இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் யாருகிட்ட எல்லாம் லம்போர்கினி கார் இருக்கு தெரியுமா? இத்தன பேரு கிட்ட இருக்கா!

உலக கோடீஸ்வரர்கள் பலர் பயன்படுத்தி வரும் லம்போர்கினி சூப்பர் காரை இந்தியாவில் உள்ள சில கிரிக்கெட் வீரர்களும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் எந்தெந்த வீரர்களிடத்தில் லம்போர்கினி நிறுவனத்தின் தயாரிப்பு இருக்கின்றது? அதன் சிறப்பு என்ன என்பது போன்ற முக்கிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

உலக புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமாக லம்போர்கினி இருக்கின்றது. இதன் தயாரிப்புகள் அதீத திறனை வெளிப்படுத்துவதற்கு மட்டுமல்ல அதிகப்படியான லக்சூரி வசதிகளுக்கும் பெயர்போனதாக இருக்கின்றன. இதனால்தான் உலக செல்வந்தர்கள் மத்தியில் லம்போர்கினியின் தயாரிப்புகளுக்கு மிகப் பெரிய அளவில் சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Indian cricket players who use Lamborghini cars

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலக நாடுகளில் மட்டுமில்லைங்க இந்தியாவிலும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாக நமது இந்திய கிரிக்கெட் அணியே இருக்கின்றது. நம்முடைய இந்தி கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள் பலர் லம்போர்கினி நிறுவனத்தின் சூப்பர் மற்றும் சொகுசு வகை கார் மாடல்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஆச்சரியமளிக்கும் விதமாக ஹர்திக் பாண்டியா கூட லம்போர்கினி காரை பயன்படுத்தி வருகின்றார். இவரை போல் இன்னும் எந்தெந்த வீரர்கள்? என்ன லம்போர்கினி கார் மாடலை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹர்திக் பாண்டியா: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களில் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர் ஆவார். இவரிடத்தில்மிக சூப்பரான லம்போர்கினி கார் பயன்பாட்டில் இருக்கின்றது. ஹூராகேன் ஈவோ எனும் கார் மாடலையே அவர் பயன்படுத்தி வருகின்றனர். இதன் விலை 3.73 கோடிக்கும் அதிகம் ஆகும். இத்தகைய உச்சபட்ச விலைக் கொண்ட சூப்பர் காரையே ஹர்திக் பாண்டியா பயன்படுத்தி வருகின்றார்.

இந்த சூப்பர் கார் மிக அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. வெறும் 2.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இந்த அதீத திறனை வெளிப்படுத்துவதற்காக ஹூராகேன் ஈவோ காரிில் 5.2 லிட்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் 638 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

தோனி மற்றும் ரோஹித் ஷர்மா: இந்திய கிரிக்கெட் அணியில் அதிக சொகுசு கார்களைப் பயன்படுத்தி வரும் வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார். அந்தவகையில், இவரிடத்தில் லம்போர்கினி உருஸ் பயன்பாட்டில் இருக்கின்றது. தல எம்எஸ் தோனி இடத்திலும் இந்த சொகுசு கார் பயன்பாட்டில் இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். உலகின் அதீத திறனை வெளியேற்றக் கூடிய எஸ்யூவி ரக காராக லம்போர்கினி உருஸ் இருக்கின்றது.

இந்த சொகுசு காரையே தல தோனி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த காரில் லம்போர்கினி நிறுவனம் 4.2 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் எஞ்ஜினையே பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 650 பிஎஸ் மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

யுவராஜ் சிங்: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங்கும் லம்போர்கினி நிறுவனத்தின் தயாரிப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். அவர் முர்சிலேகோ எல்பி 640-4 கார் மாடலை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். இது ஓர் அரிய வகை கார் மாடலாகும். இதன் மதிப்பு ரூ.3 கோடி ஆகும். இந்த சூப்பர் காரில் 6.5லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 631பிஎச்பி மற்றும் 660என்எம் டார்க்கை வெளியேற்றும்.

சச்சின் டெண்டுல்கர்: இந்திய கிரிக்கெட் உலகின் மாஸ்டர் பிளாஸ்டர் என்ற அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவரிடத்தில் பலதரப்பட்ட சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தயாரிப்புகளே இவரிடத்தில் மிக அதிகமாக உள்ளன. காரணம், இவரே பிஎம்டபிள்யூ இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடர் ஆவார். இதுதவிர, இன்னும் சில நிறுவனங்களின் சொகுசு மற்றும் சூப்பர் கார்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார்.

அந்தவகையில், லம்போர்கினி உருஸ் கார் மாடலை அவர் பயன்படுத்தி வருகின்றார். உருஸ் மாடலின் எஸ் தேர்வையே அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். அதாவது, தல தோனி மற்றும் ரோஹித் ஷர்மாவை போலவே இவரும் உருஸ் காரையே பயன்படுத்தி வருகின்றார். ஆனால், இவர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உருஸ் அவருக்கென்றே பிரத்யேகமாக சில கஸ்டமைசேஷன்களைப் பெற்ற ஒன்றாக இருக்கின்றது. மேலும், அந்த கார் நீல நிற ஷேடில் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு மற்றும் சூப்பர் வகை கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இதற்கு சான்றாகே மேலே நாம் பார்த்த பதிவு இருக்கின்றது. வரும் நாட்களிலும் இந்தியாவில் சொகுசு கார்களுக்கான வரவேற்பு அதிகரிக்கவே செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Article Published On: Friday, September 8, 2023, 8:30 [IST]
English summary
Indian cricket players who use lamborghini cars
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+