எல்லோரும் கவனமா இருந்தும் இது எப்படி நடந்துச்சு? இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு விழுந்த பெரிய இடி!
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான வாகன ஏற்றுமதியில் 28 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சொசைட்டி (SAIM) சார்பில் வெளியிட்ட அறிக்கை இதில் தான் இந்த அதிர்ச்சிகரமான தகவல் இருந்தது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.
உலகம் முழுவதும் வெகு சில நாடுகளே கார்களை சொந்தமாக உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர் இந்தியாவும் அதில் ஒன்றுதான். இந்தியாவில் உலக அளவில் உள்ள பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆலையை அமைத்து கார்களை தயாரித்து உள்நாட்டில் மட்டும் விற்பனை செய்யாமல் இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்தியாவிலிருந்து வாகனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதால் இந்தியாவின் அந்நிய செலாவணி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான இந்திய ஏற்றுமதி குறித்த தகவல்களை இந்தியாவின் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களின் சொசைட்டியான எஸ் ஏ எம் வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த ஜூன் 30 ஆம் தேதி வரை மொத்தம் 10,32,449 வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளது. இதுவே கடந்த 2022 ஆம் ஆண்டு இதே காலகட்ட விற்பனை நிலவரத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த காலகட்டத்தில் 14,25,967 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. இது 28 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும்.

ஒரு சில காலகட்டங்களில் குறைந்த அளவிலான வீழ்ச்சியும் எழுச்சியும் இருப்பது சாதாரண ஒரு விஷயம் தான். ஆனால் தற்போது ஏற்பட்டு இருப்பது மிகப்பெரிய அளவிலான வீழ்ச்சியாகும் இது குறித்து ஆட்டோ மொபைல் தயாரிப்பாளர்கள் சொசைட்டி அமைப்பின் பொது இயக்குனர் ராஜேஷ் மேனன் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அறித்தார்.
அதில் அவர் குறிப்பிடுகையில் : தற்போது அனைத்து கேட்டகிரியிலும் வாகன ஏற்றுமதி என்பது வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவில் இருந்து வாகனங்கள் ஏற்றுமதியாகும் பல நாடுகளில் தற்போது பணம் நெருக்கடி பெரும் அளவில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய அளவு பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த நாடுகளில் வாகனங்களுக்கான டிமாண்ட் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அந்த நாடுகளுக்கு வாகனங்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது ." என்று கூறினார். இதன்படி ஒவ்வொரு செக்மெண்டிலும் எவ்வளவு வாகனங்களின் விற்பனை குறைந்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பயணிகள் வாகனத்தை பொருத்தவரை இந்தியாவில் இந்த ஏப்ரல் - ஜூன் மாதத்தில் மொத்தம் 1,52,156 வாகனங்கள் ஏற்றுமதி ஆகியுள்ளது இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,60,116 வாகனங்கள் ஏற்றுமதி ஆகியிருந்தது. இது கிட்டத்தட்ட பெரிய வீழ்ச்சி இல்லை என்றாலும் கணிசமான அளவு ஏற்றுமதி குறைந்துள்ளதை காண முடிகிறது.
கடந்தாண்டு ஏப்ரல் - ஜூன் மாதத்தில் 1,04,446 பயணிகள் கார்கள் ஏற்றுமதியான நிலையில் இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 94, 793 கார்கள் மட்டுமே ஏற்றுமதி ஆகியிருந்தது. யூட்டிலிட்டி வாகனத்தை பொருத்தவரை இந்த ஆண்டு மொத்தம் 55,419 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி ஆகி இருந்தது இதுவே கடந்த ஆண்டு 55,547 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது.
டூவீலரை பொருத்தவரை கடந்த ஏப்ரல் - ஜூன் மாதம் முதல் மொத்தம் 7,91,316 வாகனங்கள் ஏற்றுமதி ஆகிவிட்டது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனையான 11,48,594 வாகனங்களைக் காட்டிலும் 31% குறைவாகும்.கமர்சியல் வாகனங்களை பொருத்தவரை இந்த ஆண்டு மொத்தம் 14,625 வாகனங்கள் ஏற்றுமதி ஆகியுள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 19,624 வாகனங்கள் ஏற்றுமதி ஆகியிருந்தது இது 25 சதவீத வீழ்ச்சியாகும்.
மூன்று சக்கர வாகனங்களை பொருத்தவரை இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் மாதத்தில் 73,360 வாகனங்கள் ஏற்றுமதி ஆகியிருந்தது இதுவே கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 97,237 வாகனங்கள் ஏற்றுமதி ஆகி இருந்தது இது 25% ஏற்றுமதியில் வீழ்ச்சியாகும். இப்படியாக அனைத்து செக்மெண்ட்களும் முதல் காலாண்டில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற நாடுகளில் ஏற்படும் பண நெருக்கடி மறைமுகமாக இந்தியாவையும் பாதிக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல சான்றாக அமைகிறது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வாகனங்கள் ஏற்றுமதி செய்வது மூலம் இந்தியாவிற்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கிறது. இந்தியாவின் ஜிடிபியும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைகிறது. இதனால் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இதற்கான மாற்று வழியை விரைவில் வாகன தயாரிப்பு நிறுவனமும் அரசும் யோசிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









