Innova Crysta அல்லது Fortuner கார் வாங்க போறீங்களா? ஷோரூம் எல்லாம் போக வேணாம் வீட்ல இருந்தே வாங்கலாம்!

டொயோட்டா இன்னோவா க்ரைஸ்டா மற்றும் டொயோட்டோ ஃபார்ச்சூனர் கார்களை வாங்க போறீங்களா? இனிமே நீங்க டொயோட்டா ஷோரூமை தேடி போகனும்னு அவசியம் இல்லை வீட்ல இருந்தே ஆர்டர் போட்டா கார் உங்கள் வீடு தேடி வரும். இது எப்படி என காணலாம் வாருங்கள்.

டொயோட்டா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு வெப் ஆன் வீல்ஸ் என்ற இணையதளத்தை உருவாக்கியது. இந்த தளத்தை ஒரு விர்சுவல் ஷோரூமாகவே உருவாக்கியுள்ளது. இதன் மூலம் டொயோட்டா நிறுவனத்தின் கார்களை உருவாக்கியுள்ளது.

Innova Crysta and Fortuner on web on Wheels

இந்நிலையில் தற்போது இந்த தளத்தில் டொயோட்டா நிறுவனம் தனது டொயோட்டா இன்னோவா க்ரைஸ்டா, மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய கார்களையும் சேர்த்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர் கார் வாங்கும் முழு ஸ்டெப்களையும் ஆன்லைனிலேயே செய்துவிட முடியும்.

இப்படியாக புக்கிங் செய்யப்பட்டு வாங்கப்படும் கார்கள் வாடிக்கையாளரின் வீட்டிற்கே நேரடியாக வந்து டெலிவரி செய்யப்படும். இந்த காரை புக் செய்திலிருந்து அது டெலிவரிவரை முழுவதையும் இந்த வெப் ஆன் வீல்ஸ் தளத்திலேயே டிராக் செய்து கொள்ள முடியும்.

இந்த தளத்தில் கார் வாங்கும் போது காரின் அம்சங்கள், அதன் உட்புறம், வெளிப்புறம் காரின் தகவல்கள் உள்ளிட்ட பல விஷயங்களை ஆன்லைனிலேயே காண முடியும். மேலும் காரில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள், டொயோட்டாவின் ஆக்சஸரீஸ்களை சேர்ப்பது, நீடிக்கப்பட்ட வாரண்டி ஸ்கீம், மற்றும் சர்வீஸ் பிளான் ஆகியவற்றையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

இதே போல வாடிக்கையாளர்கள் ஏற்கனவே வைத்திருக்கும் காரை விற்பனை செய்துவிட்டு இந்த காரை வாங்க நினைத்தால் பழைய காரை விற்பனை செய்வதையும் இந்த தளத்திலேயே செய்ய முடியும். எக்ஸ்சேஞ்ச் விலை உள்ளிட்டவற்றையும் ஆன்லைனிலேயே பெற முடியும்.

இது போக கார் வாங்குவதற்கான பைனான்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் ஆப்ஷன்களையும் இந்த தளத்திலேயே தேர்வு செய்ய முடியும். கையிலிருந்து செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தவும் ஆன்லைன் பேமென்ட் கேட்வேகள் இருக்கிறது. இந்த தளத்தில் ஆர்டர் செய்த பிறகு அதன் நிலை குறித்த தகவல்கள் வாட்ஸ் அப் மற்றும் இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.

தற்போது இந்த வீல்ஸ் ஆன் வெப் தளத்தில் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களான கிளான்ஸா, அர்பன் க்ரூஸர் ஹைரைடர், டொயோட்டா இன்னோவா, இன்னோவா ஹைகிராஸ், ஹில்லக்ஸ், ஃபார்ச்சூனர், லெஜென்டர், கேம்ரி, வில்ஃபயர், ஆகிய கார்கள் தற்போது உள்ளது.

அதே நேரத்தில் பெட்ரோல் ஹைபிரிட் இன்னோவா ஹைகிராஸ் மற்றும் லேண்ட் க்ரூஸர் எல்சி 300 ஆகிய கார்கள் இந்த தளத்தில் ஆன்லைன் மூலம் வாங்கும் ஆப்ஷனில் இல்லை. இவை எல்லாம் விரைவில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று ஆன்லைன் மூலம் பொருட்களை பார்த்து ஆர்டர் செய்யும் பழக்கம் மக்கள் மத்தியில் சகஜமான ஒன்றாக விட்டது. தற்போது கார் உள்ளிட்ட அதிக விலை பொருட்களை ஆன்லைனில் வாங்கும் ஆப்ஷனை கூட மக்கள் தேர்வு செய்ய விரும்கின்றனர். இது மக்களுக்கு எளிதாக இருக்கிறது. குறிப்பாக ஷோரூமிலிருந்த தொலைவில் வசிப்பவர்களுக்கு இது நல்ல சான்ஸ். தொடர்ந்து அனைத்து நிறுவனங்களும் இது போன்ற ஒரு ஆப்ஷனை உருவாக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 19, 2023, 16:00 [IST]
English summary
Innova crysta and fortuner are available in web on wheels online
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+