ஜீப் காம்பஸ் காரை வாங்குவதற்கு சரியான நேரம் வந்தாச்சு!! டீசல் என்ஜின் உடன் வாங்கி மாஸ் காட்டலாம்!

ஜீப் காம்பஸ் (Jeep Compass) எஸ்யூவி காரில் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்யும் திட்டத்தில் அமெரிக்க கார் பிராண்டான ஜீப் உள்ளது. காம்பஸின் இந்த புதிய வேரியண்ட்டின் சிறப்பம்சங்கள் என்னவாக இருக்கும்? இந்த புதிய வேரியண்ட்டை எந்த விலையில் எதிர்பார்க்கலாம்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகளை இனி பார்க்கலாம்.

பிரபல அமெரிக்கன் கார் தயாரிப்பு நிறுவனமான ஜீப் இந்தியாவில் விற்பனை செய்யும் விலை குறைவான கார் காம்பஸ் ஆகும். இதனாலேயே, கணிசமான எண்ணிக்கையில் கஸ்டமர்ஸை பெற்றுவரும் காம்பஸ் தற்சமயம் ஸ்போர்ட், நைட் ஈகிள், லிமிடெட் மற்றும் மாடல்-எஸ் என மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

jeep compass black shark variant

இந்த நிலையில், ஜீப் நிறுவனம் அதன் பிரபலமான காம்பஸ் எஸ்யூவி காரில் புதிய வேரியண்ட்டை 'கருப்பு ஷார்க்' (கருப்பு நிறத்திலான சுறா) என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது. காம்பஸின் புதிய ஸ்பெஷல் எடிசனாக மட்டுமின்றி, விலை குறைவான டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டாகவும் விளங்கவுள்ளது. அத்துடன், 4x4 டிரைவ் சிஸ்டத்திற்கு பதிலாக, 4x2 டிரைவ் சிஸ்டத்துடன் இயங்கக்கூடியதாகவும் இந்த வேரியண்ட் இருக்கும் என கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே, காம்பஸின் தற்போதைய டீசல் வேரியண்ட்களை காட்டிலும் இந்த புதிய வேரியண்ட்டின் விலையை குறைவானதாக எதிர்பார்க்கிறோம். புதிய பிளாக் ஷார்க் வேரியண்ட் ஆனது டாப் மாடல்-எஸ் மற்றும் லிமிடெட் வேரியண்ட்களுக்கு மத்தியில் கொண்டுவரப்படலாம். பிளாக் ஷார்ப் என பெயரை கேட்டதும், கார் முழுவதுமாக கருப்பு நிறத்தில் இருக்கும் என நினைத்துவிடாதீர்கள்.

jeep compass black shark variant

ஏனெனில் நமக்கு கிடைத்துள்ள வீடியோவில், காம்பஸின் இந்த புதிய வேரியண்ட் பளிச்சிடும் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் உள்ளது. சிவப்பு நிறத்தில் காம்பஸ் காரில் ஏற்கனவே எக்ஸோடிகா ரெட் என்ற பெயிண்ட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. முதலில் வீடியோவை பார்க்கும்போது, அந்த எக்ஸோடிகா ரெட் பெயிண்ட் ஆப்ஷனை கொண்ட காம்பஸ் இது என நினைத்தோம். ஆனால் சற்று உற்றுப் பார்க்கும்போதே அந்த பெயிண்ட்டை காட்டிலும் இது வித்தியாசமானது என்பதை அறிய முடிந்தது.

பாடி பேனல்களும், ஷீட் மெட்டலும் வழக்கமாக காம்பஸில் வழங்கப்படுபவையே உள்ளன. புதிய பிளாக் ஷார்க் வேரியண்ட்டின் பெயிண்ட்டில் கருப்பு நிறத்தை ஜீப் கவனமாக, குறிப்பிட்ட சில பாகங்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளது. இந்த வகையில், கருப்பு நிறத்தை காரின் முன்பக்கத்தில் கிரில் மற்றும் லோயர் லிப் பகுதிகளில் காண முடிகிறது. அதேபோல், அலாய் சக்கரங்களும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளன.

'பிளாக் ஷார்க்' லோகோக்களை காரின் முன்பக்க ஃபெண்டர்களில் ஜீப் நிறுவனம் வழங்கியுள்ளது. மற்றப்படி காரின் உடல் நிறத்திலேயே சைடில் பாடி கிளாடிங்குகள் உள்ளன. காருக்கு உள்ளே கேபின் முற்றிலுமாக கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், டேஸ்போர்டு உள்ளிட்ட சில பாகங்களில் சிவப்பு நிற ஹைலைட்களை பார்க்க முடிகிறது.

jeep compass black shark variant

முக்கியமான தொழிற்நுட்ப அம்சங்களாக, ட்யூயல்-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், பிரீமியம் தரத்திலான அப்ஹோல்ஸ்டரி, 10-இன்ச் டச் ஸ்க்ரீன் உள்ளிட்டவை காம்பஸ் எஸ்யூவியில் வழங்கப்படுகின்றன. ஜீப் காம்பஸில் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 9-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் தேர்வை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காம்பஸ் போன்ற அளவில் பெரியதான காரை பெட்ரோல் என்ஜினிற்கு பதிலாக டீசல் என்ஜினுடன் வாங்கவே பலரும் விரும்புபவர். ஆனால், டீசல் கார்களின் ஒரே குறை என்னவென்றால், அவற்றின் சற்று அதிகப்படியான விலை ஆகும். இதனாலேயே, காம்பஸ் டீசல் காரின் விலையை குறைக்கும் முயற்சியாக 4x2 டிரைவ் சிஸ்டத்துடன் புதிய பிளாக் ஷார்க் வேரியண்ட் களமிறக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 15, 2023, 16:56 [IST]
English summary
Jeep compass black shark with 4x2 drive system
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X