இப்போது விட்டால் அப்புறம் கிடைக்குறது கஷ்டம்!! வீட்டுக்கு ஒரு புது ஜீப் காரை கொண்டுவரும் நேரம் வந்தாச்சு!
ஜீப் இந்தியா (Jeep India) நிறுவனம் அதன் கார்களுக்கு வருட இறுதி சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, ஜீப் கார்களை எவ்வளவு குறைந்த விலையில் வாங்கலாம் என்பதையும், எப்போது வரையில் இந்த சலுகைகள் கிடைக்கும் என்பதை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம்.
ஒரு காலாண்டர் வருடம் முடியும் தருவாயில், ஸ்டாக்கில் உள்ள வாகனங்களை விற்று முடிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அந்த வரிசையில், அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஜீப் இந்தியாவில் அதன் கார்களுக்கு வருட இறுதி டிசம்பர் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது.

இதன்படி, ஜீப் கார்களை சுமார் ரூ.11.85 லட்சம் வரையிலான சலுகைகள் உடன் இந்த சலுகை காலத்தில் பெறலாம். இந்த சலுகைகளில் பணம் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன. ரூ.11.85 லட்சம் வரையிலான சலுகைகளை ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் செரோக்கி காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்தியாவில் ஜீப் நிறுவனம் விற்பனை செய்யும் விலையுயர்ந்த கார் இதுவாகும்.
பிரபலமான ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை ரூ.1.50 லட்சம் வரையிலான சலுகைகள் உடன் வாங்கலாம். காம்பஸ் காரின் லாங்-வீல்பேஸ் காரான மெரிடியன் 3-வரிசை எஸ்யூவி காருக்கு ரூ.4 லட்சம் வரையிலான சலுகைகள் கிடைக்கும். அத்துடன், ஜீப் மெரிடியன் காரை வாங்குவோர் 10 வருடங்கள் வரையிலான ஃபைனான்ஸ் உதவிகளை பெறலாம்.

ஜீப் வ்ராங்க்லர் காருக்கு எந்தவொரு சலுகைகளும் இந்த டிசம்பர் மாதத்தை முன்னிட்டு வழங்கப்படவில்லை. இந்த சிறப்பு சலுகைகள் வருகிற டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து ஜீப் டீலர்ஷிப் ஷோரூம்களில் கிடைக்கும் என்பதால், இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள ஜீப் டீலர்ஷிப் ஷோரூமை தொடர்பு கொள்ளவும்.
இந்திய சந்தையில், ஜீப் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யும் விலை குறைவான காராக காம்பஸ் விளங்குகிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.20.49 இலட்சமாக உள்ளது. மெரிடியன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.33.40 இலட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. இவை சலுகைகளால் கழிக்கப்படாத விலைகள் ஆகும்.

இந்த முறை சலுகைகளை பெறாத ஜீப் வ்ராங்க்லர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.62.65 இலட்சத்தில் துவங்குகிறது. இந்தியாவில் விலையுயர்ந்த ஜூப் காரான கிராண்ட் செரோக்கியின் ஆரம்ப விலை ரூ.80.50 இலட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். உங்களுக்கு அருகில் உள்ள ஜீப் ஷோரூம்களில், இந்த விலைகளில் சிறு மாற்றம் இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு வணிகத்திலும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அவசியமான ஒன்றே. நல்ல நேரம் பார்த்து புது வாகனம் வாங்கும் நம் நாட்டு மக்களை கவர்வதற்கு சலுகைகள் முக்கியமாகும். குறிப்பாக, விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்யும் ஜீப் போன்ற நிறுவனத்தின் தயாரிப்புகளை மக்களிடத்தில் மேலும் கொண்டுச் சேர்க்க சலுகை அறிவிப்புகள் அவ்வப்போது தேவைப்படுகின்றன. வருகிற ஜனவரியில் இருந்து ஜீப் நிறுவனம் அதன் கார்களின் விலைகளை அதிகரிக்கலாம், ஆதலால் முடிந்தவரையில் இப்போதே உங்களுக்கு பிடித்தமான ஜீப் காரை வாங்கி போடுங்கள்.


Click it and Unblock the Notifications









