நாட்டுல இருக்குற விலை வாசிக்கு குடும்பத்தோட வெளியூர் போக இந்த கார் தான் பெஸ்ட்!
இந்தியாவில் கார் விற்பனை என்றால் தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வருவது எஸ்யூவி செக்மெண்ட் தான். இந்த எஸ்யூவி செக்மெண்டில் ஏகப்பட்ட கார்கள் அணிவகுத்து நிற்கின்றன இந்த கார்களில் அதிக மைலேஜ் தரும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் எதெல்லாம் என்பதை விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்திய மக்கள் குறைந்த விலை கார் என்பதை தாண்டி தற்போது தங்களுக்கான சொகுசு அம்சங்கள் மற்றும் தங்கள் குடும்பத்துடன் பயணிக்கும் விதமான இடவசதி அதே நேரம் சமூகத்தில் தங்களுக்கு ஒரு நல்ல அந்தஸ்து தரக்கூடிய ஒரு காரை தான் வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் ஏற்ற மாதிரியாக உருவாக்கப்பட்ட கார் தான் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்.

இந்தக் காரை வாங்க ஏகப்பட்ட மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஒரு காலத்தில் இந்த செக்மெண்டில் டீசல் கார்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் தற்போது டீசல் கார்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. டீசல் கார்களை மக்கள் தேர்வு செய்ய நல்ல மைலேஜ் தான் காரணமாக இருந்தது. ஆனால் இப்போது பெட்ரோல் தான் அதிம் கிடைக்கிறது என்பதால் அதிக மைலேஜ் தரக்கூடிய மிட்-சைஸ் எஸ்யூவி காரை பற்றி தான் இங்கே காண போகிறோம்
ஹோண்டா எலவேட்: ஹோண்டா நிறுவனத்தின் தற்போது உள்ள ஒரே எஸ்யூவி கார் இதுதான். இந்த கார் இதுவரை விற்பனைக்கு வரவில்லை. அறிமுகம் மட்டுமே ஆகியுள்ளது. இந்த கார் 16.11 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது. இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது 121 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் இது 6 ஸ்பீடு அல்லது சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா குஷாக்: ஸ்கோடா நிறுவனத்தின் மிகச்சிறந்த கார் இது. இந்த கார் லிட்டருக்கு 16.83 லிட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது இந்த கார் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க் கன்வெர்ட்டர் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் இன்ஜினில் ஐடியல் ஸ்டார்ட்/ ஸ்டாப் அம்சம் இருக்கிறது. அதனால் அதிக மைலேஜ் வரும்.
இந்த ஸ்கோடா குஷாகாரில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது.இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினில் இயங்கும் ஸ்கோடா கார் 17.83 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக உள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா: ஹூண்டாய் நிறுவனத்தின் சிறப்பாக விற்பனையாகும் காரில் இதுவும் ஒன்று. இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 115 எச்பி பவரை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 16.85 கிலோமீட்டர் மைலேஜை வழங்கும் திறன் கொண்டது.
கியா செல்டோஸ்: கியா நிறுவனத்தின் இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 115 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த காரின் ஃபேஸ்ஃலிப்ட் மாடலுக்கு முந்தைய மாடலில் 16.65 கிலோமீட்டர் மைலேஜ் தான் கிடைத்தது. ஆனால் தற்போது பேஸ்புக் மாடலில் 17.35 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கிறது.
இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் இருக்கிறது. இது 160 எச்பி பவரை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின் ஐஎம்டி அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இந்த இன்ஜினில் இயங்கும் கார் 17.80 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
போக்ஸ்வேகன் டைகுன்: இந்த காரை பொறுத்தவரை 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 18.18 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இதே டைகுன் காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் கொண்ட மற்றொரு வேரியண்ட் இருக்கிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸில் இயங்கும் திறன் கொண்டது. இது பழைய வெர்ஷனை விட 1.4 கிலோ மீட்டர் அதிக மைலேஜ் அதாவது 18.23 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது.
மாருதி கிராண்ட் விட்டாரா/டொயோட்டோ ஹைரைடர் : மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் சேர்ந்துதான் கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் கார்களை தயாரித்து வருகிறது. இந்த இரண்டு கார்களும் ஒரே விதமான இன்ஜின் ஆப்ஷனை கொண்டது தான். இதில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 103 எச்பி பவரை வெளிப்படுத்தும் இது அதிகபட்சமாக 21.12 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது.
இதே காரில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் இன்ஜினை எலக்ட்ரிக் மோட்டார் உடன் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது. இது இசிவிடி கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஸ்ட்ராங் ஹைபிரிட் காராக செயல்படும் இந்த கார் 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று பெட்ரோல் விற்பனையாகும் விலையில் மைலேஜ் என்பது மிக முக்கியமாக பார்க்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. இதில் வழங்கியுள்ள மைலேஜ் விபரங்கள் எல்லாம் ஏஆர்ஏஐ தரச் சான்றில் கொடுக்கப்பட்டுள்ள மைலேஜ் தான் இதை வாங்கி ஓட்டும் போது இதன் மைலேஜ் நீங்கள் ஓட்டும் இடம், ஓட்டும் நபர் மற்றும் ஓட்டும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடலாம்.


Click it and Unblock the Notifications









