Jeep Meridianஇன் ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம்... சூரியனையும், சந்திரனையும் ஒரே நேரத்துல பாத்த மாதிரி இருக்கு!
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஜீப், இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக சில தனித்துவமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், அண்மையில் அதன் காம்பஸ் மற்றும் மெரிடியன் கார் மாடல்களின் ஆரம்ப விலையை அது பலமடங்கு குறைத்தது. எந்த நிறுவனமும் செய்ய தயங்கும் அமவுண்டை குறைத்து அது அனைவருக்கும் ஷாக் வைத்தியம் கொடுத்தது.
ரூ. 1 லட்சம் - ரூ. 2 லட்சம் வரை அது விலை குறைப்பை செய்தது. புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டிருந்த போதிலும் இந்த விலைக் குறைப்பை ஜீப் செய்திருக்கின்றது. நிறுவனத்தின் இந்த செயல் ஒட்டுமொத்த வாகன உலகிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

பெரும்பாலான நிறுவனங்கள் புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்6 கட்டம் 2-ஐக் காரணம் காட்டி விலை உயர்வைச் செய்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே விலையைக் குறைத்து ஜீப் அதிரடி காட்டியது. இதைத்தொடர்ந்து, தற்போது இந்தியர்களுக்கு கூடுதல் ட்ரீட் வழங்கும் விதமாக ஜீப் நிறுவனம் ஒரே நேரத்தில் ஜீப் மெரிடியனின் இரு ஸ்பெஷல் எடிசன்களை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.
மெரிடியன் அப்லேண்ட் மற்றும் மெரிடியன் எக்ஸ் ஆகிய இரு ஸ்பெஷல் எடிசன்களையே நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இந்த இரண்டும் வழக்கமான மெரிடியனைக் காட்டிலும் மிகவும் கவர்ச்சியான மற்றும் அதிக சிறப்பம்சங்களைக் கொண்டவையாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றின் இந்திய வருகையை முன்னிட்டு ஜீப் கார் விற்பனையாளர்கள் இரு சிறப்பு பதிப்புகளுக்குமான முன்பதிவுகளை ஏற்க தொடங்கி இருக்கின்றனர்.

அர்பன் மற்றும் ஆஃப்-ரோடு பயணங்களின்போது அட்வென்சரான ரைடிங் அனுபவத்தை இந்த சிறப்பு பதிப்புகள் வழங்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்புகளுடன் சேர்த்து இரு புதுமுக நிற தேர்வுகளையும் ஜீப் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. சில்வரி மூன் மற்றும் கேலக்ஸி ப்ளூ ஆகிய நிற தேர்வுகளையே அது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.
இந்த இரு புதிய நிறங்களும் நிச்சயம் கண்களைக் கவரக் கூடியதாக இருக்கும். இந்த தனித் தன்மையை மேலும் கூட்டும் விதமாக பாடி நிறத்தினாலான கூடுதல் அணிகலன்கள் இந்த சிறப்பு பதிப்புகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. பக்கவாட்டு மோல்டிங் மற்றும் படில் லேம்புகளே காரின் நிறத்திற்கு ஏற்ப வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதேபோல், இரு சிறப்பு பதிப்புகளின் உட்பக்கத்திலும் நவீன தொழில்நுட்ப வசதிகளும் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆம்பியன்ட் லைட், அதிக சொகுசான இருக்கைகள் என எக்கசக்க அம்சங்கள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. மெரிடியன் எக்ஸ் சிறப்பு பதிப்பைக் காட்டிலும் மெரிடியன் அப்லேண்ட் சற்று முரட்டுத் தனமான தோற்றம் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.
இந்த அமைப்பே மெரிடியன் எக்ஸ்-ஐ நிலவு போன்றும், மெரிடியன் அப்லேண்டை சூரியனைப் போன்றும் தென்பட செய்திருக்கின்றது. "எங்கு வேண்டுமானாலும் சென்று, என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" எனும் அணுகுமுறையின்கீழே மெரிடியன் அப்லேண்ட் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்காக பன்முக சிறப்பு வசதிகள் அதில் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
பயன்படுத்தக் கூடிய ரூஃப் கேரியர், பக்கவாட்டு பகுதியில் படி, ஸ்ப்ளாஷ் குவார்டுகள், பூட் ஆர்கனைசர், டயர் இன்ஃப்ளேட்டர், ஸ்பெஷல் கேபின், சன் ஷேடுகள் மற்றும் கார்கோ மேட்டுகள் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய சிறப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கார்களுக்கு ஜீப் நிறுவனம் ரூ. 33.41 லட்சம் - ரூ. 38,47 லட்சம் வரையிலான விலையை நிர்ணயம் செய்திருக்கின்றது
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மதிப்புகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சிறப்பு பதிப்புகளில் கூடுதல் சிறப்பு வசதிகளாக பனோரமிக் சன்ரூஃப், பின் இருக்கையாளர்களுக்கான ஒய்-ஃபை வசதிக் கொண்ட 11.6 அங்குல திரை, 4X4 டெரெயின் சிஸ்டம் மற்றும் யு-கன்னெக்ட் 5 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
எஞ்ஜினைப் பொருத்த வரை 2.0 லிட்டர் டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த சிறப்பு பதிப்புகளை மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைச் செய்ய இருப்பதாக ஜீப் நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
விலைக் குறைப்பை மட்டும் நிறுவனம் செய்யவில்லை. அது விலை உயர்வையும் குறிப்பிட்ட சில மாடல்களுக்கு செய்திருக்கின்றது. ரூ. 35 ஆயிரம் வரையே விலை உயர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே ஜீப் நிறுவனம் இரு சூப்பரான சிறப்பு பதிப்புகளை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









