NModi எனும் நம்பர் பிளேட்டை ஹோண்டா காருக்காக வாங்கிய இந்தியர்... மோடி மேல அவ்ளோ வெறி...

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்று பயணமாக நான்கு நாட்கள் அமெரிக்காவிற்கு பயணிக்க இருக்கின்றார். ஜூன் 21 தொடங்கி 24 ஆம் தேதி வரை அவர் அமெரிக்கா சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். அவரின் இந்த சுற்றுப் பயண வருகையை முன்னிட்டு அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்த்திராத மற்றும் மிக சூப்பரான வரவேற்பை வழங்கும் முயற்சியில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் களமிறங்கி இருக்கின்றார். அவர் தன்னுடைய காரை 'NModi' எனும் பதிவெண்ணால் அலங்கரித்திருக்கின்றார். 'நரேந்திர மோடி' எனும் பெயரையே இந்த பதிவெண் குறிப்பிடுகின்றது. இதையே அந்த நபர் தன்னுடைய காரில் பயன்படுத்தி இருக்கின்றார்.

Nmodi number plate

அமெரிக்கா வாழ் இந்தியரின் இந்த செயல் பாஜகவினரை புல்லரிக்கச் செய்திருக்கின்றது. பிரதமர் மோடியின் மீது அதிகம் அன்புக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே என்மோடி நம்பர் பிளேட்டை அவர் தன்னுடைய காரில் பயன்படுத்தி இருக்கின்றார். இதைக் கொண்டே மோடியை அவர் வரவேற்கவும் இருக்கின்றார் என கூறப்படுகின்றது.

இந்த நபர் அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் வசித்து வரும் ராகவேந்திரா என்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது. அவர் பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருக்கின்றார். பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக பயன்படுத்தப்பட இருக்கும் என்மோடி பதிவெண்ணை அவர் கடந்த 2016 ஆம் ஆண்டிலேயே வாங்கிவிட்டதாகக் கூறப்படுகின்றது.

Nmodi

ராகவேந்திராவைப் போலவே மற்றுமொருத்தர் மோடி பிரியராக இருக்கின்றார். அவர் நியூயார்க்கில் உள்ள அவருடைய உணவகத்தில் புதிய தாலி உணவை அறிமுகம் செய்திருக்கின்றார். இதுவும் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த நபரும் இந்திய பூர்வகுடியைச் சேர்ந்தவர் ஆவார். ஸ்ரீபத் குல்கர்னி அவர் ஆவார்.

தன்னுடைய புதிய தாலி உணவிற்கு "மோடி ஜி தாலி" என அவர் பெயர் சூட்டி இருக்கின்றார். இந்த நிலையிலேயே ராகவேந்திரா தன்னுடைய என்மோடி எனும் பதிவெண் கொண்ட காரை மோடியை வரவேற்கும் விதமாக தயார் செய்திருக்கின்றார். பிடித்தமான பெயர் அல்லது எண் கொண்ட பதிவண்ணை அமெரிக்க வாழ் இந்தியர்கள் வங்குவது இது முதல் முறையல்ல.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மற்றுமொரு அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவர், தன்னுடைய பள்ளி பருவத்தில் பயணித்த பேருந்தை நினைவு கூறும் விதமாக அந்த பேருந்தின் பதிவெண்ணை அவருடைய டெஸ்லா கார்களுக்காக வாங்கி இருந்தார். இதுகுறித்த படங்கள் சமீபத்தில் இணையத்தில் அதிக வேகமாக வைரலாகின.

இந்த நிலையிலேயே ராகவேந்திராவின் என்மோடி பதிவெண் கொண்ட ஹோண்டா காரின் வீடியோவும் இணையத்தில் வைரலாகத் தொடங்கி இருக்கின்றது. இந்தியாவில் இதுபோன்று விருப்பப்பட்ட எண்கள் அல்லது எழுத்துக்களைக் கொண்ட பதிவெண்களை வாங்க இயலாது. அதேவேளையில், ஃபேன்சியான பதிவெண்களை தேர்வு செய்துக் கொள்ள முடியும்.

குறிப்பிட்ட சில முக்கிய ஃபேன்சி எண்கள் ஏலத்தின் வாயிலாக விற்பனைக்கு வரும். அதைத் தேவைப்படுபவர்கள் ஏலம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். ஆனால், சற்றும் பெரும் தொகையை அதற்கு செலவழிக்க வேண்டியிருக்கும். அதேவேளையில், கூடுதலாக பல லட்சங்களை அள்ளிக் கொடுத்தால் ஆர்டிஓ-க்கள் சில வகையான பதிவெண்களை வழங்குவர். அவ்வாறே அம்பானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிலர் ஒரே குறிப்பிட்ட எண்ணில் பல கார்களை வைத்திருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க்கின் கூடுதல் தகவல்: இந்தியாவில் வாகனங்களில் பதிவெண் இருப்பது கட்டாயம். ஆனால், மணிக்கு 25 கிமீட்டருக்கும் குறைவான வேகத்தில் ஓடும் வாகனங்களுக்கு பதிவெண் கட்டாயமில்லை. இதேபோல், அதை ஓட்ட டிரைவிங் லைசென்ஸும் தேவையில்லை. அதேநேரத்தில், கமர்சியல் வாகனம், மின்சார வாகனம், தனி நபர் பயன்பாட்டு வாகனம் மற்றும் வாடகை வாகனம் என ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு விதமான நிறங்கள் கொண்ட நம்பர் பிளேட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, June 17, 2023, 17:39 [IST]
English summary
Indian origin man uses nmodi on his car number plate
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+