விவசாயிகளுக்கு ஏகப்பட்ட பணம் மிச்சமாகும்! டிராக்டருக்கு இனி டீசல் போட தேவையில்ல! எப்படி தெரியுமா?
ஐடிஎல் நிறுவனம் இந்தியாவில் தனது சோலிஸ் எஸ்வி சீரியஸில் எலெக்ட்ரிக் டிராக்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி சீரிஸ் எஸ், சி, ஹெச், மற்றும் என் ஆகிய சீரியஸ்களின் எலெக்ட்ரிக் டிராக்டர்கள் அறிமுகம் ஆகி உள்ளது. இதற்காக நிறுவனம் ரூபாய் 850 கோடியை முதலீடு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இன்டர்நேஷனல் டிராக்டர் லிமிடெட் என்ற நிறுவனம் தற்போது இந்தியாவில் சோனாலிகா டிராக்டர்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் சர்வதேச அளவிலும் டிராக்டர்களை விற்பனை செய்து வருகிறது . அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் வளர்ச்சியை இரண்டு மடங்காக மாற்ற இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு முயற்சியாக இந்நிறுவனம் 5 புதிய டாக்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் எலெக்ட்ரிக்கில் இயங்கும் எஸ்வி சீரியஸ் டிராக்டர்களும் உள்ளடங்கும். இந்த எஸ்வி சீரிஸ் எலெக்ட்ரிக் டிராக்டர்கள் ஐடிஎல் நிறுவனத்தின் சோலீஸ் பிராண்டில் விற்பனையாக உள்ளது. இந்த எலக்ட்ரிக் டிராக்டர்கள் சர்வதேச மார்கெட்டிற்காக உருவாக்கப்பட்டதாகவும், குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த டிராக்டர்கள் விற்பனையாக உள்ளன.
ஐடிஎல் நிறுவனம் இந்த சோலீஸ் எஸ்வி சீரிஸ் டிராக்டர்களில் சீரியஸ் எஸ், சி, எச் மற்றும் என் ஆகிய டிராக்டர்களை கடந்த 14ஆம் தேதி கூர்கானில் வைத்து அறிமுகப்படுத்தியது. இந்த எஸ்வி சீரிஸ் டிராக்டர்கள் அதிக டார்க் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது 0 முதல் 100 சதவீத சார்ஜை வெறும் 3 முதல் 3.5 மணி நேரத்தில் ஏற்றிவிடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த ரக வாகனங்கள் 8 முதல் 9 மணி நேரம் வரை சார்ஜ் ஏற்ற எடுத்துக் கொள்ளும்.
இந்த எலெக்ட்ரிக் டிராக்டர்களின் எச் மற்றும் எஸ் சீரியஸ் டிராக்டர்கள் சர்வதேச அளவில் அறிமுகமாகியுள்ளன. சி சீரியஸ் டிராக்டர் ஐரோப்பா மார்க்கெட்டிற்கு மட்டும் விற்பனையாகும் என தெரிகிறது. மேலும் என் சீரியஸ் டிராக்டர்கள் ஐரோப்பா அமெரிக்கா ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் மட்டும் விற்பனையாகும் என தெரிகிறது.
இந்த எலெக்ட்ரிக் டிராக்டர் தயாரிப்பிற்காக ஐடிஎல் நிறுவனம் ரூபாய் 850 கோடியை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் புதிய தயாரிப்பு ஆலையை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த டிராக்டர்கள் குறித்த ஆய்வு பணிக்காக ரூபாய் 150 கோடியை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் சிறப்பான டிராக்டர்களை தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஐடிஎல் நிறுவனத்தின் செயல் இயக்குனர் ராகுல் மிட்டல் கூறும்போது: " நாங்கள் ஐரோப்பா ஸ்டைலில் ஜப்பான் தரத்தில் இந்திய தயாரிப்பு செலவில் வாகனங்களை எப்படி தயாரிப்பது என்ற ஃபார்முலாவை கண்டுபிடித்துள்ளோம். இந்த ஃபார்முலாவிற்கான முக்கிய கூராக தொடர்ந்து எங்களுக்கு கிடைக்கும் வளர்ச்சியும் எங்கள் நெட்வொர்க்கில் இருக்கும் பார்ட்னர்களும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறார்கள் .
சவால்களை எதிர்கொண்டு எங்களை மறுபுத்துணர்ச்சி செய்ய நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம். இந்த எங்கள் புதிய பார்முலா சர்வதேச டிராக்டர் தேவைகளை பூர்த்தி செய்யும் உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு எங்கள் தயாரிப்பு மூலம் உதவி செய்ய காத்திருக்கிறோம். எங்கள் தயாரிப்புகள் அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதை எங்கள் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் சாத்தியமாக்க திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினார்.
தற்போது உலகம் முழுவதும் மிகப்பெரிய வாகனப் புரட்சி ஏற்பட்டு வருகிறது. பலர் பெட்ரோல் டீசல் வாகனங்களை கைவிட்டு விட்டு மாற்று எரிபொருள் கொண்ட வாகனங்களை அதிகம் விரும்பி வருகின்றனர். இதனால் உலகம் முழுவதும் ஏற்படும் மாசு வெகுவாக குறையும் என நம்பப்படுகிறது. இதில் எலெக்ட்ரிக் வாகனங்கள் முக்கிய இடத்தை பிடிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை படிப்படியாக அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் டிராக்டர் போன்ற விவசாய பணிக்காக பயன்படும் வாகனங்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் புகுந்துள்ளது .தற்போது எலெக்ட்ரிக் டிராக்டர்கள் மிகப்பெரிய புரட்சிதான். இந்த டிராக்டர்களின் விற்பனை இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது..


Click it and Unblock the Notifications








