இப்போ விட்டா எப்பவும் இல்ல... ஜீப் மெரிடியன் காரை வாங்க இதைவிட சரியான நேரம் இருக்காது!! குறைவான விலையில்...

ஜீப் இந்தியா நிறுவனம் அதன் காம்பஸ் (Compass) மற்றும் மெரிடியன் (Meridian) கார்களில் 'க்ளப் எடிசன் (Club Edition)' என்ற பெயரில் புதிய லிமிடெட் எடிசன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் கார்களை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஜீப் தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யும் கார்கள் என்று பார்த்தால், அவை காம்பஸ் மற்றும் மெரிடியன் ஆகும். 5 இருக்கைகளை கொண்ட காம்பஸ் காரின் 6/ 7 இருக்கை வெர்சன் தான் மெரிடியன் ஆகும். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜீப் மெரிடியன் கடந்த 2022 மே மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜீப் மெரிடியன் காரை வாங்க இதைவிட சரியான நேரம் இருக்காது!!

இந்த நிலையில்தான் தற்போது விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக காம்பஸ் மற்றும் மெரிடியன் கார்களில் புதிய க்ளப் எடிசனை ஜீப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இவை ஸ்பெஷல் எடிசன்களாகும். பொதுவாக ஸ்பெஷல் எடிசன்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்படும். அந்த வகையில், காம்பஸ் மற்றும் மெரிடியன் கார்களின் புதிய க்ளப் எடிசன்கள் இந்த பிப்ரவரி 28ஆம் தேதி வரையில் மட்டுமே விற்பனையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிசன்களின் சிறப்பம்பமே அவற்றின் விலைகள் தான். ஏனெனில், ஜீப் காம்பஸின் ஸ்போர்ட் வேரியண்ட்டில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய க்ளப் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலையானது ரூ.20.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே, காம்பஸ் ஸ்போர்ட் வேரியண்ட்டின் விலை ரூ.21.09 லட்சமாகும். காம்பஸிலாவது பரவாயில்லை, வெறும் ரூ.10,000 குறைவான விலையில் தான் க்ளப் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதுவே ஜீப் மெரிடியனில் லட்சங்களில் வித்தியாசம் உள்ளது.

ஜீப் மெரிடியன் காரை வாங்க இதைவிட சரியான நேரம் இருக்காது!!

ஆம், மெரிடியன் க்ளப் எடிசனின் விலை வழக்கமான வேரியண்ட்டின் விலையை காட்டிலும் சுமார் ரூ.2.35 லட்சம் குறைவான விலையில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, மெரிடியனின் லிமிடெட் வேரியண்ட்டின் அடிப்படையில் இந்த புதிய லிமிடெட் எடிசன் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மெரிடியன் லிமிடெட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.30.10 லட்சமாகும். ஆனால் இதன் அடிப்படையிலான புதிய க்ளப் எடிசனின் விலை ரூ.27.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான், அமெரிக்கன் ஸ்டைலில் ஜீப் காம்பஸ் அல்லது மெரிடியன் காரை வாங்க நீண்ட மாதங்களாக திட்டமிட்டு வருபவர்கள் காரை முன்பதிவு செய்ய இதுவே சரியான தருணம் என்கிறோம். காம்பஸ் மற்றும் மெரிடியன் இரண்டும் 2 லிட்டர் டீசல் என்ஜின் உடன் கிடைக்கின்றன. அதிகப்பட்சமாக 170 பிஎஸ் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஜீப் மெரிடியன் காரை வாங்க இதைவிட சரியான நேரம் இருக்காது!!

காம்பஸ் கார் மட்டும் கூடுதலாக 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்விலும் கிடைக்கிறது. அதிகப்பட்சமாக 163 பிஎஸ் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு ட்யூவல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் காம்பஸ் மற்றும் மெரிடியன் கார்களில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள லிமிடெட் எடிசன்கள் டீசல் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய க்ளப் எடிசன்களில் என்ஜின் பகுதியை மூடியிருக்கும் முன்பக்க பொனெட்டில் புதிய கிராஃபிக்ஸும், பின்பக்க பூட் பகுதியில் கூடுதலாக 'க்ளப் எடிசன்' முத்திரையும் இடம்பெற்றுள்ளன. இவை தவிர்த்து வேறெந்த அப்டேட்டும் இந்த புதிய க்ளப் எடிசன்களில் இல்லை. இந்த ஜீப் எஸ்யூவி கார்களில் எல்இடி ஹெட்லேம்ப்கள், பனோராமிக் சன்ரூஃப், 10-இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ட்யூவல்-ஸோன் ஏசி மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜிங் உள்ளிட்டவை ஏற்கனவே வழங்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, February 9, 2023, 15:13 [IST]
English summary
Jeep compass and meridian gets new club edition
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+