கார்களுக்கு பெயர் வைக்கும் போது எப்படி பெயரை தேர்வு செய்வார்கள்? அதுக்கு இப்படியெல்லாம் அர்த்தம் இருக்குமா?

இன்று சாலைகளில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ஒவ்வொரு வாகனத்தையும் ஒரு வாகன தயாரிப்பு நிறுவனம் தயாரித்து விற்பனை செய்திருக்கும் ஒரே நிறுவனம் பல விதமான வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்யும் அதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அந்நிறுவனத்தின் பெயருடன் அந்த வாகனத்திற்கு ஒரு பெயர் வைப்பது வழக்கம் இன்று பல வாகனங்கள் அதன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரைச் சொல்வதை விட அந்த வாகனத்தின் பெயரைச் சொன்னால் தான் தெரியும்.

ஒரு வாகனத்திற்குப் பெயர் வைக்கும் போது ஏதோ வாய்க்கு வந்த பெயரை வைத்து விடுவதில்லை. அதற்குப் பின்னால் பல ஆய்வுகள் நடத்தப்படுகிறது. இன்று மார்கெட்டில் விற்பனையில் இருக்கும் பல வாகனங்களுக்கு விலங்குகள் அல்லது பறவைகளின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விலங்கு/பறவைக்கு ஒரு குணம் இருக்கும் அவர்கள் தயாரித்திருக்கும் வாகனத்தின் தன்மை/ டிசைனை அந்த குணத்துடன் ஒப்பிட்டு பெயரை வைப்பார்கள். இப்படியாக வைக்கப்பட்ட பெயர்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை இங்கே காணலாம்.

கார்களுக்கு பெயர் வைக்கும் போது எப்படி பெயரை தேர்வு செய்வார்கள்? அதுக்கு இப்படியெல்லாம் அர்த்தம் இருக்குமா?

ஹூண்டாய் ஐயானிக் - Hyundai ioniq - ஆங்கில வார்த்தைகள் திரிபு

ஹூண்டாய் நிறுவனம் ஐயானிக் சிரீஸில் கார்களை களம் இறக்கி வருகிறது. இந்த பெயரை வைப்பதற்கான காரணம் இது ஒரு எலெக்ட்ரிக் கார் இதில் பயன்படுத்தப்படும் பேட்டரி லித்தியம்-அயான், இந்த அயான் என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டனர். இந்த கார் ஒரு தனித்துவமான லுக்கை பெற்றுள்ளது என்பதைக் குறிப்பிடும் வகையில் Unique என்ற ஆங்கிலவார்த்தையில் உள்ள iq என்பதை எடுத்து ஆங்கிலத்தில் ioniq என வைத்துவிட்டனர்.

ராயல் என்ஃபீல்டு தண்டர் பேர்டு- Royal Enfield Thunder Bird - புராண கதை பறவை

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது தண்டர் பேர்டு என்ற பைக்கிற்கு புராண கதைகளில் வரும் ஒரு பறவையின் பெயரை வைத்துள்ளது. அந்த பறவையின் குரல் ஒரு இடி விழுந்தது போல இருக்கும் என்பதால் அந்த பெயர் வந்தது. ராயல் என்ஃபீல்டின் இந்த பைக் சத்தத்திற்குப் பிரபலம் என்பதால் அதை ஒப்பிடும் வகையில் இந்த பெயரை வைத்துள்ளனர்.

டொயோட்டா யாரீஸ் - Toyota Yaris

டொயோட்டா நிறுவனம் யாரீஸ் என தனது காருக்கு பெயர் வைத்ததற்குப் பின்னால் ஒரு கிரேக்க வரலாறு இருக்கிறது. கிரேக்கத்தில் சாரீட்டீஸ் என்ற ஒரு கடவுள் வணங்கப்படுகிறது. அதில் சாரீஸ் என்பது ஒரு கடவுளின் பெயர். இந்த கடவுள் அழகு மற்றும் மற்றவர்களை ஈர்க்கும் தன்மைக்கான கடவுளாகப் பார்க்கப்படுகிறது. இந்த கடவுளின் பெயரில் சா என்ற வார்த்தைக்குப் பதிலாக யா என்ற வார்த்தையை மாற்றியுள்ளனர் ஜெர்மன் மொழியில் யா என்றால் ஆம் என அர்த்தம் அதை வைத்து யாரீஸ் என அந்த காருக்கு பெயரிட்டுள்ளனர்.

ஜாக்குவார் - Jaguar - சிறுத்தை

ஜாக்குவார் ஒரு கார் பிராண்ட் இந்த கார் பிராண்டிற்கு இந்த பெயர் வர காரணம் ஒரு விலங்கு, ஜாக்குவார் என்ற அந்த விலங்கின் பெயரையே இந்த பிராண்டிற்கு வைத்துவிட்டனர். இதற்குக் காரணம் இந்த பிராண்டு கார்களில் உள்ள முகப்பு பகுதியைப் பார்க்கும் போது அப்படியே ஜாக்குவார் விலங்கை போல இருக்கும் என்பதால் இதை வைத்துள்ளனர்.

அஸ்டான் மார்டின் - Aston Martin - நிறுவனர் பெயர்

வெளிநாடுகளில் பிரபலமான கார் நிறுவனம் அஸ்டான் மார்டின். இந்நிறுவனத்தைத் துவங்கியவர் பெயர் லியோனியல் மார்டின். இவர் அஸ்டான் ஹில் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இதைக் குறிப்பிடும் வகையில் அவரே தன் நிறுவனத்திற்கு அஸ்டான் மார்டின் எனப் பெயர் வைத்துக்கொண்டார்

டாடா அல்ட்ராஸ் - TATA Altroz - பறவை பெயர்

டாடா நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகும் கார்களில் ஒன்று அல்ட்ராஸ், இந்த அல்ட்ராஸ் என்ற பெயர் அல்பட்ராஸ் என்ற பறவையின் பெயரிலிருந்து வந்தது. அந்த பறவை இந்த உலகையே வெறும் நாட்களில் சுற்றி வந்துவிடும். அப்படிப்பட்ட பறவையின் பெயரைத் தான் இந்த காருக்கு வைத்திருக்கின்றனர்.

டாடா சுமோ - Tata Sumo - அதிகாரி பெயர்

டாடா நிறுவனத்தின் மறக்க முடியாத தயாரிப்பு இந்த சுமோ எம்பிவி கார். இந்த பெயர் அந்நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநராக இருந்த சுமந்த் மூல்கவ்கர் என்பதிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆங்கிலத்தில் இவர் பெயரில் உள்ள முதல் மூன்று எழுத்துக்களான SUM என்ற எழுத்தையும், O என்பதை இவரது இரண்டாவது பெயரிலிருந்தும் எடுத்து சுமோ எனப் பெயரிட்டனர். மக்களுக்கு இந்த சுமோ எனப் பெயரைக் கேட்டதும் சுமோ குத்துச்சண்டையைக் குறிக்கும் வகையில் வைக்கப்பட்டதாக நினைத்துக்கொண்டனர்.

லாம்போர்கினி உரூஸ்- Lamborghini Urus - காட்டுஎருமை

லாம்போர்கினி உருவாக்கிய உரூஸ் காருக்கு இப்படியாகப் பெயர் வரக் காரணம் ஒரு விலங்கு தான். அந்த விலங்கின் பெயர் தான் உரூஸ், அதாவது ஜெர்மன் நாட்டில் உள்ள ஒரு காட்டு எருமை வகையை அந்நாட்டு மக்கள் உரூஸ் என அழைத்துள்ளனர். இது பார்க்க பெரியதாகவும், பவர்ஃபுல்லாகவும் இருக்கும் என்பதால் அந்த பெயரை இந்த காருக்கு வைத்துள்ளனர்.

டாடா ஹாரியர் - Tata Harrier - கழுகு

ஹாரியர் கார் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் ஒரு காராகும் இந்த காரின் பெயருக்கு பின்னால் இருப்பது ஒரு பறவையின் பெயர். இந்த பறவை ஒரு வகை கழுகு இனத்தைச் சார்ந்தது. இந்த பறவையின் அம்சம் மிக உயரமாகப் பறந்தாலும் தரையில் உள்ள சிறிய இரையைக் கூட பார்த்துக் கவ்விப் பறந்து செல்லும் குறைவான உயரத்தில் கூட பறக்கும் திறன் கொண்டது. இந்த பறவையின் பெயரைத் தான் இந்த காருக்கு வைத்திருக்கின்றனர்.

இந்த பட்டியலில் ஒரு சில முக்கியமான கார்களை தான் குறிப்பிட்டுள்ளோம். இன்னும் நிறைய கார்கள் இப்படியாகப் பல காரணங்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பட்டியலில் இல்லாத கார்களின் பெயருக்கான காரணம் தெரிந்தால் இங்கே குறிப்பிடுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 22, 2023, 16:01 [IST]
English summary
Interesting story behind car names
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+