யாரு கண்ணுலையும் படாம வச்சிருந்த காரில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த பிரபல நடிகர்.. இத கொண்டு வரவா இந்த காரு!!
நடிகர்கள் சிலர் படத்துல நடிக்கிறதுக்காக செய்திகளில் இடம்பெறுகிறார்களோ இல்லையோ, சொகுசு கார்களை வாங்கும் விஷயத்தில் மட்டும் ஆட்டோ உலகின் தலைப்பு செய்திகளிலேயே அவர்கள் சில நேரங்களில் இடம் பிடித்துவிடுகின்றனர். இந்த மாதிரியான நடிகர்களுக்கு மத்தியில் முற்றிலும் மாறுபட்ட வாகன ரசனைக் கொண்ட நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவரே ஜாக்கி ஸ்ரோஃப்.
இவர் தனித்துவமான மற்றும் மிக சிறந்த ரசனையை வாகனங்கள் விஷயத்தில் கொண்டிருக்கின்றார். இதை பரைசாற்றும் விதமாக, பெரிய அளவில் ஆடம்பரமில்லாத ஓர் வாகனத்தை அவர் பயன்படுத்தி வருவது தற்போது தெரிய வந்திருக்கின்றது. இசுஸு வி-கிராஸ் பிக்-அப் டிரக்கையே அவர் பயன்படுத்தி வருகின்றார்.

இந்த காரில் பயணிகள் மட்டுமின்றி சரக்குகளையும் ஏற்றிச் செல்ல முடியும். ஆகையால், 2-இன்-1 பயன்பாட்டு வசதிக் கொண்ட காராக அது காட்சியளிக்கின்றது. இந்த காரிலேயே சிறிய செடி தொட்டி உடன் அவர் அந்தேரி படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருக்கின்றார். பலர் இந்த காரில் அவர் வந்ததை பார்த்து, இப்போதுதான் பிக்-அப் டிரக் வாங்கப்பட்டிருக்கின்றது என தவறாக கருதி வருகின்றனர்.
ஆனால், இந்த பிக்-அப் டிரக்கை 2017 ஆண்டிற்கு பின்னரே வாங்கி இருக்கின்றார். இதன் வாயிலாக ஜாக்கி ஸ்ரோஃப் தன்னுடைய வழக்கமான பயணங்களுக்காக பிக்-அப் டிரக்கையும் பயன்படுத்தி வருகின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இந்த காரில் காட்சி தருவதே இதுவே முதல் முறை என தெரிகின்றது.

இந்த பிக்-அப் டிரக்கை பார்த்து மிக லேசாக எடை போட்டுவிடக் கூடாது. பார்க்க மட்டுமே இந்த டிரக் மிகவும் சாதாரணமானதாக தோன்றும். ஆனால், பயன்பாட்டு விஷயத்தில் இந்த கார் உங்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். அத்தகைய அட்டகாசமான மற்றும் அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கிய ஓர் பிக்-அப் டிரக்கே இசுஸு வி-கிராஸ் ஆகும்.
இதனால்தான் சில தொழிலதிபர்கள்கூட இந்த காரை தங்களின் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். மிகவும் கடினமான, அதாவது, கரடு - முரடான பாதைகளைக் கூட இந்த கார் அசால்டாக கடந்துச் சென்றுவிடும். இத்தகைய திறன் கொண்டதே இசுஸு வி-கிராஸ் பிக்-அப் டிரக் ஆகும்.

இந்த வாகனத்தால் குறிப்பிட்ட அளவு ஆழம் நிறைந்த நீர் நிலைகளில்கூட பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. குண்டும், குழியுமான சாலைகளைச் சமாளிக்கும் பொருட்டு இந்த திறன் அக்காருக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த காரில் மிக முக்கியமாக 4X4 வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஏற்றம் மற்றும் இறக்கம் என எந்தமாதிரியான கடுமையான சாலையாக இருந்தாலும் இந்த கார் சமாளித்துவிடும். இத்தகைய சூப்பரான திறன் கொண்ட காரையே ஜாக்கி ஸ்ரோஃப் பயன்படுத்தி வருகின்றார். இந்தியாவில் இந்த நடிகர் மட்டுமல்ல ஜான் ஆபிரகாம் இடத்திலும் இந்த கார் பயன்பாட்டில் இருக்கின்றது.
இதுபோன்று இன்னும் பல நடிகர்கள் இந்த காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒரு சிலர் இந்த காரை வைத்திருப்பதை வெளி உலகிற்கு தெரியாமலேயே பயன்படுத்தி வருகின்றனர். ஜாக்கி ஸ்ரோஃப் இடத்தில் இதுபோன்ற சாதாரண கார்கள் மட்டுமல்ல ஒரு சில அரிய வகை வாகனங்களும் பயன்பாட்டில் இருக்கின்றன.
அந்தவகையில், லோட்டஸ் எஸ்பிரிட் டர்போ, விண்டேஜ் ஜாகுவார் எஸ்எஸ்100 மற்றும் பல விண்டேஜ் கிளாசிக் கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. அதுதவிர, ஜாகுவார் எக்ஸ்கேஆர் கூபே, பிஎம்டபிள்யூ எம்5, பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி, ஃபியட் 1100 செடான், டொயோட்டா ஃபார்ச்சூனர், இன்னோவா ஆகிய கார்களும் பயன்பாட்டில் இருக்கின்றன.
இதுதவிர, ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கோஸ்டு ரைடர் பைக் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. இவையே ஜாக்கி ஸ்ரோஃபை தனித்துவமான டேஸ்ட் கொண்ட வாகன காதலர் என்பதை தெரியப்படுத்துகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தன்னுடைய பெரும்பாலான பயணங்களுக்கு இந்த பழம்பெரும் நடிகர் வழக்கமான கார்களையே பயன்படுத்தி வருகின்றார். இன்னோவா, ஃபார்ச்சூனர் மற்றும் சில நேரங்களில் டூ-வீலர்களையும் அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். இதுமட்டுமில்லைங்க, ஒரு சில நேரங்களில் அரிய வகை கார்களிலும் வெளியில் வந்து அவரது ரசிகர்களை அவர் வியப்பில் ஆழ்த்துவதும் உண்டு.


Click it and Unblock the Notifications
