ஃபோர்டு கார் மேல அவ்ளோ வெறியா?.. தாய்லாந்து வரை பறந்து சென்ற இந்திய இளைஞர்.. சுத்தி பார்க்க இல்ல..

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவே வேண்டாம் என கை கழுவிவிட்டு, நாட்டில் இருந்து வெளியேறி இரண்டு ஆண்டுகள் ஆக உள்ளன. இதன் வெளியேற்றம் இப்போதும் நம் நாட்டில் பலருக்கு சோகத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிகின்றது. நிறுவனம் விற்பனைக்கு வழங்கிய அனைத்தும் மிக சூப்பரான மற்றும் அதிக உறுதியான கார் மாடல்கள் ஆகும்.

இதற்கு மிக சிறந்த உதாரணம் ஈகோஸ்போர்ட். இந்த கார் மிக மோசமான விபத்தில் சிக்கிய போதிலும், அதில் இருந்தவர்களைச் சிறு காயம்கூட இல்லாமல் காப்பாற்றி இருக்கின்றது. இந்த அளவிற்கு அதிக பாதுகாப்பான கார் தற்போது நாட்டில் விற்பனையில் இல்லாத சூழல் ஏற்பட்டு இருக்கின்றது.

Indian Youth Visits Thailand to Buy New Endeavour

நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரிலேயே இந்தியாவை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இதனால், எந்தவொரு ஃபோர்டு கார் மாடலும் தற்போது நாட்டில் விற்பனைக்குக் கிடைக்காத சூழல் உருவாகி இருக்கின்றது. இதுவே ஃபோர்டு கார் பிரியர்கள் பலருக்கு சோகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஆனால், ஒருவருக்கு மட்டும் இல்லை. ஃபோர்டு நிறுவனத்தின் தீவிர ஃபேனான ஓர் இளைஞர், அந்த நிறுவனத்தின் பிரபல கார் மாடலலான என்டீயோவரை வாங்க நாடு கடந்து, கடல் கடந்து பறந்துச் சென்றிருக்கின்றார். தாய்லாந்திற்கே அவர் சென்றிருக்கின்றார். பலர் இந்த நாட்டிற்கு சுற்றுலாவிற்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக, அந்த நாட்டின் அழகிய கடற்கரை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் பிற பகுதிகளைக் காண சுற்றுலாச் சென்ற வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஃபோர்டு என்டீயோவர் காரை வாங்க அந்நாட்டுக்கு சென்றிருக்கின்றார். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியமடையச் செய்திருக்கின்றது.

மேலும், அவர் மிகப் பெரிய ஃபோர்டு கார் பிரியரா இருப்பாரோ என்கிற கேள்வியையும் எழும்பச் செய்திருக்கின்றது. இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து காரை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வது ஒன்றும் புதிதல்ல. அப்படி இறக்குமதி செய்வதாக இருந்தாலும் லம்போர்கினி, ஃபெர்ராரி, மெக்லாரன் அல்லது ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சொகுசு கார்களை இறக்குமதி செய்ததை பற்றியே நாம் கேள்விப் பட்டிருப்போம்.

ஆனால், சற்று மாறுதலாக இந்த இளைஞர் ஃபோர்டு என்டீயோவரை வாங்கி இருக்கின்றார். இதனாலேயே பலர் அந்த இளைஞரை சற்று வித்தியாசமாக பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்தியாவில் என்டீயோவர் என்று அழைக்கப்படும் இந்த கார் உலக சந்தையில் எவரெஸ்ட் என குறிப்பிடப்படுகின்றது. இந்தியர்கள் பலரின் விருப்பமான கார் மாடலாக கடந்த காலங்களில் இது இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பாக, எஸ்யூவி கார் பிரியர்களின் பிரியமான காராக அது இருந்தது. இந்த காரையே வாங்குவதற்காக ரவிபோகன் என அறியப்படும் இளைஞர் தாய்லாந்து வரை சென்றிருக்கின்றார். அங்கு அவர் காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்திருக்கின்றார். இதுகுறித்த வீடியோவை ரவிபோகன் தன்னுடைய யுட்யூப் சேனலில் பதிவிட்டு இருக்கின்றார். ஆம், இவர் ஓர் யுட்யூபர் ஆவார்.

ஃபோர்டு நிறுவனம் தாய்லாந்து சந்தைக்கு ஏற்ப எவரெஸ்டை (என்டீயோவரை) உருவாக்கி இருப்பதால், இந்தியாவில் விற்பனையில் இருந்த எவரெஸ்டைக் காட்டிலும் அதிக பிரீமியம் அம்சங்களைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பன் முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, அதிக ஸ்டோரேஜ் வசதி, இட வசதி, முரட்டுத் தனமான தோற்றம், பிரீமியம் தர இருக்கைகள் மற்றும் மெட்டீரியல்கள் உள்ளிட்டவை ஃபோர்டு என்டீயோவரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், தாய்லாந்தில் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் எவரெஸ்டில் வழங்கப்படுகின்றன. 2.0 லிட்டர் டர்போ மற்றும் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீடல் ஆகியவையே அவை ஆகும்.

இந்த இரண்டில் எதை யுட்யூபர் வாங்கி இருக்கின்றார் என்பது தெரியவில்லை. இரண்டும் அதிக திறனை வெளியேற்றக் கூடியதாக இருக்கின்றன. குறிப்பாக, 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் மோட்டார் அதிகபட்சமாக 210 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதைவிட சற்று குறைவான பவரை வெளியேற்றக் கூடியதாக 2.0 லிட்டர் டர்போ மோட்டார் இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 170 பிஎஸ் மற்றும் 405 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

இந்தியாவை விட்டு வெளியேற சில நாட்கள் கழித்து நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து குறிப்பிட்ட சில கார் மாடல்களை விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்திருந்தது. அதில் என்டீயோவரும் ஒன்று. ஆனால், இந்த முயற்சிகளை இப்போதும் கிடப்பில் போட்டு இருக்கின்றது. இதன் விளைவாகவே இளைஞர் வெளிநாட்டில் இருந்து காரை இறக்குமதி செய்யும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றார். ஆனால் இது எந்த அளவிற்கு ஒர்த்தானதாக இருக்கும் என தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, April 1, 2023, 17:49 [IST]
English summary
Indian youth visits thailand for buy endeavour
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+