விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோ! தமிழகத்தில் நடந்த முதல் கட்ட சோதனை வெற்றி!
இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக சர்வீஸ் மாடல் புரோபல்ஷன் சிஸ்டம் என்ற புதிய கருவியை திருநெல்வேலியை அடுத்துள்ள மகேந்திரகிரியில் டெஸ்ட் செய்துள்ளது. முதற்கட்ட சோதனை வெற்றிகரமான முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட சோதனைக்கு தயார் செய்யப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த 14 ஆம் தேதி நிலவை நோக்கி விண்ணில் செலுத்தியது. தற்போது சந்திரயான்-3 தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இது ஆகஸ்ட் மாதம் 23-24 ஆம் தேதியில் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் இஸ்ரோ மிக முக்கியமான சாதனையை படைக்கும்.

இந்த சந்திரயான்-3 திட்டத்திற்கு பிறகு இஸ்ரோ அடுத்த திட்டமாக ககன்யான் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த ககன்யான் திட்டம் என்பது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். இந்தத் திட்டத்திற்கான முழு முதல் முயற்சியில் தான் தற்போது இஸ்ரோ இறங்கி உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.
இஸ்ரோவின் ஒரு குழு சந்திரயான்-3 திட்டத்தை கையாண்டு கொண்டிருந்தாலும் மற்ற குழுக்கள் எல்லாம் தற்போது ககன்யான் திட்டத்தில் தான் தீவிரமாக இருக்கிறது. இந்த ககன்யான் திட்டத்தில் மனிதர்கள் நிலவிற்கு செல்ல சர்வீஸ் மாடல் புரோபல்ஷன் சிஸ்டம் என்ற கருவியை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.
இதில்தான் மனிதர்கள் அமர்ந்து விண்வெளிக்கு செல்ல உள்ளனர். இந்த ககன்யான் திட்டத்தின் படி பூமியிலிருந்து விண்வெளிக்கு அதாவது பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரம் வரை மனிதர்களைக் கொண்டு சென்று அங்கு மூன்று நாட்கள் அவர்கள் இருந்து சோதனைகளை செய்து மீண்டும் இந்தியாவின் கடல் பகுதியில் வந்து தரை இறங்குவார்கள்.
இந்த திட்டத்திற்கான ராக்கெட்டில் மனிதர்கள் அமர்ந்து செல்லும் பகுதியில் சர்வீஸ் மாடல் புரோபல்ஷன் சிஸ்டம் மிக முக்கியமான தேவையாக இருந்தது. இதை இஸ்ரோ நேற்று திருநெல்வேலியை அடுத்த மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ புரோபல்ஷன் காம்ப்ளக்ஸில் வெற்றிகரமாக முதல் கட்ட சோதனையை செய்தது.
இந்த சர்வீஸ் மாடல் புரோபல்ஷன் சிஸ்டத்தில் மொத்தம் ஐந்து லிக்யூட் அப்போகி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது சுமார் 440 நியூட்டன் பவரை வெளிப்படுத்தும். இதுபோக 16 ரியாக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. இது 100 நியூட்டன் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது..
இந்த சர்வீஸ் மாடல் இரண்டு விதமான புரோபல்ஷனேட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த புரோபல்ஷன் சிஸ்டம் தான் விண்வெளியில் மனிதர்கள் இருக்கும் ஆர்பிட்டல் மாடுல்களை கையாளும் திறன் கொண்டது. விண்வெளியில் மனிதர்கள் இருக்கும்போது அவர்கள் விண்வெளி பயணத்தை ஆர்பிட் இன்ஜெக்ஷன் மற்றும் சர்குலரேஷன் மூலம் கையாளும்.
இந்த சர்வீஸ் மாடல் ஆர்பிட் இன்ஜெக்ஷன், சர்குலரேஷேஷன், ஆன்-ஆர்பிட் கண்ட்ரோல், டி பூஸ்ட் மேனோவரிங், எஸ்எம் போர்டு அபார்ட் ஆகிய செயல்களை செய்யும் திறன் கொண்டது. இதில் உள்ள 440 நியூட்டன் திரஸ்ட் கொண்ட எல்ஏஎம் மோட்டார் தான் இன்ஜினின் முதன்மையான புரோபல்ஷன் ஃபோர்ஸாக இருக்கும்.
