அவங்க இவ்ளோ விலை குறைவான காருல வந்தாங்களா!.. கோடி கோடியா சொத்து இருந்தும் இந்த காருல வந்ததுக்கான காரணம் என்ன?
எம்ஜி நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடலாக கோமெட் இவி இருக்கின்றது. இதுவே இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரும்கூட. முன்னதாக இந்த இடத்தை (இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் பதவியை) டாடா மோட்டார்ஸின் டியாகோ இவி தக்க வைத்திருந்தது.
இந்த காரின் விலை ரூ. 8.69 லட்சம் ஆகும். இதைவிட மிகக் குறைவான விலையிலேயே எம்ஜி கோமெட் இவி விற்பனைக்கு வந்திருக்கின்றது. அதன் விலை ஆரம்ப விலையே ரூ. 7.98 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

கிட்டத்தட்ட டாடா டியாகோ இவியை விட 70 ஆயிரம் ரூபாய் குறைவான விலையில் கோமெட் இவி விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதனாலேயே பலரின் கவனத்தை இந்த கார் ஈர்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே பிரபல பாலிவுட் நடிகையும், மறைந்த முன்னாள் திரை நட்சத்திரம் ஸ்ரீதேவி அவர்களின் மகளுமான ஜான்வி கபூர் கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தும் வீடியோ இன்ஸ்டா, யுட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
பல கோடி ரூபாய்க்கு அதிபதியாக ஜான்வி கபூர் இருக்கின்றார். இவரின் தந்தை போனி கபூர் மிகப் பெரிய திரைப்பட தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தகுந்தது. அஜித்தின் வலிமை உள்ளிட்ட பல படங்களை அவர் இயற்றி இருக்கின்றார். இத்தகைய பெரும் பணக்காரராக இருக்கும் இவர் கோமெட் இவி போன்ற மலிவு விலை காரை பயன்படுத்தியது ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும், "நகர பயன்பாட்டிற்கு ஏற்ப மிகக் குட்டியான காராக எம்ஜி கோமெட் தயாரிக்கப்பட்டிருப்பதன் காரணத்தினால் அவர் அக்காரை வாங்கியிருப்பார், எளிமையான வாழ்க்கையை வாழ்வதற்காக இந்த காரை ஜான்வி வாங்கி இருக்கலாம்" என்றெல்லாம் பலவிதமான கட்டுக்கதைகள் தற்போது பேசப்பட்டு வருகின்றன. ஆனால், உண்மையில் கோமெட் இவியை புரமோட் செய்யும் விதமாகவே ஜான்வி அதனை பயன்படுத்தி இருக்கின்றார்.
நடிகர்களை பயன்படுத்தினால் கூடுதல் வாடிக்கையாளர்களைக் கவர முடியும் என்பது பெரும் நிறுவனங்களின் எண்ணம். இதன் அடிப்படையிலேயே அவரை வைத்து கோமெட் இவியை பிரபலப்படுத்தும் முயற்சியில் எம்ஜி களமிறங்கி இருக்கின்றது. மேலும், புதிய புரமோஷன் வீடியோவையும் அது தற்போது வெளியிட்டு இருக்கின்றது. வீடியோவில் காரின் சிறப்பு விஷயங்களை பலவற்றை ஜான்வி எடுத்துரைப்பதை நம்மால் காண முடிகின்றது.

குறிப்பாக, காருக்குள் வழங்கப்பட்டு இருக்கும் பெரிய திரை, டிரான்ஸமிஷன் மற்றும் பிற பிரீமியம் அம்சங்கள் சிலவற்றை பற்றி அவர் விவரிக்கின்றார். இதுதவிர காரின் வெளிப்புற அழகையும் அவர் வர்ணித்திருக்கின்றார். குறிப்பாக அவர் கடைசியாக, "சந்தேகமே இல்லை, இந்த கார் சாலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்" என கூறிய வார்த்தையே பலரை கவரும் வகையில் அமைந்திருக்கின்றது.
உண்மையில் எம்ஜி கோமெட் பலரைக் கவரும் காராக இருக்கின்றது. அடக்கமான தோற்றம், மலிவு விலை மற்றும் அதிக நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவற்றிற்காக வாடிக்கையாளர்களை தேனீக்களைப் போல எம்ஜி கோமெட் இவி கவர்ந்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஜான்வியை வைத்து கூடுதல் வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் எம்ஜி களமிறங்கி இருக்கின்றது.
எம்ஜி கோமெட் மிகவும் குட்டியான உருவத்தில் இருந்தாலும், அந்த காரில் ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். மிகவும் உடல் பருமன் கொண்டவர்கள் என்றால், அதில் நான்கு பேரால் மட்டுமே பயணிக்க முடியும். சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி, பார்க்கிங் சென்சார்களுடன் கூடிய கேமிரா, டூயல் ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் கோமெட் இவியில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த அம்சங்கள் அனைத்தும் காரில் இருப்பதை ஜான்வியும் வீடியோவில் கூறி இருப்பார். ஒட்டுமொத்தமாக இந்த கார் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். பேஸ் (Pace), பிளே (Play) மற்றும் பிளஷ் (Plush) ஆகியவையே அவை ஆகும். கோமெட் இவி-யை பயன்படுத்த ஒரு மாதத்திற்கே ரூ. 519 மட்டுமே செலவாகும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இந்த கார் ஓர் முழு சார்ஜில் 230 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த ரேஞ்ஜ் திறனுக்காக 17.3 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது 3.3 kW சார்ஜரில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் முழுமையான சார்ஜை அடைய கோமெட் 7 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும். இந்த காரில் 41 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின்மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி கோமெட் நகர பயன்பாட்டிற்கு உகந்த மின்சார காராகும். இந்த காரை நிறுத்த பெரிய அளவில் இட வசதி தேவை இருக்காது. ஓர் ஆட்டோவை நிறுத்தும் அளவிற்கு இட வசதி இருந்தாலே போதுமானது. இதுபோன்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருப்பதால் சில பெரும் பணக்காரர்களும் இந்த காரை ஆர்வத்துடன் வாங்கத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications
