ஆஹா நெல்சனுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா! போர்ஷேவின் இந்த மாடலையா அள்ளி கொடுத்திருக்காங்க!..

ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படக் குழு செம்ம குஷியில் இருக்கின்றது. குறிப்பாக, படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் குழுமம் வேற லெவல் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது. இந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக சன் பிக்சர்ஸ், ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு உருதுணையாக இருந்தவர்களுக்கு பரிசு மழையை பொழியத் தொடங்கி இருக்கின்றது.

அந்தவகையில், திரைப்படத்தின் கதாநாயகனான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மிக மிக விலையுயர்ந்த காரை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் வழங்கினார். பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு காரே அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 1.40 கோடிக்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

Kalanithi maran gift porsche to nelson

ஆன்-ரோடில் இதன் விலை இரண்டு கோடியைக்கூட தொடக் கூடும். இந்த நிலையிலேயே, ரஜினியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குனரான நெல்சன் திலிப் குமாருக்கும் சன் பிக்சர்ஸ் சார்பில் மிக மிக விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கி கலாநிதி மாறன் ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார். நெல்சனுக்கு புத்தம் புதிய போர்ஷே சொகுசு காரே பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.

சென்னையில் உள்ள சன் டிவி அலுவலகத்தில் வைத்தே அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. சொகுசு காரை கலாநிதி மாறனே நேரடியாக அவருக்கு வழங்கி, வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கின்றார். மூன்றுக்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யும்படி அவரிடம் கூறப்பட்டு இருக்கின்றது.

porsche car gifted to nelson dilipkumar

பிஎம்டபிள்யூ மற்றும் போர்ஷே என பல நிறுவனங்களின் சொகுசு கார்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில், அவர் போர்ஷே சொகுசு காரையே தேர்வு செய்திருக்கின்றார். முகப்பு பகுதியை வைத்து பார்க்கையில் அது போர்ஷே மசான் (Porsche macan) மாடலை போல் தெரிகின்றது.

இந்த கார் மாடலின் ஆரம்ப நிலை மாடலே ரூ. 88 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. இயக்குநர் நெல்சனுக்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கும் போர்ஷே மசான் மாடலின் விலை ரூ. 1.40 கோடிக்கும் அதிகமான விலைக் கொண்டதாக இருக்கலாம் என கணிக்கப்படுகின்றது.

Porsche

இந்தியாவில் இந்த கார் ஒட்டுமொத்தமாக மூன்று வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மசான், மசான் எஸ் மற்றும் மசான் ஜிடிஎஸ் ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். இதில், ஆரம்ப நிலை தேர்வாக மாசன் இருக்கின்றது. இதன் விலையே ரூ. 88 லட்சம் ஆகும். இதற்கு அடுத்தபடியாக மசான் எஸ் இருக்கின்றது.

இதன் விலையே ரூ. 1.43 கோடி ஆகும். இருப்பதிலேயே உயர் நிலை தேர்வாக மசான் ஜிடிஎஸ் இருக்கின்றது. அதன் விலை ரூ. 1.53 கோடி ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த மூன்றும் வெவ்வேறு விதமான திறன் வெளிப்பாட்டையும், சிறப்பு வசதிகளையும் கொண்டவையாக இருக்கின்றன.

அலங்கரிப்பு விஷயத்திலும் ஒன்றிற்கு ஒன்று இடையில் மிகப் பெரிய வித்தியாசம் தென்படுகின்றது. மசான் தேர்வு அதிகபட்சமாக 265 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 232 கிமீ ஆகும். இதைவிட சற்று அதிக திறனை வெளியேற்றக் கூடிய தேர்வாக மசான் எஸ் இருக்கின்றது.

இது அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மோட்டார் 380 பிஎஸ் வரையில் பவரை வெளியேற்றும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 259 கிமீ ஆகும். இதுதவிர 4.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை இந்த கார் எட்டிவிடும்.

இந்த இரு தேர்வுகளைக் காட்டிலும் மிக சிறப்பான திறனை வெளியேற்றக் கூடிய தேர்வாக மசான் ஜிடிஎஸ் இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 272 கிமீ ஆகும். மேலும், இதனால், வெறும் 4.5 செகண்டுகளிலேயே 0-100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும்.

இதுமட்டுமில்லைங்க இந்த கார் சொகுசு மற்றும் தொழில்நுட்பங்கள் விஷயத்திலும் நம்மை பிரம்மில் ஆழ்த்தக் கூடிய தயாரிப்பாக இருக்கின்றது. மேலும், போர்ஷே மசான் காரை 14 விதமான நிற தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். இதுபோன்ற வசதிகளின் காரணத்தினாலேயே இந்திய தொழிலதிபர்களின் மிகவும் விருப்பமான காராக போர்ஷே மசான் காட்சியளிக்கின்றது. இத்தகைய தரமான காரையே ஜெயிலர் படத்தின் வெற்றியை முன்னிட்டு அதன் இயக்குநரான நெல்சனுக்கு கலாநிதி மாறன் பரிசாக வழங்கி இருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நெல்சனுக்கு போர்ஷே சொகுசு கார் வழங்கப்பட்டு இருப்பது தமிழ் சினிமா திரை உலகையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், இந்த கலாச்சாரம் அடுத்து வரும் காலங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது நெல்சனுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றது.

Article Published On: Friday, September 1, 2023, 20:41 [IST]
English summary
Jailer director nelson dilipkumar got porsche luxury car gift from kalanithi maran
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X