படுத்துக்கிட்டே டிராவல் பண்ணலாம்.. ரோல்ஸ்ராய்ஸ், பென்ஸ் காரை வாங்கி காச வீணாக்காதீங்க!
சொகுசு வசதிகளை கார்களில் வாரி வழங்குவதில் பெயர்போன நிறுவனங்களாக மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஓர் காரை உருவாக்கி பன்னாட்டு வாகன உற்பத்தியாளர்களை மிரள செய்திருக்கின்றது, சீனாவைச் சேர்ந்த உல்லிங் (Wuling) நிறுவனம்.
உல்லிங் ஓர் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இதுவரை எந்த காரிலும் காணப்படாத அம்சங்களை தன்னுடைய புத்தம் புதிய கார் மாடலான பிங்கோ (Bingo)-வில் வழங்கி இருக்கின்றது. இது ஓர் ஹேட்ச்பேக் ரக எலெக்ட்ரிக் காராகும். இந்த காரில் ஏர்-பெட் (Inflatable Airbed) வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த பெட்டை தேவை என்றால் காற்றை நிரப்பி பயன்படுத்திக் கொள்ள முடியும். தேவைப்படாத நேரங்களில் காற்றை வெளியேற்றிவிட்டு பெட்டை மட்டும் மடித்து, சுருட்டி வைத்துக் கொள்ள முடியும். இத்தகைய வசதியை இதுவரை வெறு எந்த கார் உற்பத்தியாளர்களும் அவர்களின் தயாரிப்பு(கார்)-களில் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதேவேளையில், சில முன்னணி கார் உற்பத்தியாளர்கள் மோட்டார்ஹோம் வாகனங்களில் இந்த வசதியை வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், கார்களில் இத்தகைய அம்சத்தை ஓர் கார் உற்பத்தியாளர் வழங்குவது இதுவே முதல் முறையாகும். இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய வாகனமாகவே உல்லிங் பிங்கோ ஹேட்ச்பேக் ரக எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

இதில் வழங்கப்பட்டிருக்கம் பல அம்சங்கள் பன்னாட்டு வாகன உற்பத்தியாளர்களையே வியக்க செய்யும் வகையில் இருக்கின்றது. அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஷாங்காய் ஆட்டோ ஷோ (Shanghai Auto Show)-வில் இந்த சூப்பரான எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்ய உல்லிங் நிறுவனம் திட்டம் போட்டு இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, அடுத்த சில மாதங்களிலேயே விற்பனைக்குக் கொண்டு வரவும் அது இலக்கு நிர்ணயித்திருக்கின்றது. பிங்கோவில் டிராவல் செய்யும்போது ஃபன்னான அனுபவம் கிடைக்கும் என தயாரிப்பு நிறுவனமான உல்லிங் தெரிவித்துள்ளது. இதற்கேற்ப எண்ணற்ற அம்சங்களை பிங்கோவில் உல்லிங் வழங்கி இருக்கின்றது. இந்த காரை நகர்புற இளம் பெண்களைக் கருத்தில் கொண்டே உல்லிங் தயாரித்திருக்கின்றது.

இதன் அடிப்படையிலேயே சில பிரத்யேக அம்சங்களை பிங்கோவில் உல்லிங் வழங்கியும் இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக மூன்று நிறுவனங்கள் இணைந்தே பிங்கோ-வை தயாரித்து இருக்கின்றன. அந்தவகையில், உல்லிங் உடன் இணைந்து எஸ்ஏஐசி (SAIC) மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் (GM) ஆகிய நிறுவனங்களும் பிங்கோவிற்காக இணைந்திருக்கின்றன.
வடிவமைப்பு, உருவாக்கம் என அனைத்திலும் இந்த நிறுவனங்களும் தங்களது முக்கிய பங்களிப்பை வழங்கியிருக்கின்றன. படுத்துக் கொண்டே பயணிக்கும் வசதி மட்டுமே இந்த எலெக்ட்ரிக் காரின் மிக முக்கியமான சிறப்பு வசதி இல்லைங்க, இன்னும் பல்வேறு சிறப்புகள் மிக தாராளமாக பிங்கோவில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
அந்தவகையில், மெர்சிடிஸ் கார்களில் காணப்படுவதைப் போல இரட்டை திரை, ஃபாக்ஸ் லெதரால் போர்த்தப்பட்ட இருக்கைகள், சிறிய மற்றும் அதிக தடிமனான ஸ்டியரிங் வீல் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்களினால் காரின் உட்பகுதி ரெட்ரோ லுக்கிற்கு உயர்த்தப்பட்டு இருக்கின்றது.
இதற்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக காரின் உட்பக்கத்திற்கு கர்வி மற்றும் வட்ட தீம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. காரில் கொடுக்கப்பட்டு இருக்கும் திரையில் டிஜிட்டல் அசிஸ்டண்ட் மற்றும் இணைப்பு வசதிகள் கொடுக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு டிரைவ் செலக்டர் மற்றும் எலெக்ட்ரானிக் ஹேண்ட்பிரேக் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், காரின் இருக்கைகள் இடையில், பின் பக்கம் என பல பகுதிகளில் ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. பின் பக்கத்தில் மட்டும் 790 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இன்ஃபிலேட்டர் ஏர்-பெட்டை விரித்துக் கொள்ள ஏதுவாக இந்த மிக பெரிய ஸ்டோரேஜ் வசதிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இங்கு கேம்ப் செய்வதற்கு பொருட்களையும் வைத்துக் கொள்ள முடியும்.
இதுதவிர, வாகனத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் காருக்குள் ஸ்டோர் செய்து வைத்து கொள்ள முடியும். ஆகையால், நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் அடிக்கடி சுற்றுலா - கேம்பிங் போன்ற பயணங்களை மேற்கொள்வோருக்கு ஏதுவான வாகனமாக இது இருக்கும். ஏர் பெட்டுடன் சேர்த்து தலையணைகள் மற்றும் ரேடியோக்களையும் இந்த காரில் உல்லிங் வழங்கி இருக்கின்றது.
உல்லிங்க நிறுவனம் பிங்கோ இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. சிங்கிள் மோட்டார் தேர்வில் கிடைக்கும் பிங்கோ, ஓர் ஃபுல் சார்ஜில் 203 கிமீ ரேஞ்ஜையும், அதிகபட்சமா மணிக்கு 100 கிமீ வேகத்திலும் பயணிக்கும். இதுவே இதன் டாப் ஸ்பீடு ஆகும். பிங்கோவின் மற்றொரு தேர்வு அதிக பவர்ஃபுல்லானது ஆகும்.
அதில் பொருத்தப்பட்டு இருக்கும் மின் மோட்டார் 67 பிஎச்பி மற்றும் 150 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், அது ஓர் முழு சார்ஜில் 333 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 31.9 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த எலெக்ட்ரிக் காருக்கு 70 ஆயிரம் முதல் 1 லட்சம் யுவான்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 8.29 லட்சம் ரூபாய் தொடங்கி 11.60 லட்ச ரூபாய் வரையிலான விலையில் விற்கப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








