ஒரு சாமியாருகிட்ட இவ்ளோ விலை உயர்ந்த காரா! விலைய கேட்டதும் தலையே சுத்திருச்சு.. அம்பானிக்கே டஃப் கொடுக்கிறாரே!

"ஒரு சாமியாருகிட்ட இவ்ளோ விலை உயர்ந்த காரா" என வாயை பிளக்கச் செய்யும் அளவிற்கு மிகுந்த அதிக விலைமிக்க கார் ஒன்றில் ஜக்கி வாசுதேவ் வலம் வந்திருக்கின்றார். அவர் பயன்படுத்தியது என்ன கார்? அதன் விலை எவ்வளவு? அதன் சிறப்புகள் என்ன? என்பது போன்ற அனைத்து விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஆன்மீகம் மற்றும் சர்ச்சை என இரண்டிற்கும் பெயர்போனவரே சத்குரு என்றழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ். இவர் மிகப் பெரிய வாகன காதலர் ஆவார். இது உங்களில் ஒரு சிலருக்கு புதிதாக தெரியலாம். இதுவே, நீங்கள் நம்முடைய ரெகுலர் வாசகர் என்றால் ஜக்கி வாசுதேவ் எத்தகைய வாகன பிரியர் என்பது உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும்.

Jaggi drives land rover defender 110

இவரிடத்தில் ஏகப்பட்ட சொகுசு கார்கள், ஆடம்பர வகை பைக்குகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே ஜக்கு வாசுதேவ் மிக மிக அதிக விலைக் கொண்ட கார் ஒன்றில் வலம் வரும் வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அவர் பயன்படுத்தி இருப்பது லேண்ட் ரோவர் நிறுவனத்தின் பிரபலமான சொகுசு கார் மாடல்களில் ஒன்றான டிஃபெண்டர் 110 (Land Rover Defender 110) ஆகும்.

இதன் இந்திய மதிப்பு ரூ. 2.5 கோடி ஆகும். இத்தகைய மிக உயரிய விலைக் கொண்ட காரிலேயே ஜக்கி வலம் வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ அவரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கின் வாயிலாகவே வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 மாடலில் சோலோவாக (தனி ஆளாக) ஜக்கி வாசுதேவ் வலம் வந்திருக்கின்றார்.

Sadhguru

கோயம்பத்தூரில் அமைந்துள்ள ஈஷா யோகா மைய வளாகத்தில் வைத்தே அவர் அந்த காரை ஓட்டி இருக்கின்றார். இந்தியாவில் ஒரு சில சாமியார்கள் பெரும் செல்வந்தர்களுக்கே டஃப் கொடுக்கின்ற அளவிற்கு மிகுந்த லக்சூரி வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். அந்த மாதிரியானோரில் ஒருவராகவே ஜக்கி இருக்கின்றார்.

இதற்கு சான்றாக அவரிடத்தில் ஏகப்பட்ட சொகுசு மற்றும் ஆடம்பர வசதிகள் நிறைந்த கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதில் ஒன்றே டிஃபெண்டர் 110 ஆகும். அவர் பயன்படுத்தி இருப்பது 5 கதவுகளைக் கொண்ட டிஃபெண்டர் 110 கார் மாடல் ஆகும். இதே கார் 3 கதவுகள் கொண்ட வெர்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Sadhguru new land rover

அது டிஃபெண்டர் 90 எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஜக்கி வாசுதேவ் ஓட்டிய சொகுசு காரில் அதி திறனை வெளியேற்றக் கூடிய 5.0 லிட்டர் சூப்பர் சார்ஜட் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 525 பிஎஸ் மற்றும் 625 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

மேலும், வெறும் 5.4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனையும் இந்த கார் கொண்டிருக்கின்றது. இந்த காரால் 3.5 டன் எடையைக் கூட அசால்டாக இழுத்துச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய தரமான திறனை வெளியேற்றக் கூடிய சூப்பர் லக்சூரி காரையே ஜக்கி கோவையில் வைத்து பயன்படுத்தி இருக்கின்றார்.

இவரிடம் கார்களைப போலவே அதிகளவில் மோட்டார் சைக்கிள்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. யமஹா ஆர்டி350 பைக்கைக்கூட இவர் கடந்த காலங்களில் பயன்படுத்தி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, அவரிடத்தில் 350 கிலோ எடைக் கொண்ட பிஎம்டபிள்யூ கே 1600 ஜிடி மற்றும் யெஸ்டி நிறுவன பைக்குகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சத்குரு மட்டுமில்லைங்க பாபா ராம்தேவ், இவரும் மிகப் பெரிய வாகன ஆர்வலராக இருக்கின்றார். இவரும் சமீபத்தில் ஓர் டிஃபெண்டர் 130 காரை வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவர் வாங்கிய அந்த சொகுசு காரின் விலை ரூ. 1.41 கோடி ஆகும். இந்த காரை பாபா ராம்தேவ் அவரின் அம்மாவுடன் ரைடு செய்யும் வீடியோ அண்மையில் வெளியாகியது குறிப்பிடத்தகுந்தது.

Article Published On: Monday, August 28, 2023, 17:40 [IST]
English summary
Jaggi vasudev drives land rover defender 110 worth rs 2 5 crore
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X