2ஆம் தலைமுறை மாடல் தற்சமயம் விற்பனையில் இருந்தாலும், அதற்கு போட்டியாக மாருதி சுஸுகி ஜிப்ஸி விற்பனையில் இல்லை.

indian army retrofitted gypsy vehicles

ஜிப்ஸியின் விற்பனையை பல வருடங்களுக்கு முன்பாகவே மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்திவிட்டது. இருப்பினும் சில வருடங்கள் இந்திய இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காகவே ஜிப்ஸியை 4x4 டிரைவ் சிஸ்டத்துடன் மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்து வழங்கி வந்தது. இதனால் சாலைகளில் அவ்வளவாக காண முடியாவிடினும், இப்போதும் இராணுவத்தில் பல ஜிப்ஸி வாகனங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அவற்றுள் 10 ஜிப்ஸி எஸ்யூவி வாகனங்களை எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரி உடன் இந்திய இராணுவம் மாற்றியுள்ளது. அந்த 10 ஜிப்ஸி எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதற்கு முன்னர் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் சமீபத்தில் பொது சாலையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. எந்த இடத்தில் இந்த எலக்ட்ரிக் ஜிப்ஸி வாகனம் காட்சி தந்துள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை.

கீழே பதிவிடப்பட்டுள்ள வீடியோ, தலைநகர் டெல்லிக்கு அருகே காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் என நினைக்கிறோம். இது எலக்ட்ரிக்கில் இயங்கக்கூடிய வாகனம் என்பதை குறிக்கும் வகையில் பல்வேறு ஸ்டிக்கர்களை வாகனத்தை சுற்றிலும் பார்க்க முடிகிறது. அதிலிலும் குறிப்பாக, எலக்ட்ரிக் வாகனம் என்பதை உணர்த்தும் வகையில் பச்சை நிற நம்பர் பிளேட் இந்த சோதனை ஜிப்ஸி வாகனத்தில் பொருத்தப்பட்டு உள்ளதை காணலாம்.

இருப்பினும் அந்த பச்சை நிற நம்பர் பிளேட்டில் இந்திய இராணுவ பாதுகாப்பு படை வாகனங்களுக்கான பதிவெண்ணையே பார்க்க முடிகிறது. இந்த பதிவெண்ணையும், வாகனத்தின் பொனெட்டில் உள்ள முத்திரையை வைத்தும் தான் இது இராணுவ வாகனம் என்பதை நம்மால் அடையாளம் காண முடிகிறது. மற்றப்படி வாகனத்தின் தோற்றத்தில் வேறெந்த வித்தியாசத்தையும் காண முடியவில்லை. வழக்கமான ஜிப்ஸி எப்படி இருக்குமோ அவ்வாறுதான் உள்ளது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த கன்வெர்டட் எலக்ட்ரிக் ஜிப்ஸி வாகனத்தை புது டெல்லியை சேர்ந்த டட்போல் பிராஜெக்ட்ஸ் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் இவ்வாறு மாற்றி கொடுத்துள்ளது. அத்துடன் ஐஐடி-டெல்லி தொழில் நிறுவனமும் இந்த பணியில் ஈடுப்பட்டது. எலக்ட்ரிக்காக மாற்றப்பட்ட ஜிப்ஸி வாகனங்களை வெறும் ரூ.120 செலவில் 120கிமீ தொலைவிற்கு இயக்கலாம் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பிரபலமான மாருதி சுஸுகி ஜிப்ஸி மீண்டும் எலக்ட்ரிக் வெர்சனில் திரும்ப வருமா என்கிற கேள்வி கடந்த பல வருடங்களாக கேட்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஜிம்னியை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருகிறது. அதாவது ஜிப்ஸி இனி ஒருபோதும் மீண்டும் கொண்டுவரப்படாது என்பது இதன் அர்த்தம் ஆகும். எதிர்காலத்தில் ஜிம்னியாவது எலக்ட்ரிக் வெர்சனில் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 23, 2023, 14:29 [IST]
English summary
Indian army retrofitted 10 maruti gypsy with electric powertrains
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+