IQ Study on Car Colour: உங்க புத்திசாலிதனத்துக்கு உங்க காரோட கலரே மார்க் போடும்! எவ்வளவுன்னு இங்க பாருங்க!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கிராப் கம்பேரிசன் நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதன்படி ஒருவர் தேர்வு செய்யும் கார் கலர் மூலம் அவர் எவ்வளவு புத்திக் கூர்மையானவர் என்பதை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பல ஆச்சரியமான தகவல்கள் இருக்கிறது. இதை விரிவாகக் காணலாம் வாருங்கள்.

இங்கிலாந்து நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி ஒவ்வொரு தனி மனிதருக்கும் ஒவ்வொரு விதமான புத்திக் கூர்மை இருக்கிறது. அவர்களின் புத்திக் கூர்மையைக் கண்டறிய ஐக்யூ என்ற ஒரு தேர்வு இருக்கிறது. ஆனால் ஒருவர் தனக்கென ஒரு காரை தேர்வு செய்யும் போது அதன் கலரை தேர்வு செய்வதை வைத்தே அவரது புத்திக் கூர்மையை அளவிட முடியும் எனக் கூறுகிறது.

your-car-colour-tells-your-iq-score-1

ஒரு காரை ஒருவர் தேர்வு செய்யப் போகிறார் என்றால் அவர் முதலில் காரின் கலரை தான் தேர்வு செய்வார். அப்படி ஒருவர் காரின் கலரை தேர்வுசெய்வதை வைத்து அவரது ஐக்யூ அளவை ஒரு உத்தேசமாக மதிப்பிட்ட ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைப் பார்க்கும் முன் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவர் கார் வாங்கும் போது என்ன கலரில் வாங்கலாம் என்பதை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவு செய்வார். இவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளுக்கு இது ஒத்து வராது. ஆனால் தனியாக நீங்களாக சுயமாகச் சிந்தித்து மற்றவர்களின் இன்ஃப்ளூயன்ஸ் இல்லாமல் எடுக்கப்படும் முடிவுகளுக்கே இது பொருந்தும்.

your-car-colour-tells-your-iq-score-2

இந்த அறிக்கையின் படி ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு ஐக்யூ அளவு வழங்கப்பட்டுள்ளது. இருப்பதிலேயே அதிக ஐக்யூ கொண்டது. வெள்ளை நிறம் தான். இந்த நிறத்தைத் தேர்வு செய்பவர்களுக்கு 95.72 ஐக்யூ அளவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பதிலேயே குறைந்தது. பச்சை நிறத்திற்குத் தான். இதன் அளவு 88.43 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியாக 7 நிறங்களுக்கான ஐக்யூ பட்டியல் இந்த அறிக்கையில் வெளியாகியுள்ளது. வெள்ளை - 95.71, க்ரே -94.97, சிவப்பு -94.88, நீலம் -93.60, கருப்பு - 92.83, சில்வர் -92.67
பச்சை -88.43, என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறங்கள் எல்லாம் உலகம் முழுவதும் அதிகமாக கார்கள் விற்பனையாகும் கலர்களாகும்.

Colour IQ Score
White 95.71
Grey 94.97
Red 94.88
Blue 93.60
Black 92.83
Silver 92.67
Green 88.43

இது போக வேறு பல நிறங்களில் கார்கள் இருந்தாலும் இந்த நிறங்களை அடிப்படையாகக் கொண்டே இருக்கும். அவர்கள் தங்கள் அடிப்படை கார் நிறத்தை வைத்து அவர்களது ஐக்யூ ஸ்கோரை தெரிந்து கொள்ளலாம். பலர் இந்த ஆய்வின் முடிவை ஆச்சரியமாகப் பார்த்துப் பகிர்ந்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் நினைப்பது என்ன? : இப்படியான ஆய்வுகளை சில தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது நடத்தி வெளியிடுகின்றன. இந்த ஆய்வின் பயன் என்ன? யாருக்காக இந்த ஆய்வுகள் பயன்படப்போகிறது என்பது தெரியவில்லை. இந்த ஆய்வின் முடிவுகள் வெறும் விளம்பரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதும் தெரியவில்லை.

இது போன்ற ஆய்வுகள் எப்படி நடத்தப்படுகிறது என்பதிலும் குழப்பம் இருக்கிறது. அவர்கள் இந்த ஆய்விற்கான தரவுகளை எப்படி எடுக்கின்றனர். அவர்களின் தரவின் அளவுகள் எவ்வளவு எந்த இடத்திலிருந்து எல்லாம் தரவுகள் எடுக்கப்பட்டது என எந்த தகவலும் இல்லாமல் இப்படியான ஆய்வறிக்கை வெளியாவது மக்களின் ரசனையை கட்டுப்படுத்துத்தானே தவிர வேறு இல்லை!

More from DriveSpark

Article Published On: Tuesday, March 28, 2023, 12:40 [IST]
English summary
Iq study on car colour from uk tell how smart you are
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+