காஷ்மீர்ல கூட அவ்வளவு குளிர் இருக்காது! ரோல்ஸ் ராய்ஸ் காருல 30 பிரிட்ஜ் அளவுக்கு குளிர் இருப்பது உண்மையா?

ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் உள்ள ஏசி நாம் வீட்டில் பயன்படுத்தும் பிரிட்ஜில் 30 பிரிட்ஜ்களுக்கு சமம் என கூறப்படுகிறதே இது உண்மையா? ரோல்ஸ் ராய்ஸ் கார் குறித்த பல புரளிகள் இது போன்று கிளம்பியுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உலகின் அதிக விலை கொண்ட சொகுசு கார்களில் ஒன்று, இந்த நிறுவனத்தின் கார்கள் ரோட்டில் சென்றாலே இதை பார்க்க மிகப்பெரிய கூட்டம் கூடும். அந்த அளவிற்கு பெயரும் புகழும் இந்நிறுவனத்தின் கார்களுக்கு இருக்கிறது. இந்நிறுவனத்தை பற்றி எந்த அளவிற்கு மக்களுக்கு தெரியுமோ அதை விட அதிகமான அளவிற்கு புரளிகளும் இருக்கிறது.

rolls royce ac equal to 30 refrigerator

சிலர் இந்நிறுவனம் எல்லோருக்கும் கார்களை விற்காது. அந்த காரை வாங்குபவர்களின் பின்ணணி மற்றும் அவர்களது குடும்ப வரலாற்றை வைத்து தான் கார்களை விற்பனை செய்யும் என சொல்வார்கள். சிலர் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள் எப்பொழுதும் ரிப்பேர் ஆகாது. தரமான நம்பகமான கார்களாக இருக்கும் என சொல்லுவார்கள்.

சிலர் ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் கேபின் அமைதியாக இருக்கும் காருக்குள் கடிகாரத்தை கொண்டு சென்றால் அங்கு சென்றால் கடிகார முள் சுற்றும் சத்தம் கூட இன்னும் கேட்கும் என சொல்லுவார்கள். இது எல்லாம் உண்மையா என கேட்டால் அதற்கு ஒரே பதில் தான் இது எல்லாம் சுத்த பொய் தான்.

rolls royce ac equal to 30 refrigerator

ரோல்ஸ் ராய்ஸ் காரை பணம் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் வாங்கலாம். அதே நேரம் ரோல்ஸ் ராய்ஸ் கார் தரமானது நம்பமானது தான் அதில் மாற்று கருத்து இல்லை. அதற்காக இந்த கார் ரிப்பேர் ஆகவே ஆகாது என்பது பொய் பல நேரங்களில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ரிப்பேர் ஆகி நடு ரோட்டில் நின்றுள்ளன.

இந்த காரின் கேபின் அமைதியானது தான். அதே நேரம் இந்த காரின் கேபின் உள்ள கடிகார முள் சுற்றும் சத்தம் மட்டுமே கேட்கும் அளவிற்கு அமைதியானது கிடையாது. ஆக இது எல்லாம் சுத்த பொய். சரி விஷயத்திற்கு வருவோம் தற்போது புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் கார் பற்றி ஒரு புரளியை கிளப்பியுள்ளனர். இந்த காரில் உள்ள ஏசி நாம் வீட்டில் பயன்படுத்தும் பிரிட்ஜில் 30 பிரிட்ஜிற்கு சமம் என சொல்கிறார்கள்.

rolls royce ac equal to 30 refrigerator

உண்மை என்ன என்றால் 30 பிரிட்ஜ் என்றால் மிக அதிகமான குளிர்,ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் உள்ள ஏசி அதி திறன் வாய்ந்தது தான். இந்த காருக்குள் நல்ல சொகுசான வெப்ப நிலை இருப்பதற்காக இந்த ஏசி பொருத்தப்பட்டுள்ளது.இது சிறப்பான இன்சுலேஷனை வழங்குகிறது. இதனால் காருக்குள் வெப்பம் அவ்வளவு சுலபமாக புகுந்துவிட முடியாது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோல்ஸ் ராய்ஸ் காரின் ஏசி பவர்ஃபுல்லானது தான் இதற்காக இதை வீட்டில் உள்ள 30 பிரிட்ஜ்களுடன் அதை ஒப்பிடுவது என்பது அதீத கற்பனை தான். இந்த ஒப்பீடு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. வழக்கமான மற்ற புரளிகளை போல இந்த ரோல்ஸ்ராய்ஸ் ஏசியை 30 பிரிட்ஜ்களுடன் ஒப்பிட்ட விஷயத்தயும் புரளியாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 13, 2023, 16:00 [IST]
English summary
Is it true that rolls royce cars ac is equal to 30 refrigerators
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X