காரை நிறுத்தி வச்ச இடத்துல தண்ணீ சொட்டி கெடக்குதா! இப்படி காருல இருந்து தண்ணீர் சொட்டுவது நல்லதா? கெட்டதா?

குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்காக காத்திருக்கலாம்னு கொஞ்சம் நேரம் காரை நிப்பாட்டிவிட்டு எடுத்தா, நம்ம காரு நின்னுட்டு இருந்த அந்த இடத்துல சொட்டு சொட்டா தண்ணீ காருல இருந்து ஒழுகி இருக்கும். இந்த தண்ணீர் ஏன் வருது? எதுக்காக வருதுனு? நம்மல்ல பலருக்கு தெரியாது.

தண்ணீரை பார்த்த உடனே, அய்யய்யோ வண்டில இருந்து தண்ணீர் வந்திருக்கே, ஏதோ பெரிய பிரச்னை ஏற்பட்டிருக்கும் போல என நினைச்சு பதற ஆரம்பிச்சுடுவாங்க. இந்த தண்ணீரை பார்த்து பயப்படலாமா?, வேண்டாமா?, இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். மேலும், இதுபோன்று வாகனங்களில் இருந்து தண்ணீர் வெளியே வருவதால் ஏதேனும் பெரிய சிக்கல் அல்லது பெரிய செலவை வைக்குமா என்பது பற்றிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

Water dripping engine

நம்மல்ல பலபேர் காரில் ஏறிய உடன் காரை ஆன் செய்ய நினைக்கின்றோமோ இல்லையோ ஏசி-யை முதலில் ஆன் செய்ய வேண்டும் என்றே நினைக்கின்றோம். ஆனால், என்ன செய்வது காரை ஆன் செய்தால்தான் ஏசியை ஆன் செய்ய முடியும் என்கிறது சிஸ்டம். ஆகையால், காரையே முதலில் ஆன் செய்ய வேண்டி இருக்கின்றது.

இதை செய்த அடுத்த நொடியோ கைகள் ஏசி பட்டனை நோக்கி ஓடிவிடும். எடுத்த எடுப்பிலேயே ஹை லெவலில் ஏசியை வைக்க செய்வார்கள். அதிலும் கோடை காலம் என்றால் சொல்ல வேண்டாம். ஏசி-யை பலர் ஆஃப் செய்யவே மாட்டார்கள். இத்தகைய அதீத பயன்பாட்டின்போது ஏசியில் இருந்து நீர் கசிவு என்பது வழக்கம்தான்.

Water dripping

இதனால்தான் பெரும்பாலான கார்கள் நின்றுவிட்டு செல்லும்போது அந்த கார்களுக்கு அடியில் நீர் சொட்டி கிடக்கும். இதைக் கண்டு அஞ்சலாமா என கேட்டால் வேண்டாம் என்பதே எங்களின் அறிவுறுத்தல் ஆகும். நம்முடைய வீடுகளில் பயன்படுத்தும்போதும்கூட ஏசியில் இருந்து நீர் துளிகள் வெளி வருவதை நாம் பார்த்திருப்போம்.

அதை சாதாரணமாகக் கடந்துச் செல்வதை போலவே இதையும் சாதாரணமாகக் கடந்து செல்லலாம். ஏசி சிஸ்டம், வெளியில் இருக்கும் காற்றை உள் வாங்கி அதை குளிர்வித்து காரின் கேபினுக்குள் அனுப்பி வைக்கும். இந்த மாதிரியான நேரத்தில், அதாவது, காற்றை குளிர்விக்கும்போது நீராவி உருவாகி அது நீர் துளியாக மாறி வெளியே வரும்.

இந்த நீர் துளி சில நேரங்களில் எக்சாஸ்ட் வாயிலாக வெளியேற்றப்படும். அதேவேளையில், இந்த நீர் துளிகள் சொட்டு சொட்டாக மட்டுமே வெளியே வரும். அவ்வாறு மட்டுமே வருகிறது எனில் எந்த கவலையும் நாம் பட தேவையிருக்காது. அதுவே, சொட்டு சொட்டாக அள்லாமல் பெரிய அளவில் நீர் வெளியில் வரும் எனில் வாகனத்தில் வேறு ஏதோ சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது என்றே அர்த்தம்.

ஆனால், இவ்வாறு நடக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. அதேவேளையில், நீரில் மூழ்கி அல்லது வெள்ள நீரில் பயணித்த வாகனங்களின் எக்சாஸ்டில் இருந்து பெரிய அளவில் நீர் கசிவு வெளியேறக் கூடும். இதை லேசாக எடுத்துக் கொள்ள கூடாது. மேலும், உடனே மெக்கானிக்கை அணுக வேண்டும். அப்போது மட்டுமே அதில் தீர்வு காண முடியும்.

தொடர்ந்து, சில நேரங்களில் தண்ணீர் துளி போலவே வேறு திரவம் வெளியேறக் கூடும். இதுபோன்ற சூழலிலும் உடனே மெக்கானிக்கை அணுக வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது. சில நேரங்களில் வாகனங்களில் ஏற்பட்ட பழுதின் காரணமாக எஞ்ஜின் ஆயில், கூலிங் ஆயில் உள்ளிட்ட முக்கிய திரவங்கள் வாகனங்களில் வெளியேறக் கூடும்.

இது போன்ற ஏதேனும் சிக்கல் உங்கள் காரில் தென்படும் எனில் உடனடியாக கார் மெக்கானிக்கை அணுகி சிக்கலை சரி செய்ய வேண்டும். இதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால் நாளடைவில் மிகப் பெரிய சிக்கலை அது ஏற்படுத்திவிடும். வாகனம் நடு வழியிலேயே நின்றுவிடுதல், எஞ்ஜினில் மிகப் பெரிய கோளாறு ஏற்படுதல் போன்ற மிகப் பெரிய செலவிற்கு அது வழிவகுத்துவிடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களில் எந்தவொரு சிக்கல் இருப்பதாக உணர்ந்தாலும் அதுகுறித்து உடனேயே அறிந்து, அதனை கையோடு சரி செய்வதே நல்லது. ஆமாங்க, இப்படி செய்தால் மட்டுமே பெரிய செலவில் இருந்து தப்பிக்க முடியும். சில சின்ன கோளாறுகளே மிகப் பெரிய செலவுக்கு வழிவகுக்கும் என்பதை மறவ வேண்டாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 13, 2023, 21:12 [IST]
English summary
Is water dripping from the car engine is good or bad
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+