இவர்களுக்குக் காசு மரத்துல காய்க்குது போல! இந்தியாவின் காஸ்ட்லியான 5 கார்களை இவங்க தான் வாங்கிருக்காங்க!
இந்தியாவில் குறைந்த விலை கார்கள், அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு தான் மவுசு அதிகம். இந்த ரக கார்களை தான் அதிகமான மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். சமீப காலங்களில் தான் கார்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இப்படி ஒரு நிலை இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்தியாவில் பல தொழிலதிபர்கள், பிரபலமானவர்கள் எனப் பலர் கோடிக் கணக்கில் செலவு செய்து கார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுவும் இந்தியாவில் சாத்தியம் தான். இப்படியாக அதிக விலை கொண்ட கார்களை இந்தியாவில் வைத்திருக்கும் பணக்காரர்களைப் பற்றித் தான் காணப்போகிறோம்.

பென்ட்லி முல்சேன் சென்டினரி எடிசன் இடபிள்யூபி: இந்தியாவின் பெரிய மெடிக்கல் நியூட்ரிஷியல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டிஷ் பயோலாஜிக்கல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பிஎஸ் ரெட்டி இவர் சொந்தமான இந்த பென்ட்லி முன்சேன் சென்டினரி எடிசன் இடபிள்யூபி காரை வைத்திருக்கிறார். இந்த காரின் விலை ரூ14 கோடி
இந்த கார் பென்ட்லி நிறுவனத்தின் 100வது ஆண்டுவிழாவை முன்னிட்டு வெறும் 100 கார்கள் தான் உலகம் முழுவதுமே தயாரிக்கப்பட்டது. அதில் ஒரு காரை தான் இவர் வைத்திருக்கிறார். இந்த கார் 6.75 லிட்டர் வி8 இன்ஜினை கொண்டது. இது 506 எச்பி பவரையும், 1020 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 8ஸ்பீடும் இசட் இ ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.5 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது. இந்த கார் அதிகபட்சமாக 296 கி.மீ வேகத்தில் சீறிப் பாயும் திறன் கொண்டது.

ரோல்ஸ்ராய்ஸ் பாந்தோம் சிரீஸ் 8 இடபிள்யூபி: காஸ்ட்லியான கார் என்றால் அம்பானி லிஸ்ட்டில் இல்லாமல் இருப்பாரா. இவரிடம் உள்ள ரோல்ஸ்ராய்ஸ் பாந்தோம் சிரீஸ் 8 இடபிள்யூபி கார் தான் இவரிடம் உள்ள காஸ்ட்லியான கார். இந்த காரின் விலை ரூ13.5 கோடி. இந்த விலை என்பது கஸ்டமைசேஷன் ஆப்ஷன் இல்லாத விலை தான் இந்த காரின் கஸ்மடைஷேனிற்கு ஏற்ப விலை அதிகரிக்கும். இவரிடம் உள்ள காரை இவர் நிச்சியம் கஸ்டைமசேஷன் செய்து தான் வாங்கியிருப்பார்.
இந்த ரோல்ஸ்ராய்ஸ் சிரீஸ் 8 இடபிள்யூபி காரில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ்டு வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 563 பிஎச்பி பவரையும் 900 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 8 ஸ்பீடு சேட்டிலைட் அட்டாச்சுடு டிரான்ஸ்மிஷன் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.4 நொடியில் பிக்கப் செய்து விடும். இவரிடம் இதே போல ஏகப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் இருக்கிறது.

மெக்லாரன் 765 எல்டி ஸ்பைடர்: இந்தியாவிலேயே இந்த மெக்லாரன் 765 எல்டி ஸ்பைடர் கார் ஒன்றே ஒன்று தான் இருக்கிறது. இந்த காருக்கு சொந்தக்காரர் ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நசீர் கான் கான் தான். இவரிடம் ஏராளமான சொகுசு கார்கள் இருக்கிறது.
இந்த மெக்லாரன் 765 எல்டி ஸ்பை் கார் ஒரு லிமடெட் எடிசன் கார். இந்த கார் வெறும் 765 கார்கள் தான் உலகம் முழுவதிலுமே தயாரிக்கப்பட்டது. இந்த காரின் விலை ரூ12 கோடி என சொல்லப்படுகிறது. இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போ சார்ஜ்டு வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 765 பிஎஸ் பவரையும், 800 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த கார் 7 ஸ்பீடு சீகொன்ஷியல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ரியர் வீல் டிரைவ் கார்.
மெர்சிடீஸ் எஸ் 600 கார்டு: இந்த பட்டியலில் அம்பானியின் இரண்டாவது கார் இருக்கிறது. இந்த கார் அம்பானியே அவரது சொந்த பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தி வருகிறார். இந்த மெர்சிடீஸ் எஸ் 600 கார் உலகிலேயே பாதுகாப்பான கார்களில் உள்ளது. இந்த காரில் உள்ளே இருப்பவர்களைச் சுற்றி எந்த விதமான தாக்குதல் வந்தாலும் திரும்பித் தாக்கி இந்த காரில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த எஸ்-கார்டு கார் விஆர் 10 லெவல் பாதுகாப்பைக் கொண்டது. 15 கிலோ வெடிபொருள் 2 மீட்டர் தூரத்தில் வெடித்தாலும் காருக்கு எதுவும் ஆகாது. இந்த கார் கீழ் பகுதியில் வெடித்தாலும் காருக்குள் இருப்பவரைப் பாதிக்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரை துப்பாக்கியால் சுட்டாலும் காருக்குள் இருப்பவருக்கு எதுவும் ஆகாது. இந்த கார் 6.0 லிட்டர் வி12 இன்ஜின் கொண்டது. இது 523 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது 7 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ10 கோடி
ரோல்ராய்ஸ் கல்லீனன்-பிளாக்பேட்ஜ்: இந்த பட்டியலில் உள்ள இரண்டாவது ரோல்ஸ்ராய்ஸ் கார் இது. இந்த ரோல்ஸ்ராய்ஸ் கல்லீனன் பிளாக்பேட்ஜ் காரை நாம் முன்னேரே பார்த்த ஐதிராபாத் தொழிலதிபர் நசீர் கான் தான் வைத்திருக்கிறார். இந்த காரின் விலை ரூ8.2 கோடி. இதே காரை அம்பானி குடும்பமும், நடிகர் ஷாரூக்கான் குடும்பமும் வைத்திருப்பதாகத் தகவல்.
இந்த காரை பொருத்தவரை 6.75 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 600 பஎச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு 4 வீல் டிரைவ் காராக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா உலகின் மிகப்பெரிய பணக்காரர்களைக் கொண்ட நாடு. இங்கு காஸ்ட்லியான கார்களுக்கு பஞ்சம் இல்லை. பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்க்கமாக இருப்பதால் இந்தியாவில் குறைந்த விலை கார்களுக்கு மவுசு அதிகமாக உள்ளது. ஆனால் கூடிய விரைவில் பாதுகாப்பான கார்கள் பக்கம் மவுசு மாறிவிடும். குறைந்தவிலையில் பாதுகாப்பற்ற காராக இருந்தால் அது இந்தியாவில் விற்பனையாகாமல் போகக் கூட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









