2024 வரை வெயிட் பண்ணா உங்களுக்கு ராஜயோகம் தான்! இந்த கார் எல்லாம் வேற லெவல்ல அப்டேட் ஆக போகுது!
தற்போது சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் சில கார்கள் 2024ஆம் ஆண்டு அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இப்படியாக விரைவில் அப்டேட்டை பெறப்போகும் கார்களைப் பற்றி இங்கே விரிவாக காணலாம்.
பலருக்கு தற்போது இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் கார்களில் ஒன்றை வாங்கலாம் என்ற ஐடியா இருக்கும். இந்த பட்டியலில் உள்ள கார்களை இப்பொழுது நீங்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அடுத்த ஆண்டு இந்த காரின் புதிய அப்டேட் வெளியாகப் போகிறது. இப்பொழுது நீங்கள் காரை வாங்கி விட்டால் இந்த அப்டேட்டை எல்லாம் மிஸ் செய்ய வேண்டியது இருக்கும். இப்படியாக விரைவில் அப்டேட்டை பெற உள்ள கார்களைப் பற்றி காணலாம்.

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்: மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்யப்போகிறது. சர்வதேச அளவில் அப்டேட் செய்யப்பட்ட புதிய ஸ்விஃப்ட் கார் முதன்முறையாக இந்த மாத இறுதியில் டோக்கியோவில் நடக்கும் ஜப்பான் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த கார் இந்தியாவில் அடுத்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் உட்புறம் மற்றும் வெளிப்புறமாகியவை மாற்றப்பட உள்ளன.
புதிய தலைமுறை டிசையர்: மாருதி ஸ்விஃப்ட் காருக்கு அண்ணன் என இந்த காரை கூறலாம். இது ஒரு செடான் ரக கார். இந்த கார் ஸ்விஃப்ட் கார் போல அப்டேட் செய்யப்பட உள்ளது. அப்டேட் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் டிசையர் கார் 2024 ஆம் ஆண்டு இரண்டாம் பகுதியில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக இந்த காரில் உள்ள இன்ஜின் புதிதாக மாற்றப்பட உள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் ஸ்டிராங்க் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட உள்ளது. இந்த இன்ஜின் இந்த காரை 35- 40 கிலோமீட்டர் மைலேஜ் தரும் காராக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் தான் மிகப்பெரிய மாற்றம் என்பதால் டிசையர் காரை இப்பொழுது வாங்க நினைத்தால் கொஞ்சம் வெயிட் செய்யுங்கள்.
ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா காரை மிகப்பெரிய மாற்றங்களுடன் அப்டேட் செய்து வெளியிட முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த கார் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரை இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் டெஸ்ட் செய்வதை நம்மால் காண முடிகிறது.

ஹூண்டாய் நிறுவனம் இந்தக் காரின் வெளிப்புறப் பகுதியில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்ய உள்ளது. அதேநேரம் காரின் உட்புற பகுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதுபோக இந்த காரில் 2 லெவல் அடாஸ் சிஸ்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 160 பிஎஸ் பவரையும் 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த இன்ஜின் 6 ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7 ஸ்பீட் டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கார் சிறப்பான லுக்கில் இருக்கும்

கியா சோனட் ஃபேஸ்லிஃப்ட்: கியா நிறுவனம் தனது சோனட் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை 2024 ஆம் ஆண்டு முதல் பாதியிலேயே அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்தக் காரில் முன்பக்கம் ஏகப்பட்ட அப்டேட் செய்யப்பட உள்ளன. இந்தக் காரின் உட்பக்கமும் இந்த காரின் இன்ஜினும் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இருக்கும் காரின் தோற்றத்திலேயே சில மாற்றங்கள் மற்றும் செய்யப்பட்டு இந்த கார் விற்பனைக்கு வரும்.
புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ்: ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு தனது புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் காரை சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த காரில் வெளிப்புறத் தோற்றம் மாற்றப்பட்டு புதிய ஹோண்டா அக்கார்டு கார் போல மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் உட்புறப் பகுதியிலும் சில கவனிக்கத்தக்க மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த காரின் இன்ஜினிலும் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே உள்ள பட்டியலில் இருக்கும் கார்கள் ஏதாவது ஒன்றை இந்த ஆண்டு நீங்கள் வாங்குவதாக திட்டமிட்டு கொண்டிருந்தால் உங்கள் திட்டத்தை கொஞ்சம் தள்ளி போடுங்கள். இந்த கார் அப்டேடானவுடன் இந்த காரை நீங்கள் வாங்கினால் அந்த அப்டேட்டில் உள்ள புதிய அம்சங்கள் மற்றும் புதிய விஷயங்களை நீங்கள் அனுபவிக்கலாம். இப்போதே காரை வாங்கினால் ஒரு சில மாதங்களில் காத்திருக்க முடியாததால் நீங்கள் அதிக இழப்புகளை சந்திக்க நேரிடும்.


Click it and Unblock the Notifications









