Jeep கார்களின் விலை கடுமையாக குறைப்பு... இனி மாருதி காரை போல இந்த சொகுசு காரும் எல்லாரு வீட்டுலையும் இருக்கும்
வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல வாகன கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் காரணம் காட்டியும், புதிய பிஎஸ்-6 கட்டம் 2 மாசு உமிழ்வு விதியைக் காரணம் காட்டியும் புதிய வாகனங்களின் விலையைக் கடுமையாக உயர்த்திய வண்ணம் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் மற்ற நிறுவனங்களிடம் இருந்து தனித்து நிற்கும் விதமாக ஓர் கார் உற்பத்தி நிறுவனம் மட்டும் அதன் புதிய கார்களின் விலையைக் கடுமையாக குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஜீப் நிறுவனமே தன்னுடைய கார் மாடலின் குறிப்பிட்ட சில வேரியண்டுகளின் விலையைக் குறைத்திருக்கின்றது. காம்பஸ் மற்றும் மெரிடியன் ஆகிய இரு மாடல்களின் விலையிலேயே அது மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த வருடம் தொடங்கி, கார்களின் விலை குறைப்பதாக அறிவித்திருக்கும் முதல் நிறுவனம் இதுவே ஆகும்.

வேறு எந்த நிறுவனமும் இந்த மாதிரியான ஓர் அறிவிப்பை அறிவிக்கவில்லை. அதேவேளையில், அனைத்து நிறுவனங்களும் விலையை உயர்த்தும் பணியில்தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி என முன்னணி நிறுவனங்கள் பல தங்களின் புதிய வாகனங்களின் விலையை ஏற்கனவே உயர்த்தி விட்டன.
ஏற்கனவே, ஜனவரி மாதத்தில் விலை உயர்வைச் செய்த நிலையில், தற்போது, ஏப்ரலிலும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய இரு முன்னணி கார் மாடல்களின் குறிப்பிட்ட வேரியண்டுகளின் விலை மட்டும் ஜீப் குறைத்திருக்கின்றது.

1.08 லட்சம் ரூபாய் தொடங்கி ரூ. 2.35 லட்சம் வரையில் அது விலையைக் குறைத்திருக்கின்றது. நிறுவனம் புதிய விதிகளுக்கு ஏற்ப தன்னுடைய இந்த இரு கார்களையும் அப்கிரேட் செய்திருக்கின்ற நிலையிலும் விலை குறைப்பைச் செய்திருக்கின்றது. இதுதான் இந்த குறைப்பின் கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுகின்றது.
ஜீப் நிறுவனத்தின் இந்த செயல் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, போட்டி நிறுவனங்களை ஜீப்பின் இந்த செயல் திண்டாடச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேவேளையில், விலை குறைப்பானது காம்பஸ் மற்றும் மெரிடியன் ஆகிய இரு கார் மாடல்களின் குறிப்பிட்ட ஒற்றை வேரியண்டில் மட்டுமே செய்யப்பட்டு இருக்கின்றது.

இதேபோல், சில வேரியண்டுகளில் அப்கிரேட் செய்தும் விலையை ஏற்றவில்லை. ஜீப் காம்பஸ் ஒட்டுமொத்தமாக 8 விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், காம்பஸ் ஸ்போர்ட் ஏடி பெட்ரோல் தேர்வும் ஒன்றாகும். இதன் விலையிலேயே ரூ. 1.08 லட்சம் வரை விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கின்றது.
முன்னதாக ரூ. 22.07 லட்சமாக இருந்த இதன் விலை, தற்போது ரூ. 20.99 லட்சமாக குறைந்திருக்கின்றது. விலை குறைப்பால் ஆரம்ப நிலை வேரியண்டாக இது மாறி இருக்கின்றது. இதேபோல், லிமிடெட் ஏடி பெட்ரோல் மற்றும் மோட்ஸ் எஸ் ஏடி பெட்ரோல் ஆகிய இரு வேரியண்டுகளின் விலையையும் நிறுவனம் ஒரு ரூபாய்கூட ஏற்றவில்லை.
பழைய விலையிலேயே அவை விற்பனைச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூ. 26.09-ரூ. 28.29 லட்சம் வரையில் இவை விற்கப்படுகின்றன. மீதம் இருக்கும் ஐந்து வேரியண்டுகளின் விலையிலும் ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இந்த விலை உயர்விற்கு சிறப்பு சேர்ப்பே காரணமாக கூறப்படுகின்றது.
இதேபோல், மெரிடியன் கார் மாடலின் குறிப்பிட்ட சில வேரியண்டுகளின் விலையிலும் ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கின்றது. லிமிடெட் (ஓ) எம்டி, லிமிடெட் (ஓ) ஏடி மற்றும் லிமிடெட் (ஓ) 4X4 ஏடி ஆகிய தேர்வுகளின் விலையிலேயே 35 ஆயிரம் ரூபாய் அதிகம் செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக கூறியதைப் போல் இந்த மாடலின் குறிப்பிட்ட தேர்விலும் விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. லிமிடெட் எம்டி தேர்வின் விலையே குறைக்கப்பட்டு இருக்கின்றது. ரூ. 2.35 லட்சம் வரையில் குறைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் ஆட்டோமேட்டிக் வேரியண்டின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஜீப் மெரிடியன் புதிய விலை மாற்றத்தின் காரணமாக அதன் ஆரம்ப விலை ரூ. 27.75 லட்சமாகவும், அதிகபட்ச விலை ரூ. 37.50 லட்சமாகவும் மாறி இருக்கின்றது. இந்த பதிவில் பார்த்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். காம்பஸ் இரு விதமான மோட்டார் தேர்விலும், மெரிடியன் ஒற்றை மோட்டார் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
2.0 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் தேர்வுகளே இந்த காரில் வழங்கப்படுகின்றன. இரண்டும் நல்ல திறனை வெளியேற்றக் கூடியவை ஆகும். இந்த கார்களுக்கு சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதற்கு எஞ்ஜின்களும் ஓர் காரணமாகும். இந்த நிலையில், விலை குறைப்பை ஜீப் செய்திருக்கின்றது. இது விற்பனையைக் கூடுதலாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









