எல்லா வெளிநாட்டு காரும் இந்திய மார்க்கெட்டை டார்க் பண்ணி வந்திருக்குங்க!! இந்த அக்டோபரில் எத்தனை தெரியுமா?
நடந்து முடிந்த 2023 அக்டோபர் மாதத்தில் நவராத்திரி, தசரா என சில முக்கிய இந்திய பண்டிகைகள் வந்தன. இந்த பண்டிகைகளை டார்க்கெட் செய்து கடந்த அக்டோபர் மாதத்தில் பல்வேறு புதிய கார்கள் இந்திய சந்தையில் களமிறக்கப்பட்டன. அவற்றுள் மக்கள் பலரால் வாங்கக்கூடிய விலையில் விற்பனைக்கு வந்த சிலவற்றை இனி பார்க்கலாம்.
டாடா ஹெரியர் & சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்: டாடா மோட்டார்ஸின் சற்று விலைமிக்க பிரீமியம் தரத்திலான எஸ்யூவி கார்கள் ஹெரியர் மற்றும் சஃபாரி ஆகும். இவை இரண்டிற்கும் கடந்த அக்டோபர் மாதத்தில் டாடா நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை வழங்கி உள்ளது. இதனால், சந்தையில் ஹெரியர் & சஃபாரி கார்களின் ஆயுட்காலம் மேலும் சில வருடங்களுக்கு அதிகரித்துள்ளது.

சிட்ரோன் சி3 ஏர்கிராஸ்: ஏர்கிராஸ் டைப் கார்கள் நம் நாட்டு சந்தைக்கு புதுமையானவை மற்றும் வித்தியாசமானவை. இருப்பினும், பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோன் தைரியமாக அதன் ஏர்கிராஸ் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. 2021இல் சி5 ஏர்கிராஸ் காரை இந்தியாவில் தனது முதல் காராக அறிமுகப்படுத்திய சிட்ரோன், கடந்த அக்டோபரில் இந்தியாவில் தனது 2வது ஏர்கிராஸ் காராக சி3 ஏர்கிராஸை களமிறக்கி உள்ளது.

நிஸான் மேக்னைட் ஏஎம்டி & மேக்னைட் குரோ எடிசன்: நிஸான் மேக்னைட் கார் கடந்த அக்டோபர் மாதத்தில் அதன் 1 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றுள்ளது. இந்த 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸாக வழங்கப்பட்டுள்ள ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆனது ஆண்டி-ஸ்டால் மற்றும் கிக்-டவுன் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.

ஸ்கோடா ஸ்லாவியா மேட் எடிசன்: ஸ்லாவியா செடான் காரின் புதிய டாப் வேரியண்ட். கார்பன் ஸ்டீல் மேட் பெயிண்ட் ஆப்ஷனில் கிடைக்கிறது. பவர்டு முன் இருக்கைகள் மற்றும் ஒளியூட்டப்பட்ட ஃபுட்வெல் பகுதி உள்ளிட்டவை இந்த ஸ்பெஷல் எடிசனின் சிறப்பம்சங்கள் ஆகும். மற்றப்படி, என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை.

கியா கேரன்ஸ் எக்ஸ்-லைன்: கியா செல்டோஸ், சொனெட் கார்களின் எக்ஸ்-லைன் எடிசன்களை இதற்குமுன் பார்த்திருப்போம். அந்த வரிசையில் கேரன்ஸின் எக்ஸ்-லைன் எடிசன் கடந்த அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது. முழுவதும் மேட் கிராபைட் நிறத்தில் இந்த காரின் வெளிப்பக்கம் வழங்கப்படுகிறது. அதேநேரம், காரின் உட்பக்கம் ட்யூயல்-டோன் கருப்பு மற்றும் ஸ்ப்லெண்டிட் சேஜ் பச்சை நிறங்களில் வடிவமைக்கப்படுகிறது.

ஹோண்டா அமேஸ் எலைட் & ஹோண்டா சிட்டி எலெகண்ட் எடிசன்ஸ்: இந்தியாவில் இப்போதைக்கு ஓரளவிற்கு விற்பனையாகக்கூடிய கார்கள் அமேஸ் மற்றும் சிட்டி ஆகும். இவை இரண்டிலும் குறிப்பிட்ட காலத்திற்கு ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வழக்கமான அமேஸ், சிட்டி கார்களை விட விலைமிக்கதாக கொண்டுவரப்பட்டுள்ள இவை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விற்பனையில் இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஜிடி பிளஸ் மேட் எடிசன்: மேட் கிரே நிறத்தில் கிடைக்கும் விர்டுஸ் செடான் காரின் ஸ்பெஷல் எடிசன். சிவப்பு நிறத்தில் வெளிப்பக்க ஹெட்லைட் ஹைலைட்கள். கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள் மற்றும் கருப்பு நிறத்தில் ஓஆர்விஎம்-கள் உடன் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் கார் உருவாக்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த மாதத்தில் பல்வேறு பண்டிகைகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருவதால், இத்தகைய நேரத்தில் புதிய வாகனங்களை விற்பனைக்கு கொண்டுவருவது சரியான முடிவு. இதன் வகையிலேயே, கடந்த அக்டோபரில் பல்வேறு கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்தனைக்கும் இந்த லிஸ்ட்டில் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் போன்ற லக்சரி கார்கள் சேர்க்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications









