ஐபோன் 15-ஐ வாங்கிட்டு கஸ்டமர்ஸ் படும் பாடு இருக்கே!! BMW கார் உங்க கிட்ட இருக்கா? இதை தெரிஞ்சுக்கோங்க!
பிஎம்டபிள்யூ (BMW) கார்களின் வயர்லெஸ் சார்ஜரினால் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 15 அளவுக்கு-அதிகமாக சூடாகுவதாகவும், இதனால் மொபைல் போன் வெடிப்பதற்கு கூட வாய்ப்புள்ளதாக ஓர் அதிர்ச்சிக்கர செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி, ஐபோன் 15 வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒருவித பயத்தை உருவாக்கி உள்ளது.
இன்றைய கால மொபைல் போன்கள் நீண்ட நேர சார்ஜை வழங்கும் பேட்டரிகளுடன் உருவாக்கப்படுகின்றன. இதனால், ஒருநாளைக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் என்கிற நிலைமை உள்ளது. இருப்பினும், அந்த சிறிய அசவுகரியத்தை கூட வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடாது என்பதற்காக, இன்றைய மாடர்ன் கார்களில் வயர்லெஸ் சார்ஜர் என்றொரு அற்புதமான தொழிற்நுட்பம் வழங்கப்படுகிறது.

அதாவது, கார் ஓட்டும்போது உங்கள் மொபைல் போனை வயர்லெஸ் சார்ஜர் பேடின் மீது வைத்தாலே போதும், சார்ஜ் ஆகிவிடும். பொதுவாக, நாம் கார் ஓட்டும்போது மொபைல் போனை காரின் மைய கன்சோல் அல்லது டேஸ்போர்டின் மீது வைப்போம். இதனாலேயே, வயர்லெஸ் சார்ஜர் பேட்-ஐயும் இந்த பகுதிகளில் வழங்க கார் தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.
பிஎம்டபிள்யூ நிறுவனமும் தனது கார்களில் இன்-கார் வயர்லெஸ் சார்ஜர் வசதியை வழங்குகிறது. ஆனால், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 15 பிஎம்டபிள்யூ கார்களின் வயர்லெஸ் சார்ஜரில் சார்ஜ் செய்தால், வழக்கத்தை காட்டிலும் அதிகமாக சூடாகுவதாகவும், இதன் விளைவாக போனின் சில ஹார்ட்வேர் பாகங்கள் சரிவர செயல்படுவதில்லை எனவும் ஐபோன் 15 வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் எழுந்துள்ளன.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, பிஎம்டபிள்யூவின் இன்-கார் வயர்லெஸ் சார்ஜரில் சார்ஜ் செய்யும்போது ஐபோன் 15 தானாக டேடா ரிகவரி மோடிற்கு சென்று விடுகிறது மற்றும் போனின் என்.எஃப்.சி சென்சார் மிகவும் வெப்பமடைகிறது. வயர்லெஸ் சார்ஜரில் சார்ஜ் செய்யும் போது மட்டுமின்றி, அதற்கு பின்னரும் ஐபோன் 15 மொபைல் போனை முறையாக உபயோகப்படுத்த முடிவதில்லை என பிஎம்டபிள்யூ காரை வைத்திருக்கும் ஐபோன் 15 வாடிக்கையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
சார்ஜ் செய்ததினால் ஏற்படும் வெப்பம் குளிரும் வரையில் காத்திருந்து பின்னர் பயன்படுத்துவதற்கு முன் போனை ரீ-ஸ்டார்ட் செய்ய முயற்சித்தாலும், போன் முதலில் டேடா ரிகவரி மோடிற்கு செல்வதாக கஸ்டமர் ஒருவர் சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். ஒருவழியாக போனை பயன்படுத்தக்கூடிய நிலைக்கு கொண்டுவந்தாலும், போனின் என்.சி.எஃப் சிப் பழுதாகுவதால் காருடன் போனை கனெக்ட் செய்ய முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பிரச்சனையை பிஎம்டபிள்யூ கார் கஸ்டமர்ஸ் பலர் முன் வைத்ததை அடுத்து, இதுகுறித்த ஆய்வை ஆப்பிள் நிறுவனம் துவங்கியுள்ளது. மேலும், இதனால் பழுதாகிய ஐபோன் 15 மொபைல் போன்களை ஆப்பிள் நிறுவன நிர்வாகிகள் மாற்றிக் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த பிரச்சனை குறித்து எந்தவொரு அறிக்கையையும் ஆப்பிள் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் இதுவரையில் வெளியிடவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அட்வான்ஸான தொழிற்நுட்பங்களும் சில சமயங்களில் ஆபத்தை விளைவிக்கலாம் என்பதற்கு இந்த பிரச்சனை ஓர் சரியான வெளிப்பாடு ஆகும். இந்த பிரச்சனையை முடிந்த வரையில் தீர்க்க ஆப்பிள் & பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் முயற்சிக்கும். அதேநேரம், இந்த பிரச்சனை அனைத்து பிஎம்டபிள்யூ & ஐபோன் 15 போன் கஸ்டமர்களுக்கும் ஏற்படுகிறதா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









