IPL Tiago EV: மேட்சை விட இந்த காரை பார்க்கவே கூட்டம் குவியுமே! கிரவுண்ட்ல டியாகோ இவி கெத்தா நிக்க போகுது!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ இவி கார் இன்று துவங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அதிகாரப்பூர்வ பார்ட்னராக மாறியுள்ளது. டாடா மோட்டார் நிறுவனம் தொடர்ந்து 6வது ஆண்டாக ஐபிஎல் போட்டிகளுக்காக பிசிசிஐ உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன் படி இன்று துவங்கவுள்ள போட்டி முதல் முதல் போட்டி வரை இறுதிப் போட்டிவரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஐபிஎல் போட்டிகளுக்கு அதிகாரப்பூர்வ பார்ட்டனராக மாறியுள்ள நிலையில் இந்நிறுவனம் தனது டியாகோ இவி காரை ஐபிஎல் போட்டிகள் நடக்கும் 12 மைதானங்களிலும் காட்சிப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்நிலையில் அனைத்து போட்டியின் போதும் இந்த கார் கிரவுண்டில் காட்சிப்படுத்தப்படும்.

IPl Tiago EV1

இது மட்டுமல்ல மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் மத்தியில் இந்த கார் குறித்த புரிதலை ஏற்படுத்த "100 Reasons To Go.EV With Tigor.EV" என்ற ஒரு விளம்பர பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளது. அதில் இவிக்கள் குறித்த ரசிகர்களின் மனநிலையை அறிந்து அவர்கள் இவி கார்களை வாங்குவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் போது இவிக்கள் குறித்த பொதுவான புரளிகளுக்குப் பதிலளிப்பது, டியாகோ இவி காரில் உள்ள சிறப்புகள் குறித்தும் அதிகம் பேசப்படத் திட்டமிட்டுள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இது மட்டுமல்ல இது அனைத்து போட்டிகளில் டியாகோ இவி பெயரில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

IPl Tiago EV 2

டியாகோ. இவி எலெக்ட்ரிக் ஸ்டிரைக்கர் அவார்டு என்ற பெயரில் குறிப்பிட்ட போட்டியில் அதிகமான ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அந்த வீரருக்கு ஒரு கோப்பை மற்றும் ரூ1 லட்சம் பணம் வழங்கப்படுகிறது. இது போக இந்த மொத்த ஐபிஎல் போட்டியிலேயே அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரருக்கு எலெக்ட்ரிக் ஸ்டிரைக்கர் ஆஃப் தி சீசன் என்ற விருது வழங்கப்படுகிறது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்டிரைக்கர் ஆஃப் தி சீசன் விருதைப் பெறும் வீரருக்கு டாடா டியாகோ இவி கார் ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் இது முடிவடையவில்லை. ஒவ்வொரு போட்டியின் போதும் இவி கார் கிரவுண்டில் டிஸ்பிளேவில் வைக்கப்படும். இந்த காரின் மீது போட்டியின் போது 6 அடித்து பந்து காரை மீது பட்டால் அதற்காகவும் தனித் திட்டங்களை வைத்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு முறை பந்து படும்போதும் ரூ5 லட்சம் மதிப்பில் கர்நாடகா காபி தோட்டத்தில் புதிய காபி செடிகளை நட நிதி ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்ச் போது பந்து கார் மீது பட்டால் கார் டிவிகளில் காட்சிப்படுத்தப்படும். இந்த விளம்பரம் இலவசமாகக் கிடைப்பதால் அந்த விளம்பரத்திற்கான செலவை இப்படி செலவு செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டாடா நிறுவனம் இறுதியாக சில டாடா டியாகோ இவி உரிமையாளருக்கு இந்த ஐபிஎல் போட்டியைக் காண டிக்கெட்டையும் வழங்க முடிவு செய்துள்ளது. டாடா நிறுவனம் ஐபிஎல் போட்டிகளில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பார்ட்னராக இருந்து வருகிறது. இதற்கு முன்னர் நெக்ஸான், ஹாரியர், அல்ட்ராஸ், சஃபாரி மற்றும் பஞ்ச் ஆகிய கார்களை காட்சிப்படுத்தியுள்ளது. தற்போது டியாகோ இவி காரை காட்சிப்படுத்தப்படுகிறது.

இது குறித்து டாடா பயணிகள் எலெக்ட்ரிக் வாகனத்தின் மார்கெட்டிங், சேல்ஸ் மற்றும் சர்வீஸ் திட்டத்துறையின் தலைவர் விவேக் ஸ்ரீவத்சவா கூறும் போது : "இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியில் டாடா நிறுவனமும் இணைந்திருப்பது பெருமையாக இருக்கிறது.

இதில் எங்கள் இவி காரை காட்சிப்படுத்துவது, பெரு நகரங்கள் மட்டுமல்ல சிறிய சிறிய ஊர்களிலும் இவி கார் குறித்த விழிப்புணர்வு கிடைக்கும். இந்த பார்ட்னர்ஷிப்பை பெரிய அளவில் பயன்படுத்தி இந்தியாவில் இவி புரட்சிக்கும், எதிர்கால மொபிலிட்டிக்கும் பயன்படும் வகையில் எங்கள் விளம்பரத்தைச் செய்வோம்" எனக் கூறினார். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, March 31, 2023, 9:23 [IST]
English summary
Ipl tiago ev officially partnered for the 2023 indian premier league
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+