வரிசை கட்டி வரப்போகுது! இந்தியாவை கலக்க களம் இறங்கப்போகும் புதிய எலெக்ட்ரிக் கார்கள்!
இந்தியாவில் மிகப் பெரிய கார் நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த தங்களை தயார் படுத்தி வருகிறது. இப்படியாக அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகமாக போகும் எலெக்ட்ரிக் கார்களை பற்றி தான் இங்கே காணப் போகிறோம்.
எலெக்ட்ரிக் வாகனங்களின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறி உள்ளது. இந்தியாவில் ஸ்கூட்டர் செக்மெண்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகப்பெரிய புரட்சியை செய்துள்ளன. அதே நேரம் எலெக்ட்ரிக் கார்களுக்கும் நல்ல விதமான வரவேற்பு இருந்து வருகிறது. மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பாளர்கள் அடுத்த 2 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர். இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனங்கள் முதல் உலக அளவில் பிரபலமாக உள்ள சொகுசு பிராண்டுகள் வரை பல நிறுவனங்கள் தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகின்றனர்.
மாருதி, ஹுண்டாய், டாடா, மஹிந்திரா, டொயோட்டோ, கியா, ஹோண்டா போன்ற இந்தியாவில் பிரபலமான கார் நிறுவனங்களும், சொகுசு கார் நிறுவனங்களான ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ், பென்ஸ், வால்வோ, போர்ஷே மற்றும் ஜெஎல்ஆர் ஆகிய ஆகிய நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான் தற்போது இந்தியாவில் மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார் விற்பனையாளராக இருக்கிறது. இந்நிறுவனம் 80க்கும் அதிகமான மார்க்கெட் பங்கை வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் கார்களை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். ஏற்கனவே உள்ள கார்கள் போக புதிய எலெக்ட்ரிக் கார்களையும் அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் முயற்சித்து வருகிறது.
டாடா நிறுவனம் அடுத்ததாக பஞ்சு இவி காரை அறிமுகப்படுத்தப் போகிறது. அதைத் தொடர்ந்து கர்வ் கான்செப்ட் கார் மற்றும் ஹாரியர் இவி ஆகிய காரை 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். டாடா நிறுவனம் தனது கார்களில் 25 சதவீதத்தை எலக்ட்ரிக் கார்களாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாற்றவும், 50 சதவீதத்தை எலக்ட்ரிக் கார்களாக 2030 ஆம் ஆண்டுக்குள் மாற்றவும் முடிவு செய்துள்ளது.

மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து இவிஎக்ஸ் கான்செப்ட் காரை டொயோட்டாவின் 27 பிஎஸ் ஸ்கேட்போர்டு பிளாட்பார்மில் தயாரிக்கிறது. இந்த காரை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் இந்த கார் சிங்கிள் மற்றும் டூயல் மோட்டார் ஆகிய செட்டப்புகளில் விற்பனைக்கு வரவுள்ளது.
அடுத்ததாக என்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது இந்தியாவிற்கான கான்செப்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் பணியாற்றி வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தை பொறுத்தவரை ஹூண்டாய் கிரெக்டா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் பொதுவெளிகளில் டெஸ்டிங் செய்வதை பார்க்க முடிகிறது. இந்த கார் எப்பொழுது வேண்டுமானாலும் விற்பனைக்கு வரலாம்.
கியா நிறுவனத்தை பொருத்தவரை 2024 ஆம் ஆண்டு தனது இவி9 காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. வோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா ஆகிய நிறுவனங்கள் இதுவரை எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து பெரிதாக பேசவில்லை. ஆனால் இந்நிறுவனங்களும் விரைவில் அதன் எலெக்ட்ரிக் கார்கள் குறித்த அறிமுகத்தை செய்யும் என எதிர்பார்க்கலாம்.
ஹோண்டா நிறுவனத்தைப் பொறுத்தவரை சமீபத்தில் அறிமுகப்படுத்திய எலிவேட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆக இ-எலிவேட் என்ற காரை 2026 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அடுத்ததாக மகேந்திரா நிறுவனம். இந்நிறுவனம் தனது எஸ்யூவி மற்றும் பிஇ ரேஞ்ச் எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் தனது காலடித்தலத்தை எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பதிக்க உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது போக டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது ஆலையை அமைத்து கார்களை அறிமுகப்படுத்த இடத்தை தேடி வருகிறது.இதுபோக சர்வதேச அளவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் எலக்ட்ரிகாரர்களை அறிமுகப்படுத்த பல்வேறு முயற்சிகளை இறங்கி வருகின்றனர். இதனால் அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மிகப்பெரிய அளவில் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









