இவ்வளவு நாளா நல்ல லாபம்ன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க போல! சிஎன்ஜி கார் பயன்படுத்துவதால் லாபமே வராதா?
இந்தியாவில் பெட்ரோல் விற்கும் விலைக்கு கார் பைக் பயன்படுத்துபவர்கள் எல்லாம் எரிபொருள் செலவு கட்டுப்படி ஆகாமல் மாற்று எரிசக்திக்கு மாறி வருகின்றனர். அரசும் மாசு கட்டுப்பாட்டைக் கணக்கில் கொண்டு பெட்ரோல்/டீசல் கார்களை விடப் பசுமை வாகனங்களை அதிகம் விற்பனை செய்ய ஊக்கமளித்து வருகிறது.
இந்நிலையில் பெட்ரோல் காருக்கு அடுத்தபடியாக மக்கள் தேர்வு செய்வது சிஎன்ஜி வாகனம் தான் இது ஒரே நேரத்தில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டிலும் சேர்ந்து இயங்கும் திறன் கொண்டது. அதே நேரம் மக்களுக்கு எலெக்ட்ரிக், ஹைபிரிட் வாகனங்களும் ஒரு ஆப்ஷனாக இருக்கிறது. இதில் சிஎன்ஜி தற்போது பெரும்பாலானோரின் தேர்வாக இருக்கும் நிலையில் சிஎன்ஜி உண்மையிலேயே லாபம் தானா எனப் பார்க்கலாம்.

முதலில் சிஎன்ஜியில் இருக்கும் நல் விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம். சிஎன்ஜி வாகனங்கள் மாசுவை பொருத்தவரை பெட்ரோல், டீசலை காட்டிலும் குறைவான மாசுவை ஏற்படுத்தும் திறன் கொண்டது. மேலும் பெட்ரோல் டீசலை காட்டிலும் சிறப்பான மைலேஜ் தரும் ஒரு காராக இருக்கிறது. இதன் காரணமாகவே பலர் இந்த ஃப்யூயல் கொண்ட காரை தேர்வு செய்கின்றனர். ஆனால் இந்த காரில் சில பிரச்சனைகளும் உள்ளன.
முதலில் சிஎன்ஜி கார்களின் பிரச்சனை என்றால் அதன் ஃபெர்பாமென்ஸ். இது பெட்ரோல், டீசல் கார்கள் போல ஸ்மூத்தாகபயணிக்காது. அதன் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்காது. அடுத்த பிரச்சனை இதன் டேங்க் பூட் ஸ்பேஸில் பெரும் பகுதியை எடுத்துக்கொள்ளும். இதனால் நம் நீண்ட தூரம் பயணம் செல்லும் போது அதிக பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது.
சிஎன்ஜி ஸ்டேஷன்கள் பற்றாக்குறை ஒரு புறம் தமிழகத்தின் சில பகுதிகளில் இருக்கிறது. குறிப்பாகத் தென் தமிழகத்தில் பல இடங்களில் சிஎன்ஜி ஸ்டேஷன்களே கிடையாது. இதனால் நீங்கள் ரீஃபில் செய்வது கடினம். அதே நேரம் சிஎன்ஜியை ரீஃபில் செய்யவும் சில நிமிடங்கள் வரை ஆகும். கூட்டம் அதிகமாக இருந்தால் சில மணி நேரங்கள் கூட நீங்கள் சிஎன்ஜி ஸ்டேஷனில் காத்திருக்க வேண்டிய நிலை வரும்.
