சொந்த ஜப்பான் நாடு 2ஆம் பட்சம்... இந்தியா தான் ஃபர்ஸ்ட்!! ஹோண்டா இப்படி மாறும்னு நினைச்சே பார்க்கல!

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் எஸ்யூவி கார்கள் மார்க்கெட்டில் பெரியதாக ஜொலித்ததே இல்லை. இந்த குறையை நீக்கும் விதமாக எலெவேட் என்ற பெயரில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரை கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், எலெவேட் எஸ்யூவி கார் ஹோண்டாவின் தாயக நாடான ஜப்பானில் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது.

டபிள்யூ.ஆர்-வி என்கிற பெயரில் ஜப்பானில் எலெவேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா டபிள்யூ.ஆர்-வி எஸ்யூவி கார் இந்தியாவிலும் சில வருடங்களுக்கு முன்பு வரையில் விற்பனையில் இருந்தது. எலெவேட், டபிள்யூ.ஆர்-வி என பெயர் மட்டுமில்லாமல், ஒரே தோற்றத்தை கொண்ட இந்த இரு ஹோண்டா கார்களில் வேறு சில வேறுப்பாடுகளும் உள்ளன. அவற்றை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

honda elevate vs honda wr-v

பெயிண்ட் ஆப்ஷன்கள்: இந்தியர்கள் பொதுவாகவே காரின் பெயிண்ட் நிறம் விஷயத்தில் நிறைய யோசிப்பார்கள் என்பதால், இந்தியாவில் மொத்தம் 10 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களிலும், ஜப்பானில் வெறும் 5 பெயிண்ட் ஆப்ஷன்களிலும் மட்டுமே எலெவேட் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், இந்தியாவில் கிடைப்பதை போல் இந்த காரை ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷனில் ஜப்பானில் பெற முடியாது.

உட்பக்க தோற்றம்: டேஸ்போர்டு டிசைன் இரண்டு கார்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே உள்ளன. ஜப்பானில் டபிள்யூ.ஆர்-வி காரின் உட்பக்கத்தை கருப்பு நிறத்தில் மட்டுமே பெற முடியும். ஆனால், இந்தியாவில் கருப்பு/ டேன் என 2 விதமான நிறங்கள் கலந்ததாக கொடுக்கப்படுகிறது. அதேபோல் சற்று உற்று கவனித்தால், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் இரண்டிலும் சிறிது வேறுப்பட்டு உள்ளதை கண்டறியலாம்.

honda elevate vs honda wr-v

தொழிற்நுட்ப வசதிகள்: இந்திய ஹோண்டா எலெவேட் காரில் வழங்கப்படும் வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் சன்ரூஃப் ஜப்பானிய டபிள்யூ.ஆர்-வி காரில் இல்லை. அதேநேரம், இந்திய மாடலில் முன்பக்கமாக பார்க்கிங் செய்வதற்கு உதவும் சென்சார்கள் கொடுக்கப்படுவதில்லை. மற்றப்படி, ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, கனெக்டட் கார் தொழிற்நுட்பம் உள்ளிட்டவை இரண்டிலும் கிடைக்கின்றன.

என்ஜின் ஆப்ஷன்கள்: என்ஜின் ஆப்ஷன்களில் இரண்டிலும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்திய மற்றும் ஜப்பானிய எலெவேட் கார்கள் இரண்டிலும் அதிகப்பட்சமாக 121 பிஎஸ் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் உமிழும் இயக்க ஆற்றல்கள் காரின் முன் சக்கரங்களுக்கு செல்கின்றன.

honda elevate vs honda wr-v

இரு நாடுகளிலும் எலெவேட் கார்களில் என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற முடிகிறது. ஆனால், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் ஆனது இந்திய எலெவேட் காரில் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா எலெவேட் கார் எவ்வாறு உள்ளது என்பதை நாங்கள் ஓட்டிப் பார்த்து ஏற்கனவே ரிவியூவாக வழங்கியுள்ளோம். அவற்றை நமது செய்தித்தளத்தில் காணலாம்.

இந்திய சந்தையில் ரூ.11 இலட்சத்தில் இருந்து ரூ.16.28 இலட்சம் வரையிலான விலைகளில் ஹோண்டா எலெவேட் கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் விற்பனையில் இந்த ஹோண்டா காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மற்றும் சிட்ரோன் சி3 உள்ளிட்ட மற்ற பிராண்ட் கார்கள் போட்டியாக விளங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு கார்ப்பிரேட் நிறுவனமும் தனது தாயக நாட்டிற்கு தான் முன்னுரிமை அளிக்கும். ஆனால், எலெவேட் கார் விஷயத்தில் இந்தியாவிற்கு சவுகரியமாக பல ஆப்ஷன்களை ஹோண்டா வழங்கியுள்ளது. இதற்கு காரணம், ஜப்பானில் இவ்வளவு விலை குறைவான கார் ஹோண்டா நிறுவனத்தில் இருந்து வெளிவந்தாலும் கண்டுக் கொள்ளப்படுவதில்லை என்பதினால்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 19, 2023, 7:00 [IST]
English summary
Indian honda elevate vs japanese honda wrv specs comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X