மாருதினு எழுதி வச்சு டப்பாவ வித்தாகூட நம்ம ஆளுங்க வாங்குவாங்க போலிருக்கே.. இன்விக்டோவிற்கு குவியும் புக்கிங்!

மாருதி சுஸுகி இன்விக்டோ-விற்கு புக்கிங் மழை குவிந்துக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. வெகுசமீபத்தில் இதற்கான புக்கிங்குகள் தொடங்கப்பட்ட நிலையில் இப்போதே பல ஆயிரக் கணக்கான புக்கிங்கை இன்விக்டோ எட்டி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகி நிறுவனம் இன்விக்டோ எம்பிவி ரக காரை சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இன்விக்டோ, இது ஓர் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எம்பிவி ரக காராகும். இதனை டொயோட்டா இன்னோவா ஹைகிராஸின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல் என்றும் கூறலாம்.

Maruti suzuki invicto launch front profile

இந்த காரையே இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது, மாருதி சுஸுகி. மேலும், கடந்த 19 ஆம் தேதி அன்று இந்த காருக்கான புக்கிங் பணிகளையும் நிறுவனம் தொடங்கியது. இந்த நிலையிலேயே மிக அதிகபட்ச எண்ணிக்கையில் தற்போது இன்விக்டோவிற்கு புக்கிங் குவிந்திருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி 6,488 யூனிட்டுகளுக்கு புக்கிங் கிடைத்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த தகவல் ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், மாருதி சுஸுகினு எழுதி ஓர் டப்பாவை அவங்க வித்தாகூட இந்தியர்கள் அதையும் வாங்கிடுவாங்கபோல என நினைக்கும் வகையிலேயே தற்போது இன்விக்டோவிற்கு கிடைத்திருக்கும் புக்கிங்குகளின் எண்ணிக்கை அமைந்திருக்கின்றன.

Maruti suzuki invicto side view

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸை தழுவி மாருதி சுஸுகி இன்விக்டோ கார் உருவாக்கப்பட்டு இருந்தாலும், ஒரு சில விஷயங்களில் அது மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, கிரில், ஹெட்லைட், டெயில் பகுதி மற்றும் பம்பர் உள்ளிட்டவை இன்விக்டோ புதிய தோற்றம் கொண்டதாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

என்னதான் இதுபோன்று பல மாற்றங்களை மாருதி சுஸுகி இந்த காரில் செய்திருந்தாலும், தூரத்தில் இருந்து பார்க்கும் போது இந்த இன்விக்டோ, இன்னோவா ஹைகிராஸை போன்றே காட்சியளிக்கின்றது. ஆனால், நெருங்கி வந்து பார்க்கும்போது இது அது அல்ல என்பது மிக துள்ளியமாக தெரியும்.

Maruti suzuki invicto back view

ஜீட்டா பிளஸ் 7 சீட்டர், ஜீட்டா பிளஸ் 8 சீட்டர் மற்றும் ஆல்ஃபா பிளஸ் 7 சீட்டர் ஆகிய தேர்வுகளிலேயே இன்விக்டோ விற்பனைக்குக் கிடைக்கும். இதன் ஆரம்ப விலை ரூ. 24.79 லட்சம் ஆகும். ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட மோட்டார் மோட்டார் தேர்வுடன் மட்டுமே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

அதாவது, 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஆகியவையே இன்விக்டோவில் அதன் இயக்கத்திற்காக வழங்கப்பட்டு இருக்கின்றது. இவை இரண்டும் இணைந்து 186 பிஎஸ் மற்றும் 206 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதன் மின் மோட்டார் இயங்குவதற்கு என தனி சிறிய பேட்டரி பேக்கும் இன்விக்டோவில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Maruti suzuki invicto side beauty

இன்விக்டோ ஓர் முன் பக்க வீல் இயக்கம் கொண்ட வாகனமாகும். இதில் இ-சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் மைலேஜ் திறன் லிட்டர் ஒன்றிற்கு 23 கிமீ என கூறப்படுகின்றது. நிஜ உலகில் இந்த மைலேஜ் திறன் மாறுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்விக்டோ ஓர் பிரீமியம் தர அம்சங்கள் நிறைந்த கார் மாடல் ஆகும். அடாஸ் தொழில்நுட்பம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் 10.1 அங்குல தொடுதிரை, 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட், பவர்டு வசதிக் கொண்ட டிரைவருக்கான இருக்கை என எக்கசக்க அம்சங்கள் அதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்டவையும் இன்விக்டோவில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், பாதுகாப்பு அம்சங்களையும் இந்த காரில் மிக தாராளமாக பெற்றிருக்கின்றது. அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள் ஸ்டாண்டர்டு அம்சமாகவும், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட எக்கச்சக்க அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த கார் ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். நெக்ஸா ப்ளூ, ஸ்டெல்லர் ப்ரோன்ஸே, மெஜஸ்டிக் சில்வர், மெஜஸ்டிக் ஒயிட் ஆகியவையே அவை ஆகும். இத்தகைய அம்சங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கும் இன்விக்டோவிற்கு மிக அமோகமான புக்கிங் வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிற தயாரிப்புகளை போலவே இந்த காரும் மிக சூப்பரான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான பிள்ளையார் சுழியாகவே தற்போது கிடைத்திருக்கும் 6,488 புக்கிங்கை அது பெற்றிருக்கின்றது. எனவே விற்பனையில் அது சக்கைப்போடு போடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Article Published On: Friday, July 7, 2023, 18:34 [IST]
English summary
Innova hycross based maruti invicto received 6488 bookings in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X