பெட்ரோல் காம்பஸை விற்பனையில் இருந்து அகற்றிய ஜீப்... இதோட வெளியேற்றத்திற்கு பின்னால இப்படி ஒரு காரணமா!..

ஜீப் (Jeep) நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் காம்பஸ் (Compass) கார் மாடலும் ஒன்று. இது ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-Size SUV) ரக காராகும். இந்த காரின் உற்பத்தியை ஜீப் நிறுவனம் அதன் ரஞ்ஜங்கன் ஆலையில் வைத்தே அந்நிறுவனம் மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், திடீரென காம்பஸ் கார் மாடலின் பெட்ரோல் வெர்ஷனின் உற்பத்தி பணிகளை மட்டும் ஜீப் நிறுவனம் சமீபத்தில் நிறுத்தியது. தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து டீலர்களும் அந்த வெர்ஷனுக்கான புக்கிங்கை ஏற்பதை நிறுத்தினர். இந்த நிலை, ஜீப் நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் காம்பஸ் கார் மாடலின் பெட்ரோல் வெர்ஷனை சந்தையை விட்டு வெளியேற்றலாம் என எதிர்பார்க்க செய்தது.

Jeep compass running shot

இந்த எதிர்பார்ப்பையே ஜீப் நிறுவனம் தற்போது நிறைவேற்றி இருக்கின்றது. ஆமாங்க, ஜீப் நிறுவனம் காம்பஸ் கார் மாடலின் பெட்ரோல் தேர்வின் வெளியேற்றத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கின்றது. எனவே இனி ஜீப் காம்பஸ் பெட்ரோல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்காது எனும் நிலை உருவாகி இருக்கின்றது.

அதேவேளையில், இதன் டீசல் வெர்ஷனை நிறுவனம் வெளியேற்றவில்லை. ஆகையால், இது மட்டுமே இனி விற்பனைக்குக் கிடைக்கும். ஜீப் நிறுவனத்தின் இந்த அதிரடி மாற்றத்திற்கு ஒரே காரணம் மட்டுமே கூறப்படுகின்றது. இந்தியாவில் பெட்ரோல் காம்பஸ் காருக்கு வரவேற்பு பெரிய அளவில் இல்லை என்பதே ஆகும்.

Jeep compass suv side view

டீசலுக்கு மட்டுமே நல்லநிலையில் வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே ஜீப் காம்பஸ் கார் மாடலின் டீசல் வெர்ஷனை மட்டும் தற்போது தக்க வைத்திருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த எஸ்யூவி கார்களில் ஜீப் காம்பஸும் ஒன்றாகும்.

சொகுசான மற்றும் சாஃப்டான இருக்கைகள், யுகன்னெக்ட் தொழில்நுட்பம் அடங்கிய 10.1 அங்குலம் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மிருதுவமான தொடும் உணர்வும் கொண்ட லெதர் உறை டேஷ்போர்டு, எளிமையாகக் கையாளும் வசதிகள் கொண்ட ஸ்டியரிங் வீல் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இக்காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இதுமாதிரியான பல்வேறு லக்சூரி அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே திரை நட்சத்திரங்கள் மத்தியில் அதற்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்திய செல்வந்தர்கள் மத்தியிலும் இந்த காருக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. ஆனால், டீசல் மோட்டாருக்கு மட்டுமே வரவேற்பு நல்ல நிலையில் இருக்கின்றது.

இதன் விளைவாகவே, அதன் டீசல் வெர்ஷன் மட்டும் தற்போது தக்க வைத்துக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. காம்பாஸ் டீசல் வேரியண்டில் 2.0 லிட்டர் மல்டிஜெட் டர்போ டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்த மோட்டாருடன் சேர்த்து 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4X4 அம்சத்துடன் கூடிய 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி ஜீப் காம்பஸ் டீசல் 21.44 லட்சம் தொடங்கி ரூ. 31.64 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜீப் காம்பஸ் பெட்ரோல் தேர்விற்கு இந்தியாவில் வரவேற்புக் கிடைக்காமல் போனதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மிக முக்கியமான காரணமாக இருப்பது அதன் குறைவான எஞ்ஜின் திறனே ஆகும். டீசல், பெட்ரோலைவிட அதிக திறனை வெளியேற்றக் கூடியதாக இருக்கின்றது. ஆகையால்தான் இந்தியர்கள் பலர் பெட்ரோலை தவிர்த்திருக்கின்றனர். மேலும், டீசல் அதிக மைலேஜை தரக் கூடியதாகவும் காட்சியளிக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 20, 2023, 11:49 [IST]
English summary
Jeep compass suv petrol avatar discontinued
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+