இத்தனையையும் மீறி உங்களுக்கு சிஎன்ஜி அதிக மைலேஜ் தரும். இதனால் லாபம் தான் என யோசித்தால் அதுவும் தவறாக வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட காரை விற்பனை செய்வதில் சிறந்த நிறுவனம் என்றால் மாருதி தான் இந்நிறுவனம் தற்போது 14 சிஎன்ஜி வாகனங்களைத் தனது லைன் அப்பில் வைத்திருக்கிறது. அதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
பொதுவாக மாருதி நிறுவனத்தின் சிஎன்ஜி கார்கள் என்றால் அதன் பெட்ரோல் வேரியன்டை விட ரூ90-95 ஆயிரம் விலை அதிகமாக இருக்கும் பெட்ரோல் காரில் சிஎன்ஜி கிட்டை பொருத்துவதற்கான செலவு தான் அது. ஒரு வேலை நீங்கள் அதே காரின் பெட்ரோல் காரை வாங்கினால் அதை விட ரூ90 ஆயிரம் குறைவாகக் கொடுத்தால் போதும். இப்படி ரூ90 ஆயிரம் அதிகம் கொடுத்து வாங்குவதால் இது லாபமா என ஒரு கணக்கீடு செய்து பார்க்கலாம்.
உதாரணமாக மாருதி செலிரியோ காரை எடுத்துக்கொள்வோம். இதன் பெட்ரோல் வேரியன்ட் விலை ரூ5.82 லட்சம், அது வே சிஎன்ஜி வேரியன்ட் விலை ரூ6.72 லட்சம். இந்த அதிகம் செலவாகும் 90 ஆயிரத்தில் நாம் சிஎன்ஜ பயன்படுத்துவதால் அந்த பணத்தைக் குறைந்தது 5 ஆண்டுகளுக்குப் பின் தான் திருப்ப எடுக்க முடியும். உதாரணமாக ஒரு நாளுக்கு நீங்கள் சராசரியாக 40 கி.மீ கார் ஓட்டுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.
அப்படி என்றால் நீங்கள் ஒரு நாளுக்கு பெட்ரோல் காரில் 25 கி.மீ மைலேஜ் என கணக்கிட்டால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100 விலையில் குறைந்தது ரூ150க்கான பெட்ரோல் உங்களுக்குச் செலவாகும், அதுவே சிஎன்ஜி கார் என்றால் 35 கி.மீ மைலேஜில் உங்களுக்கு ரூ100 செலவாகும். அப்படி என்றால் ஒரு நாளுக்கு ரூ50 லாபமாக உங்களுக்குக் கிடைக்கும் அப்படி என்றால் மாதம் ரூ1500 அதிகபட்ச லாபமாக உங்களுக்குக் கிடைக்கும்.
அப்படி என்றால் இதை ஆண்டிற்குக் கணக்கிட்டால் ரூ18,000 ஆயிரம் லாபமாகக் கிடைக்கும். அப்படி என்றால் நீங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகள் இதே மைலேஜ் மற்றும் பெட்ரோல், சிஎன்ஜி விலையில் இந்த வாகனத்தை ஓட்டினால்தான் உங்களால் அந்த 90 ஆயிரம் அதிகம் கொடுத்த பணத்தை எட்டி பிடிக்கவே முடியும். ஆனால் அதற்குள் உங்கள் வாகனம் 72 ஆயிரம் கி.மீ பயணத்தைக் கடந்துவிடும்.
ஒரு வாகனத்தின் ஆயுளே 1 லட்சம் கி.மீ தான் எனச் சொல்லப்படுகிறது. அப்படி என்றால் மீதம் உள்ள 25 ஆயிரம் கி.மீ பயணத்தில் கிடைக்கும் லாபம் தான் சிஎன்ஜி பயன்படுத்துவதால் உங்களுக்கு உண்மையாகக் கிடைக்கும் லாபம். ஆனால் இதற்காக நீங்கள் வாகனத்தின் பெர்ஃபாமென்ஸ், சிஎன்ஜி ஸ்டேஷன் தட்டுப்பாடு மற்றும் காத்திருப்பு எனப் பல விஷயங்களைத் தியாகம் செய்ய வேண்டும். இப்பொழுது சொல்லுங்கள் உங்களுக்கு சிஎன்ஜி லாபமா? என்ன? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications