லம்போர்கினி கார்களே தோற்றுப்போகும்... இது எந்த மாடல் கார் என்று தெரிகிறதா? கார் மாடிஃபிகேஷன்...
லம்போர்கினி கார்கள் என்றதுமே நம் நினைவிற்கு முதலாவதாக வருவது சில லம்போர்கினி கார்களில் உள்ள 'கத்திரிக்கோல்' வடிவிலான கதவுகளே ஆகும். சிஸர் டோர்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இத்தகைய கதவுகள் லம்போர்கினி போன்ற மிக விலையுயர்ந்த கார்களிலும், அதிலிலும் குறிப்பாக செயல்திறன்மிக்க ஸ்போர்ட்ஸ் கார்களிலும் தான் பெரும்பாலும் வழங்கப்படுகின்றன.
லம்போர்கினி பிராண்டை பொறுத்தவரையில், இத்தகைய சிஸர் கதவுகளை விலை உயர்ந்த வி12 சூப்பர்கார்களில் காண முடியும். சிஸர் கதவுகளுக்காகவே ஒரு சிலருக்கு லம்போர்கினி கார்களை பிடித்திருக்கலாம். அத்தகையவர்களுள் ஒருவர் தனது டொயோட்டா க்ளான்ஸா காரை சிஸர் கதவுகளுடன் மாடிஃபை செய்துள்ளார். பெட்ரோல் ஹெட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த மாடிஃபை க்ளான்ஸா கார் குறித்த வீடியோவினை கீழே காணலாம்.
இந்த வீடியோவில் காட்டப்பட்டிருக்கும், மாடிஃபை செய்யப்பட்ட டொயோட்டா க்ளான்ஸா கார் ஆனது முந்தைய தலைமுறை மாடல் ஆகும். முழுவதுமாக கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ள இந்த க்ளான்ஸா காரை பார்க்கும்போது ஜப்பானின் ஜேடிஎம் கார்கள் தான் நினைவிற்கு வருகின்றன. காரின் வெளிப்பக்கம் ப்ளம் பர்பிள் நிற வ்ராப் ஆல் மூடப்பட்டுள்ளது. இதனை காட்டிலும் இந்த காரில் முக்கிய அப்கிரேடாக ஏற்கனவே கூறியதுபடி, சிஸர் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதற்கேற்ப காரின் மற்ற சில பாகங்களும் மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ஹெட்லேம்ப்கள் முழுவதும் சிவப்பு நிறத்திற்கும், அலாய் சக்கரங்கள் பிரத்யேகமான சில்வர் நிற ஃபினிஷிங் செய்யப்பட்டவையாகவும் உள்ளன. அலாய் சக்கரங்களில் கூடுதலாக ரிம்களின் லிப்கள் தங்க நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. முன்பக்க பொனெட்டில் பெரிய அளவில் ஸ்கூப்பை பார்க்க முடிகிறது.

அப்படியே பின்பக்கத்திற்கு சென்றால், மேற்கூரையின் மீது ஸ்பாய்லரும், பிரத்யேகமான டெயில்லேம்ப்களும் புதியதாக பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் அதேவேளையில் க்ளான்ஸாவில் டொயோட்டா வழங்கும் சில அம்சங்கள் நீக்கப்பட்டும் உள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், க்ளான்ஸா காரை சுற்றி வழங்கப்படும் க்ரோம் அலங்கரிப்புகளை கஸ்டமைஸ்ட் நிறுவனம் நீக்கியுள்ளது.
காரின் பக்கவாட்டில் புதிய சிஸர் கதவுகள் மற்றும் ப்ளம் பர்பிள் நிற பெயிண்ட்டை தவிர்த்து எந்த மாற்றமும் இல்லை. அதேபோல் காரின் என்ஜின் மற்றும் செயல்படுதிறனிலும் எந்த அப்கிரேடும் கொண்டுவரப்பட்டது போல் குறிப்பு இல்லை. பிரபலமான மாருதி சுஸுகி பலேனோ பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் ரீபேட்ஜ்டு வெர்சனாக க்ளான்ஸாவை கடந்த 2019இல் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

தோற்றத்தில் மட்டுமின்றி, பலேனோவில் வழங்கப்படும் பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் தான் டொயோட்டா க்ளான்ஸாவிலும் கொடுக்கப்படுகின்றன. இந்த வகையில் க்ளான்ஸாவில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 112 என்எம் டார்க் திறனையும், மைல்ட் ஹைப்ரீட் சிஸ்டத்துடன் கொடுக்கப்படும் 1.2 லிட்டர், கே12சி ட்யூவல் ஜெட் என்ஜின் அதிகப்பட்சமாக 90 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.
இந்த இரு பெட்ரோல் என்ஜின் உடனும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையான தேர்வாக வழங்கப்படுகிறது. அதேநேரம் ஹைப்ரீட் அல்லாத நேச்சுரலி அஸ்பிரேட்டட் என்ஜின் உடன் கூடுதலாக சிவிடி கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்படுகிறது. கடந்த 2022இல் க்ளான்ஸாவின் புதிய தலைமுறை மாடலை டொயோட்டா அறிமுகப்படுத்தியது. புதிய க்ளான்ஸாவில் என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்றாலும், மைல்ட்-ஹைப்ரீட் உடனான ட்யூவல் ஜெட் என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் 89 பிஎச்பி-இல் இருந்து 90 பிஎச்பி ஆக அதிகரிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications








