எல்லாமே 2கோடி, 3கோடினு இருக்கு.. ஒன்னுகூட ஒரு கோடி ரூபாக்கு கீழ இல்லையா? கார்களுக்காக கோடிகளை இறைக்கும் நடிகர்

முன்னணி ஹாலிவுட் நடிகர்களில் ஜெரேமி ரென்னரும் ஒருவர் ஆவார். இவர் உலக புகழ்பெற்ற மார்வல் திரைப்படங்கள் பலவற்றில் நடித்திருக்கின்றார். ஹாவ்க்-ஐ இவரின் முக்கிய கதாபாத்திரம் ஆகும். சிறந்த நடிப்பிற்காக இரண்டு முறை அமெரிக்காவின் உயரிய விருதை வென்ற நடகராகவும் இவர் இருக்கின்றார். இவருக்கு நடிப்பின்மீது மட்டுமல்ல மற்றுமொரு விசயத்தின்மீதும் அதிகம் ஆர்வம் இருப்பதாக தற்போது தெரிய வந்திருக்கின்றது.

நடிகர் ஜெரேமி ரென்னர் வாகனங்கள் மீது தீராத காதல் கொண்டவராக இருக்கின்றார். இதற்காக அவரிடத்தில் எண்ணற்ற சொகுசு கார் மாடல்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆகையால், மற்ற நடிகர்களை போலவே இவரும் மிகப் பெரிய வாகன ஆர்வலர் தெரிய வந்திருக்கின்றது. மேலும், ஜெரேமி இடத்தில் பயன்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு காரும் பல கோடி ரூபாய் மதிப்பு கொண்டவையாக இருக்கின்றன.

ஜெரேமி

உதாரணமாக 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெராரி கலிஃபோர்னியா, 2 கோடி ரூபா மதிப்புள்ள மசராட்டி குவாட்ரோபோர்டே என எக்கசக்க ஆடம்பர கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன. இதுபோன்று இன்னும் பல மிக மிக விலையுயர்ந்த கார்களை அவர் பயன்படுத்தி வருகின்றார். அவை என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

போர்ஷே கர்ரேரா ஜிடி (Porsche Carrera GT)

போர்ஷே நிறுவனம் தயாரித்த மிகவும் அரிய வகை சூப்பர் கார் மாடல்களில் இந்த கர்ரேரா ஜிடி-யும் ஒன்று. இந்த காரையே தனக்கு சொந்தமானதாக வைத்திருக்கின்றார் ஜெரேமி ரென்னர். நவீன காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப மேம்படுத்தல்களுடன் விற்பனையில் இருக்கும் போர்ஷேவின் தயாரிப்பாகவும் இது இருக்கின்றது. இந் காரில் 3.6 லிட்டர் ஃப்ளாட்-6 மோட்டார் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 325 குதிரை திறனையும், 273 ஐபி-எஃப்டி டார்க்கையும் வெளியேற்றும். இந்த காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 284கிமீ ஆகும். மேலும், வெறும் 4.8 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தையும் இது எட்டும். இந்த திறன் கொண்ட காரையே நடிகர் ஜெரேமி பயன்படுத்தி வருகின்றார். இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும். இந்தியாவில் இந்த கார் விற்பனையில் இல்லை என்பது கவனிக்கத்தகுந்தது.

ஜெரேமி

பெராரி கலிஃபோர்னியா (Ferrari California)

உலகின் மிக மிக அதிக விலைக் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார்களில் ஃபெராரி கலிஃபோர்னியாவும் ஒன்று. மிகவும் ஃபன்னான டிரைவிங் அனுபவத்தை வழங்கும் காராகவும் இது இருக்கின்றது. இந்த அனுபவத்தை வழங்க 4.3 லிட்டர் நார்மல்லி அஸ்பைரேட்டட் மோட்டாரையே ஃபெராரி நிறுவனம் கலிஃபோர்னியாவில் பயன்படுத்தி இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 452 குதிரை திறனையும், 485 என்எம் டார்க்கையும் அது வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 310 கிமீ ஆகும். இதுமட்டுமில்லைங்க, வெறும் 3.6 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டி விடும். இதன் இந்திய விலை ரூ. 3.13 கோடிகள் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

மஸராட்டி குவாட்ரோபோர்டே (Maserati Quattroporte)

மஸராட்டி குவாட்ரோபோர்டே ஜெரேமி ரென்னர் இடம் மிகவும் விலையுயர்ந்த மற்றும் அழகிய கார் மாடல் ஆகும். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 1.71 கோடிகள் ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 2.12 கோடி வரை என்பது என்பது குறிப்பிடத்தகந்தது. மிகவும் பவர்ஃபுல்லான மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. 425 எச்பி பவரை வெளியேற்றும் வி8 மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தி இருக்காங்க.

டெஸ்லா மாடல் எஸ் (Tesla Model S)

உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் மாடல்களில் டெஸ்லா மாடல் எஸ்-ம் ஒன்று ஆகும். இந்த காரையும் ஹாலிவுட் நடிகர் பயன்படுத்தி வருகின்றார். அது அதிக திறனை வெளியேற்றக் கூடிய மின்சார காராகும். இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கும் இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து 765 குதிரை திறனை வெளியேற்றும்.

இதன் டாப் ஸ்பீடு 209 கிமீ ஆகும். மேலும், வெறும் 2.5 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து இந்த கார் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இதன் விலை ரூ. 1 கோடிக்கும் அதிகம் ஆகும். இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் இது விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகிவில்லை.

ஜெரேமி

ரேஞ்ஜ் ரோவர் எவோக் (Range Rover Evoque)

ரேஞ்ஜ்ரோவர் எவோக் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் திரை நட்சத்திரங்களின் பிரியமான சொகுசு காராக இருக்கின்றது. இந்த காரையே ஜெரேமி பயன்படுத்தி வருகின்றார். இந்த காரில் 2.0லிட்டர் டர்போசார்ஜட் 4சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது அதிகபட்சமாக 296 குதிரை-திறனை வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250கிமீ ஆகும். இதன் விலை ரூ.80 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இதுவே ஹாலிவுட் ஆக்டரித்தில் இருக்கும் குறைவான விலைக் கொண்ட கார் ஆகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ 13 (Mercedes-Benz W13)

ஜெரேமி ரென்னர் இடத்தில் இருக்கும் மிக மிக அழகான காராக மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ13 இருக்கின்றது. இந்த காரின் மதிப்பு ரூ.1.02 கோடி ஆகும். பென்ஸ் நிறுவனத்தின் மிக சிறந்த ஸ்போர்ட்ஸ் காராக இது இருக்கின்றது. இந்த காரில் 170 குதிரை திறனை வெளியேற்றக் கூடிய 6சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 321கிமீ ஆகும். இத்தகைய திறன்மிக்க காரையே நடிகர் தனக்கு சொந்தமாக வைத்திருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 8, 2023, 15:09 [IST]
English summary
Jeremy renner car collection
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+