இது மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும்போது மிக முக்கியமாக பயன்படும். இதில் பொருத்தப்பட்டுள்ள 16 ஆர்சிஎஸ் ரியாக்டர்கள் ஆட்டிட்யூட் கரெக்ஷன்காக பயன்படுத்தப்படும். மிகத் துல்லியமான இடத்தில் தரையிறங்குவது மற்றும் பயணிப்பது உள்ளிட்டவற்றை இதுதான் ஹேண்டில் செய்யும். இதை பயன்படுத்தி பாதுகாப்பான விண்வெளி பயணத்தை மேற்கொள்ள முடியும்.
இந்த சிஸ்டம் தான் நேற்று மகேந்திர கிரியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதில் எரிபொருள் சர்க்யூட், புரோபலென்ட் டேங்க் ஃப்ட் சிஸ்டம், ஹீலியம் பிரஷரைசேஷன் சிஸ்டம், ஃபிலைட் குவாலிபைட் திரஸ்டர்ஸ் மற்றும் கண்ட்ரோல் காம்போனென்ட்கள் ஆகிய விஷயங்கள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
சுமார் 250 நொடிகள் நடந்த இந்த டெஸ்டில் எல்ஏஎம் என்ஜின் பயரிங் மற்றும் ஆர்சிஎஸ் திரஸ்டர்கள் ஆகியவன வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது . இந்த சோதனை இரண்டு செட்யூல்களாக நடத்தப்பட்டது. முதல் செட்யூலில் எஸ்எம் எஸ்டிஎம் டெஸ்ட் சீரிஸ் நடத்தப்பட்டது. இரண்டாம் செட்யூலில் முழு கான்ஃபிகரேஷன் செய்யப்பட்டது.
முதல் செட்யூலில் ஐந்து விதமான ஹார்ட் சோதனைகள் மொத்தம் 2750 நொடிகள் நிகழ்த்தப்பட்டது. இதில் ஐந்து 440 நியூட்டன் திறன் கொண்ட எல்ஏஎம் இன்ஜின்களும் 800 நியூட்டன் திறன் கொண்ட ஆர்சிஎஸ் இன்ஜின் டிரஸ்டர்களும் பயன்படுத்தப்பட்டது. இரண்டாவது கட்ட சோதனையில் முழு கான்ஃபகரேஷனான 440 நியூட்டன் திறன் கொண்ட எல்எம் இன்ஜின் மற்றும் 100 நியூட்டன் திறன் கொண்ட 16 ஆர்சிஎஸ் திரஸ்டர்கள் ஆகியன சோதனை செய்யப்பட்டது.
இஸ்ரோவின் லிக்யூட் புரோபல்ஷன் சிஸ்டம் சென்டர் தான் இந்த ககன்யானுக்கான எஸ்எம்பிஎஸ் எனப்படும் சர்வீஸ் மாடல் புரோபல்ஷன் சிஸ்டத்தை உருவாக்கியுள்ளது. இது விண்வெளியில் பயணிக்கும் மாடுல் ஆகும். இது குறித்து இஸ்ரோ கூறும் போது: "சர்வீஸ் மாடல் புரோபல்ஷன் சிஸ்டத்தின் ஹாட் டெஸ்ட் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக அதன் முழு கான்ஃபிகேரேஷன் சிஸ்டம் மூலம் டெமோ செய்து பார்க்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இஸ்ரோ ஐந்து கூடுதல் டெஸ்ட்களை நாமினால் மற்றும் ஆஃப் நாமினல் மிஷன் சினாரியோவில் செய்யப்படும். இந்த சோதனைகள் எல்லாம் ககன்யான் மிஷன் வெற்றிகரமாக நடைபெறுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது." என கூறினார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற ஒரு நாடு ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பினால் அது நிச்சயம் உலக நாடுகளில் திரும்பி பார்க்கப்படும் நிகழ்வாக இருக்கும். இது வெற்றிகரமமாக அமைந்தால் இந்தியா திட்டத்தை ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக பயன்படுத்தி தனது ஆய்வை மேம்படுத்தவும் வருமானத்தை பெருக்கவும் வழி வகை செய்யும்.


Click it and Unblock the Notifications








