ஆட்டோமொபைலில் அசைக்க முடியாத சக்தியாக மாறும் இந்தியா!! ஒவ்வொரு மாதமும் வாகனங்கள் விற்பனை எகிறுது!

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 2023 செப்டம்பரில் விற்பனை செய்யப்பட்ட ஆட்டோமொபைல் வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, இந்த விபரங்களில் கார்கள், மோட்டார்சைக்கிள்கள் மட்டுமின்றி, கனரக வாகனங்களும், கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன.

உலகின் ஓர் அசைக்க முடியாத ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா மாறி வருகிறது. உலகளவில் நீளமான சாலை வசதிகளை கொண்ட 2வது பெரும் நாடு என்பது அதற்கு சாட்சியாகும். சீனாவை சார்ந்தில்லாமல், தனித்து விளங்க விரும்புவதன் காரணத்தினாலேயே இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை சமீப காலத்தில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது என சொல்ல வேண்டும்.

indian automobile industry september sales

கடந்த 2023 செப்டம்பரிலும் இந்தியாவில் ஆட்டோமொபைல் வாகனங்கள் விற்பனை முந்தைய 2022 செப்டம்பரை விட 2.3% உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பரில் மொத்தம் 21,41,208 வாகனங்கள் விற்பனையாகி உள்ள நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் ஏறக்குறைய 50,000 வாகனங்கள் குறைவாக, 20,93,286 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன.

அதேபோல், கார்கள் மற்றும் வேன்கள் உள்ளிட்டவை அடங்கும் பயணிகள் வாகனங்களின் விற்பனையும் 3,07,389 (2022 செப்டம்பர்)-இல் இருந்து 3,16,908ஆக உயர்ந்துள்ளது. இந்த வகையில், இந்தியாவின் பயணிகள் வாகனங்கள் விற்பனை 3% வளர்ச்சிக் கண்டுள்ளது. ஆனால், இந்த வாகனங்களில் அடங்கும் கார்கள் மற்றும் வேன்களின் விற்பனை எண்ணிக்கைகளை மட்டும் தனியாக எடுத்து பார்த்தால், கடந்த ஆண்டை விட கணிசமாக குறைந்துள்ளது.

indian automobile industry september sales

2022 செப்டம்பரில் மொத்தம் 1,42,727 கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2023 செப்டம்பரில் வெறும் 1,11,889 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. அதேபோல், வேன்கள் விற்பனை 12,903இல் இருந்து 11,147ஆக சரிந்துள்ளது. இருப்பினும், மொத்த பயணிகளின் வாகனங்களின் விற்பனை எவ்வாறு அதிகரித்துள்ளது என கேட்டால், இந்த பிரிவில் அடங்கும் மற்றொரு முக்கியமான வாகனங்களான யுடிலிடி வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளதினால்.

சிறிய டிரக்குகள், பெரிய அளவிலான கார்கள் உள்ளிட்டவற்றை யுடிலிடி வாகனங்கள் என அழைக்கின்றனர். இந்த வாகனங்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் 1,93,872 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2022 செப்டம்பர் மாதத்தில் இவை 1,51,759 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2-வீலர் விற்பனையை பொறுத்தவரையில், இதுவும் 2022 செப்டம்பரை விட 0.84% அதிகரித்துள்ளது.

indian automobile industry september sales

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் மொத்தம் 17,49,794 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் இவை சற்று குறைவாக 17,35,199 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த இருசக்கர வாகனங்களில் பைக்குகள், ஸ்கூட்டர்கள் மற்றும் மொபெட் உள்ளிட்டவை அடங்கும். இதில் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

ஆனால், மொபெட் வாகனங்களின் விற்பனை கிட்டத்தட்ட 2,700 யூனிட்கள் குறைந்துள்ளது. மொத்தமாக, இந்த 2023-24ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஜூலை - செப்டம்பர்) 10,74,189 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2022-23 நிதியாண்டில் இதே 2ஆம் காலாண்டில் 10,26,309 பயணிகள் வாகனங்களின் விற்பனை மட்டுமே பதிவாகி இருந்தன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பயணிகள் வாகனங்களில் குறிப்பாக, எஸ்யூவிகளின் விற்பனை வெகுவாக அதிகரித்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால், மற்ற ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களின் விற்பனை அதள பாதளத்திற்கு சென்றாலும், எஸ்யூவிகள் அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அதிக வாடிக்கையாளர்களை பெற்று தருகின்றன. இது இந்திய ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய நிலைமையே. வரும் காலத்தில் இது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 17, 2023, 11:29 [IST]
English summary
Indian automobile industry sales numbers 2023 september
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X