தமிழ்நாட்டு போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்ட வீரா! இந்த ஒரு வண்டி என்னென்ன எல்லாம் செய்யும் தெரிஞ்சா மிரண்டுருவீங்க
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான இசுஸு (Isuzu), இந்தியாவில் பன்முக கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான வாகன மாடல்களில் ஒன்றாக எஸ்-கேப் (S-CAB) இருக்கின்றது. இது ஓர் பிக்-அப் டிரக் ரக வாகனமாகும்.
இதையே தமிழ்நாட்டு காவல்துறைக்கு ஏற்ற வாகனமாக மாற்றி தற்போது காவல்துறை கைகளில் ஒப்படைத்திருக்கின்றது, இசுஸு நிறுவனம். ஸ்பெஷல் வாகனமாக மாற்றப்பட்டு இருக்கும் இந்த வாகனத்திற்கு அந்நிறுவனம் வீரா (Veera) எனும் பெயரை வைத்திருக்கின்றது. ஓர் மாவீரனை போல் செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த பெயர் அதற்கு சூட்டப்பட்டு உள்ளது.

அதாவது, காவல்துறையின் பன்முக பணிகளுக்கு பயன்படும் வகையிலேயே இசுஸு எஸ்-கேப் வீரா வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. மிக முக்கியமாக விபத்து நேரங்களில் ரெஸ்க்யூ (மீட்பு) வாகனமாக பயன்படும் வகையிலேயே எஸ்-கேப் வீரா உருவாக்கப்பட்டு இருக்கின்றது. நாடு முழுவதும் வாகன விபத்து பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
யுட்யூபர் டிடிஎஃப் வாசன் போன்ற சில ஒழுங்கற்ற வாகன ஓட்டிகளால் விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தமிழக அரசின் வசம் வீரா ரெஸ்க்யூ பிக்-அப் டிரக் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது. சில நேரங்களில் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டெடுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடுகின்றது.

குறிப்பாக, சாலையில் இருந்து வழி தவறி பள்ளத்தில் விழும் வாகனங்களை மீட்டெடுப்பது என்பது காவல்துறைக்கும், மீட்பு பிரிவிற்கும் மிகுந்த சவாலானதாக இருக்கின்றது. ஆனால், தற்போது பயன்பாட்டிற்குக் களமிறக்கப்பட்டு இருக்கும் எஸ்-கேப் வீரா இந்த சவால்கள் அனைத்தையும் உடைத்தெறிந்துவிடும். விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டெடுக்கும் விதமாக இரும்பு ரோப் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை வீராவில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
வெள்ளை நிறத்தில் இந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், தமிழக அரசின் சின்னம், சிவப்பு, வெள்ளை, நீளம் ஆகிய நிறங்கள் அடங்கிய கோடுகள் உள்ளிட்டவையும் வீராவை அலங்கரிக்கும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த வாகனத்தை விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்டெடுக்க மட்டுமில்லைங்க சமயத்தில் விபத்துக்குள்ளான நபர்களையும் அழைத்துச் செல்ல முடியும்.

இதற்கான ஸ்டிரெட்சர் உள்ளிட்ட அம்சங்கள் வீராவில் வழங்கப்பட்டு இருக்கின்றன. பன்முக பிரீமியம் வசதிகள் நிறைந்த ஓர் பிக்-அப் ட்ரக்கே இசுஸு எஸ் கேப் ஆகும். இந்த மாடலில் சமீபத்திலேயே இசுஸு நிறுவனம் இசட் எனும் ட்ரிம்மை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ. 15 லட்சம் ஆகும். எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
பை எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்-கள் உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர டர்ன் இன்டிகேட்டருடன் கூடிய அட்ஜஸ்டபிள் ஓஆர்விஎம், ஆன்டி ஸ்கிட் பிளேட், சாவியில்லாமல் நுழையும் வசதி, மல்டி ஃபங்க்சன்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், இரண்டு நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட இருக்கை என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் ஹெட்ரெஸ்ட், 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆறு ஸ்பீக்கர்கள், மல்டிபிள் யுஎஸ்பி போர்ட், ரியர் பார்க்கிங் கேமிர மற்றும் பவர் விண்டோக்கள் உள்ளிட்ட அம்சங்களும் இந்த பிக்-அப் ட்ரக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதனால் இந்த பிக்-அப் ட்ரக்கின் விலை சற்று காஸ்ட்லியானதாக இருக்கின்றது. இத்தகைய ஓர் வாகனத்தையே தமிழக காவல்துறைக்காக இன்னும் வேற லெவல் திறன் கொண்டதாக மாற்றி இசுஸு வழங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இந்த நிலையிலேயே தமிழக அரசிடம் சூப்பரான ரெஸ்க்யூ வாகனம் ஒப்படைக்கப்பட்ட இருக்கின்றது. மீட்டுப் பிரிவினரால் செய்ய முடியாத மற்றும் மிகவும் ஆபத்தான சூழல்களில் இந்த வாகனம் பெரும் உதவியாக இருக்கப் போகின்றது.


Click it and Unblock the Notifications









