கண்ணாடிய திருப்பினா எப்படி ஜீவா வண்டி ஓடும்... அதிக ரேஞ்ஜ் தர ஃபோர்டு கையாள போகும் புதிய யுக்தி!

"கண்ணாடிய திருப்பினா எப்படி ஜீவா வண்டி ஓடும்" எனும் இந்த காமெடி உடன் ஒத்துப்போகும் வகையில் ஓர் செயலை பிரபல கார் உற்பத்தி நிறுவனம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஃபோர்டு-ம் ஒன்று.

இந்த நிறுவனமே முன்னதாக சினிமா காமெடி டயலாக்கிற்கு ஏற்ப ஓர் செயலில் களமிறங்கி இருக்கும் கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இவ்வுலகிற்கு ஃபோர்டு நிறுவனத்தால் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஓர் கார் மாடலே எஃப்-150 லைட்னிங் ஆகும். இத்துடன், நிறுவனம் மஸ்டாங் மேக்-இ மற்றும் இ டிரான்சிட் ஆகிய கார் மாடல்களையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

Ford ev range

இந்த மாதிரியான சூழலிலேயே மின்சார வாகன உலகில் தன்னுடைய ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. இதற்கும், அஜித் படத்தில் வரும் காமெடி டயலாக்கை மேலே கூறியதற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம். இருக்கின்றது, அதைதான் கீழே பார்க்க இருக்கின்றோம்.

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறி இருந்தாலும், உலக நாடுகள் சிலவற்றில் மிக துடிப்பாக செயல்பட்டு வருகின்றது. குறிப்பாக, அமெரிக்காவில் மிகுந்த உத்வேகத்துடன் அது செயல்பட்டு வருகின்றது. வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக புதிய தொழில்நுட்பங்களையும், புதிய வசதிகளைக் கொண்ட வாகனங்களையும் விற்பனைக்குக் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.

Ford ev

அந்தவகையில், நிறுவனம் விரைவில் அதன் எலெக்ட்ரிக் கார்களை அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாக மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் அமெரிக்காவில் சில புதிய தொழில்நுட்ப வசதிகளை தன்னுடைய கார்களில் பயன்படுத்துவதற்கான காப்புரிமைப் பெற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த காப்புரிமை பற்றிய ஆவணங்களே தற்போது வெளியுலகில் கசந்திருக்கின்றது. நிறுவனம் தன்னுடைய எலெக்ட்ரிக் கார்களை அதிக ரேஞ்ஜ் தரும் வாகனமாக மாற்றுவதற்காக சில மாற்றங்களை அதன் எலெக்ட்ரிக் கார்களில் செய்ய இருக்கின்றது. குறிப்பாக, பேட்டரி பேக்கை கார்களின் மேற்கூரையை நிறுவ அது திட்டமிட்டு இருக்கின்றது.

இதன் வாயிலாக அதிக ரேஞ்ஜ் தரக் கூடிய தன்னுடைய எலெக்ட்ரிக் கார்கள் மாறும் என்கிற நம்பிக்கையை அது கொண்டிருக்கின்றது. அது எப்படி முடியும் என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். இந்த பேட்டரி பேக்கை ஓர் பவர் பேங்காகவே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது.

பொதுவாக எலெக்ட்ரிக் கார்களின் அடிப்பகுதியிலேயே பேட்டரிகள் நிலை நிறுத்தப்படும். இந்த செட்-அப்பிலேயே தன்னுடைய வருங்கால எலெக்ட்ரிக் கார்களையும் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. இதனுடன் சேர்த்து காரின் மேற்கூரையிலும் சில பேட்டரி பேக்கை நிலை நிறுத்த மேற்கூரையில் ரூஃப் பாக்ஸ் போன்று அமைப்பை அது பயன்படுத்த இருக்கின்றது.

இதிலேயே கூடுதல் பேட்டரிகள் நிலை நிறுத்தப்பட உள்ளன. இவற்றை பவர் பேங்க் போன்று சார்ஜ் செய்துக் கொண்டு, தேவையான நேரங்களில் காரின் முதன்மையான பேட்டரியுடன் இணைத்துக் கொள்ளலாம். இதன் வாயிலாக முதன்மையான பேட்டரிகளில் சார்ஜேற்றப்படும். இதன் வாயிலாக கூடுதலாக ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள முடியும்.

இத்தகைய செட்-அப்பிற்கான உரிமத்தையே அமெரிக்காவில் ஃபோர்டு பெற்றிருக்கின்றது. இந்த ஐடியா எந்த அளவிற்கு ஒர்க்காகும் என்பது தெரியவில்லை. ஒருவேளை நிறுவனம் இவ்வாறு செய்யும் எனில் காரின் பக்கவாட்டு பகுதிகளை அதிக உறுதியானதாக தயாரிக்க வேண்டி இருக்கும். அப்படி செய்தால் மட்டுமே பேட்டரியின் அதீத எடையை அதனால் தாங்கிக் கொள்ள முடியும்.

பல நேரங்களில் சார்ஜிங் மையங்களைக் கண்டறிவது மிகப் பெரிய விஷயமாக இருக்கின்றது. அதேநேரத்தில், சார்ஜிங் நிலையங்கள் கிடைத்தாலும் அங்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டி இருக்கின்றது. இத்தகைய சூழலை சுலபமாகக் கையாள இந்த கூடுதல் பேட்டரிகள் உதவியாக இருக்கும் என கூறப்படுகின்றது.

கூடுதல் பேட்டரிகளை தனியாக கழட்டிச் சென்று சார்ஜ் செய்து கொள்ள முடியுமாம். இந்த மாதிரியான சூப்பரான வசதிகளுடனேயே தன்னுடைய எலெக்ட்ரிக் கார்களை எதிர்காலத்தில் ஃபோர்டு விற்பனைக்கு வழங்கி இருக்கின்றது. இதுதவிர தன்னுடைய எலெக்ட்ரிக் கார்களில் இன்னும் சில யுக்திகளையும் அதிக ரேஞ்ஜ் தருவதற்காக பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக காப்புரிமை ஆவணங்களும் இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன உலகின் எதிர் காலமாக மின்சார வாகனங்கள் இருக்கின்றன. எனவேதான் மின்சார வாகனம் சார்ந்து புதுமையான அம்சங்களைச் சேர்க்கும் முயற்சியில் வாகன உற்பட்டி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே ஃபோர்டு நிறுவனத்தின் சூப்பரான பிளான் பற்றிய தகவல் வெளியாகி உள்ளன.

ஃபோர்டு நிறுவனத்தின் இந்த செயல் அதன் எலெக்ட்ரிக் கார்களின் விலையை அதிகரிக்கச் செய்யும். இருக்கின்ற விலையிலேயே எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்க இது துளியளவும் உதவாது. இதன் அடிப்படையிலேயே "கண்ணாடிய திருப்பினா எப்படி ஜீவா வண்டி ஓடும்" எனும் காமெடி டயலாக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, June 12, 2023, 12:13 [IST]
English summary
Information leaked about new technology that ford planning to use in its future e car
மேலும்... #ஃபோர்டு #ford
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+