4ஆண்டுகள் மெஷின் இல்லாமல் கைகளால் உருவாக்கப்பட்ட கார்! இதோட அழகுக்கு முன்னால மத்த ரோல்ஸ்ராய்ஸ் காருலாம் வேஸ்ட்
மிகவும் ஆடம்பரமான வாகனங்களை தயாரிப்பதில் பெயர்போன நிறுவனமாக ரோல்ஸ் ராய்ஸ் இருக்கின்றது. இந்த நிறுவனம் இப்போது ஓர் தனித்துவமான கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் மாடலின் நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் (Rolls-Royce Phantom extended wheelbase) பதிப்பை அடிப்படையாகக் கொண்ட ஓர் புதிய சொகுசு வாகனத்தையே அறிமுகம் செய்திருக்கின்றது.
ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் சின்டோபியா (Rolls-Royce Phantom Syntopia) எனும் மாடலையே நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இது மிகவும் சூப்பரான ஸ்டைல் மற்றும் அம்சங்களால் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் தனித்துவமான ஸ்டைலுக்காக ஐரிஸ் வான் ஹெர்பன் எனும் உலக புகழ்பெற்ற டச்சு ஆடை வடிவமைப்பாளர் இணைந்திருக்கின்றார் என்பது கூடுதல் சிறப்பு தகவல் ஆகும்.

ஆமாங்க, இவரே இந்த காரின் உட்பகுதியை மிகவும் அழகானதாகவும், வேறு எந்த கார் மாடலையும் பிரதிபலிக்காத வகையிலும் வடிவமைத்து உள்ளார். இவரே ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் சின்டோபியா ஆடம்பரம் மற்றும் தற்கால ஃபேஷன் ஆகிய இரண்டையும் தாங்கிய சொகுசு காராக தோன்றவும் காரணமாக இருக்கின்றார்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்த காரை ஹாட் கோச்சர் ஃபேஷன் தத்துவத்தை பயன்படுத்தி உருவாக்கி இருப்பதாக கூறுகின்றது. சுமார் நான்கு ஆண்டுகளாக இந்த காரை உருவாக்கி வந்ததாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. 2018 லேயே இதன் உருவாக்க பணிகளை நிறுவனம் தொடங்கிவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்த காருக்குள் இடம் பெற்றிருக்கும் சில வடிவங்கள் இயற்கைக்கு மாறுபட்டதாக இருக்கின்றன. இதுவே காரின் தனித்துவமான சிறப்பாகும். இத்தகைய வடிவமைப்பை கார் முழுவதற்கும் கொண்டு வருவதற்கே இத்தனை ஆண்டுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றது. நீர் தேக்கங்களில் காற்று மோதும்போது தண்ணீரில் ஓர் விதமான அலைகள் உருவாகும்.
இதனை லேசாக பிரதிபலிக்கும் வகையில் காரின் உட்பகுதியில் துணிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இருக்கையில், காரின் உட்பக்க மேற்கூரை மற்றும் பக்கவாட்டு பகுதி என பல்வேறு பகுதிகளில் இதே ஸ்டைலிலேயே கார் காட்சியளிக்கிறது. இந்த மாதிரியான ஓர் ஸ்டைலில் வேறு எந்த கார் மாடலையும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒற்றை தோல் தாளில் இருந்தே இதன் உட்பக்க மேற்கூரை ஷீட் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மெஷின்கள் எதுவும் பயன்படுத்தாமல் கைகளினாலேயே துள்ளியமாக வெட்டப்பட்டு, காரின் உட்பக்கத்திற்கு ஏற்றவாறு அது வெட்டப்பட்டு இருக்கின்றது. இதனுடனேயே திரவம் போன்ற முப்பரிமாண தோற்றத்தை வழங்கும் பிற அம்சங்களும் சேர்க்கப்பட்டு உள்ளன.
இந்த பணிக்கு மட்டுமே 700 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதாக தயாரிப்பு குழு தெரிவித்து உள்ளது. பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் காரின் உட்பக்க மேற்கூரை விண்வெளியை பிரதிபலிக்கும் வகையில் ஸ்டார் லைட்டுகள் மட்டுமே பொருத்தப்பட்டு இருக்கும். ஆனால், இந்த காரோ முற்றிலுமான தனித்துவமான தோற்றத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஸ்டார் லைட்டுகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் காரின் உட்பக்கம் மற்றும் வெளிப்பக்கத்திற்கும் மிகவும் அழகிய வண்ணங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த வண்ணம் நீங்கள் பார்த்த உடன் ஓர் மன அமைதியை வழங்கக் கூடியதாகவும், கண்களைக் கவர கூடியதாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
பர்பிள் (Purple), மெஜென்டா (magenta), நீலம் (Blue) மற்றும் கோல்டு (Gold) ஆகிய நிறங்களே காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பெயிண்டுகளே காரை கண்ணாடி போல் மினு மினுக்க செய்கின்றன. மிகவும் பிரீமியமான பெயிண்ட் வேலை இதுவாகும். இந்த பெயிண்ட் வேலையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதை மீட்டெடுக்கவே பல லட்சங்களை செலவு செய்ய வேண்டி இருக்கும்.

அந்த அளவிற்கு மிகவும் காஸ்ட்லியான பெயிண்ட் இது ஆகும். இந்த நிறம் லைட் அது மீது படுவதற்கு லேசாக மாறுபட்டு காட்சியளிக்கும். அதாவது வண்ணம் மாறும் பண்புக் கொண்ட பெயிண்ட் இதுவாகும். காரின் உட்பகுதியிலும் இந்த திறனை காண முடிகின்றது. இதன் உட்பக்கத்தை ஐரிஸ் வான் ஹெர்பன் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கைவினைஞர்கள் பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவே பிரத்யேகமாக வடிவமைத்து இருக்கின்றது.
காரின் ஹைட்லைனர் கண்ணாடி ஆர்கன்சாவால் செய்யப்பட்ட 162 இதழ்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பணிகள் நிறைவுற 300 மணி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. அனைத்தும் மெஷின்கள் இல்லாமல் கைகளினாலேயே செய்யப்பட்டு உள்ளன. இதேபோல், 995 ஃபைப்ரோப்டிக் நட்சத்திர லைட்டுகள் ஹெட்லைனரில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளால் இந்த கார் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கின்றது. இத்தகைய காரையே தற்போது ரோல்ஸ் ராய்ஸ் வெளியீடு செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









